ஏழை தம்பதியை பாத்ததும் 8 கோடி ரூபாய் காரின் உரிமையாளர் செய்த காரியம்! இவ்ளோ நாளா அவங்களை தப்பா நெனச்சுட்டோமே
மிகவும் விலை உயர்ந்த கார்களில் வருபவர்கள், முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள் என்பதுதான் பலரின் எண்ணமாக உள்ளது. அவர்களிடம் எப்போதும் தலைக்கணம் இருக்கும் எனவும், மற்றவர்களை எல்லாம் துளி கூட மதிக்கவே மாட்டார்கள் எனவும் பலர் நினைக்கின்றனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் எண்ணத்தை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள்.
தெலங்கானா (Telangana) மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு சம்பவம், இணையத்தில் பலரின் இதயங்களையும் வென்றுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சாலையை கடக்க முயற்சி செய்தனர். அவர்கள் கணவன்-மனைவி என கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) கார் ஒன்று வந்தது.

இது பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் ஆகும். எனவே இந்த காரை பார்த்ததும், அந்த தம்பதியினர் திகைத்து போயிருக்க கூடும். இதற்கிடையே காரை பார்த்த உடன் அவர்கள் சாலையை கடக்காமல் பின் வாங்கினர். அப்போது பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் டிரைவர் செய்த விஷயம்தான் ஹைலைட்டே!
இந்த சமயத்தில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தொடர்ந்து முன்னேறி சென்றிருக்கும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் நடந்ததோ வேறு. இந்த தம்பதியை பார்த்ததும், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டிரைவர், காரை நிறுத்தி விட்டார். அத்துடன் சாலையை கடந்து செல்லும்படி, அந்த தம்பதியிடம் சைகை காட்டினார்.

இதன்பேரில் அந்த தம்பதியினரும் சாலையை கடந்தனர். அதற்கு பிறகுதான், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வயதான தம்பதியினர் சாலையை கடப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் நிறுத்தப்பட்ட சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் டிரைவர் இருக்கையில் இருந்தது, அதன் உரிமையாளர்தான் என கூறப்படுகிறது. அவரது இந்த செயலுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் அனைவரும் இதேபோல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரின் ஆரம்ப விலை 5.23 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் என்பதால், இந்த பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி உரிமையாளர், ஒரு தொழில் அதிபராகவோ அல்லது திரைத்துறையை சேர்ந்தவராகவோ இருக்கலாம். அவரிடம் நிச்சயம் பணத்திற்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், சக மனிதர்களை சரிசமமாக மதிக்க வேண்டும் என்பதை இச்சம்பவத்தின் மூலம் அவர் அனைவருக்கும் உயர்த்தி விட்டார் என்பதே எங்கள் கருத்து.
நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார், தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானி (Anant Ambani) மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) போன்ற பிரபலங்களிடம் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








