அம்பானி குடும்பத்தில் திருமணம் - நிச்சயதார்த்த பரிசாகவே இவ்வளவு விலைமிக்க காரா... அப்போ திருமணத்திற்கு!!

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவ்வப்போது புதிய புதிய லக்சரி கார்களை வாங்குபவர் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த விஷயமே. இந்த வகையில் சமீபத்தில் விலையுயர்ந்த பெண்ட்லீ கார் ஒன்றை வாங்கியுள்ளார். யாருக்காக இந்த கார்? இந்த பெண்ட்லீ காரில் அப்படி என்னென்ன அம்சங்கள் உள்ளன? என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கேரேஜில் புதியதாக இணைந்து இருப்பது பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடிசி ஸ்பீடு கார் ஆகும். இதன் தற்போதைய விலை மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். மும்பை மாநகர சாலைகளில் சமீபத்தில் உலா வந்துள்ள இந்த லக்சரி காரில் பிரத்யேக '1' எண் உடன் விஐபி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

உமிழும் நெருப்பின் ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த கார் மும்பை போக்குவரத்து நெரிசலிலும் தனியாக தனித்து காட்சியளிக்கிறது. இந்த காரை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு நிச்சயதார்த்த பரிசாக வழங்கியுள்ளார். இருப்பினும், இந்த புதிய பெண்ட்லீ காரில் ஆனந்த் அம்பானி இன்னும் காட்சித்தரவில்லை. திருமணத்திற்கு பிறகு மனைவி உடன் காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் சூழ ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. அப்போதே இந்த பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடிசி ஸ்பீடு காரை மகனுக்கு பரிசாக முகேஷ் அம்பானி வழங்கிவிட்டார். அந்த சமயத்தில் கார் உட்புறம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த கார் முதல்முறையாக பொது சாலையில் காட்சி தந்துள்ளது. காண்டினெண்டல் ஜிடிசி ஸ்பீடு கார் ஆனது பெண்ட்லீயின் கன்வெர்டபிள் கிராண்ட் டூரர் கார் ஆகும். அதாவது இதன் மேற்கூரையை திறந்தும், மூடியும் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், இந்த கார் ஆனது வழக்கமான பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடிசி காரின் செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் வெர்சனாகும்.

நிச்சயதார்த்த பரிசாக இவ்வளவு விலைமிக்க பெண்ட்லீ காரா!!

இதுவரையில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக ஆற்றல்மிக்க பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடிசி காராக இது பார்க்கப்படுகிறது. இந்த காரில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 659 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், மேற்கூரையை திறந்து வைத்து கொண்டும் இந்த காரில் பயணிக்க முடியும். இந்த அம்சத்துடன், எலக்ட்ரானிக் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் தொழிற்நுட்பத்துடனும் இந்த பெண்ட்லீ கார் வழங்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பமானது என்ஜினின் டார்க் திறனை காரின் பின் சக்கரங்கள் இரண்டிற்கும் வெவ்வேறு விதமான அளவுகளில் வழங்கக்கூடியது.

இதனால் இந்த காரில் ஆக்ஸலேரேட்டரை மிதித்தப்படி வளைவுகளில் திரும்புவது எளிதாகிறது. உட்பக்கத்தில் டேஸ்போர்டில் டச் ஸ்க்ரீன் ஆனது அனலாக் டயல்களாகவும் செயல்படக்கூடியது. அத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 16-சேனல் பேங்க் & ஒலுஃப்சன் சிஸ்டமும் இந்த கார் கொண்டுள்ளது. இதில் ஆடியோ சிஸ்டத்தை 20-சேனல் நாய்ம் சிஸ்டத்திற்கும் அப்டேட் செய்து கொள்ளலாம்.

Article Published On: Tuesday, March 21, 2023, 13:55 [IST]
English summary
Bentley continental gtc speed gifted by mukesh ambani to anant ambani as engagement gift
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+