கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் இந்த ஒரு விஷயத்தை மறக்காதீங்க!! கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் எல்லாமே காலி
விலை உயர்ந்த காராக இருப்பினும், போலியான ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்களை பொருத்தினால் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நம் இந்தியாவில் நடந்துள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விற்பனைக்கு வரும் ஒவ்வொரு காரும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கஸ்டமர்களின் கைகளுக்கு வந்து சேருகின்றன. காரின் என்ஜினில் இருந்து டயர்கள் வரையில் ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து, பார்த்து கார் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அவற்றை நாமாக நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் போது காரின் செயல்படுதிறன் குறைகிறது.

இது காரின் மைலேஜை குறைக்கலாம். காரின் மைலேஜ் குறைந்தால், பெரிய பிரச்சனை கிடையாது. அதுவே, கார் இயங்கி கொண்டிருக்கும் போது பிரச்சனையை உண்டாக்கி விட்டால் அது பெரிய விபத்தில் சென்று முடிவதற்கு கூட வாய்ப்புள்ளது. இதனால், நம் இந்தியாவில் வாகனங்களை கஸ்டமர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்து கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
காரின் நிறத்தை மட்டுமே கஸ்டமர்கள் மாற்றிக் கொள்ள முடியும். அதிலிலும், பிறரது மனதை புண்படுத்தும் வகையில் வாசகங்கள் இருக்க கூடாது. அதேபோல், வாகனங்களின் டயர்களை மாற்றிக் கொள்ள இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இங்கு ஒருவர் தனது விலையுயர்ந்த பெண்ட்லீ காரின் 4 சக்கரங்களையும் போலியான அலாய் சக்கரங்களாக மாற்றி கொண்டுள்ளார்.

காருக்கு கூடுதல் ஸ்டைலை வழங்கும் முயற்சியாக இந்த போலி அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், சக்கரங்கள் வலிமையானதாக இல்லாததால், கார் சென்றிருக்கும் போது நடுரோட்டில் உடைந்து தனியாக கழன்று விழுந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. நமக்கு கிடைத்துள்ள படங்களில், விபத்திற்குள்ளான பெண்ட்லீ காரில் 'DL' நம்பர் பிளேட் உள்ளதால், இது டெல்லி அல்லது அதனை சுற்றியுள்ள பகுதியில் நடந்திருக்கலாம்.
இந்த சம்பவத்தில் விபத்திற்குள்ளாகி இருப்பது மஞ்சள் நிறத்திலான பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி கார் ஆகும். இந்த கார் ஹைவேயில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, காரின் முன் இடதுப்பக்க சக்கரம் உடைந்து தனியாக கழன்று விழுந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகி உள்ள படங்களில் அந்த போலியான அலாய் சக்கரங்களை காணலாம்.

இந்த ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள் எந்த அளவிற்கு வலிமையற்றதாக உள்ளது என்பதை படங்களில் தெளிவாக காண முடிகிறது. எந்த அளவிற்கு என்றால், சக்கரத்தில் இருந்து ரிம் மட்டும் தனியாக வெளியே வந்துள்ளது. நல்லவேளையாக இந்த சம்பவத்தில் எவரொருவருக்கும் காயமில்லை. 4இல் 1 சக்கரம் மட்டுமே உடைந்ததால் கார் கண்ட்ரோலை இழக்கவில்லை.
இருப்பினும், இந்த பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காருக்கு அடிப்பகுதியில் சில உராய்வுகள் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். ஆடி எஸ்8 காருக்கு உண்டான அலாய் சக்கரங்களை போன்று டிசைன் செய்யப்பட்ட போலியான அலாய் சக்கரங்களை இந்த பெண்ட்லீ காரில் ஓனர் பொருத்தியுள்ளார். அதாவது, ஆடி எஸ்8 காரின் சக்கரங்கள் போன்று இருக்க வேண்டும், ஆனால் அதேநேரம் எடை குறைவானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான அலாய் சக்கரங்கள் இந்த பெண்ட்லீ காரில் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முறையான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப்பை அணுகாமல், நாமாக காரின் சக்கரங்களை மாற்றுவது மிகவும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், காருக்கும் சாலைக்கும் இடையில் பாலமாக இருப்பது சக்கரங்கள் ஆகும். இவை வலிமையானதாகவும், கார் நிறுவனம் பரிந்துரைத்த அழுத்தத்தில் காற்றுடன் இருப்பதும் அவசியமாகும். ஆதலால், ஒரு சக்கரம் உடைந்த காரணத்தினால், இந்த பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி காரின் மற்ற சக்கரங்களையும் மாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications









