அதிகமா கேட்டிருந்தாலே 2,000ரூபாதான் செலவாயிருக்கும்! பென்ஸ் காரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த இந்தியர்!
சொகுசு கார் காதலர்களின் மனதை ரனமாக்கக் கூடிய ஓர் சம்பவம் பற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. அப்படி என்ன சம்பவம் அது? இந்த நிகழ்வு ஏன் ஆடம்பர கார் காதலர்களின் மனைத பாதித்து உள்ளது? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முகேஷ் அம்பானி முதல் திரைநட்சத்திரங்கள் வரை என பலரின் பிரியமான கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் (Mercedes Benz G-Wagen) இருக்கின்றது. இந்த காரின் விலை மிக மிக அதிகம் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.3 கோடி ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது இப்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் புதிய மாடலின் விலை ஆகும். அதேவேளையில், இதன் பழைய வெர்ஷன் ரூ. 2.55 கோடிக்கு விற்கப்பட்டு வந்தது. இத்தகைய மிக மிக உயரிய விலைக் கொண்ட காரையே அதன் உரிமையாளர் ஒருவர் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வர பயன்படுத்தி இருக்கின்றார்.
இதுகுறித்த வீடியோவே இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, சொகுசு கார் உரிமையாளர்களின் கண்களில் இந்த சம்பவம் ரத்த கண்ணீரையே வரவைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. சில நூறு ரூபாய்கள் அல்லது அதிகபட்சமாகவே ஓரிரு ஆயிரங்களைத் தந்தாலே லோடு வண்டியில் அனைத்து மூட்டைகளையும் எடுத்து வந்திருக்க முடியும்.

இப்படியாக சூழல் இருக்க மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் உரிமையாளரே கிட்டத்தட்ட பத்து சிமெண்ட் மூட்டைகள் இருக்கும், அத்தனையையும் அவர் அந்த காரில் ஏற்றி வந்திருக்கின்றார். இதனால்தான் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது என்பது பற்றிய துள்ளியமான தகவல் தெரியவில்லை.
இருப்பினும் பதிவெண்களை அடிப்படையாக வைத்து பார்க்கையில் ஹரியானா மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என யூகிக்க முடிகின்றது. இந்த வீடியோ ரஷ்ய யுட்யூபர் ஒருவரால் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அரிதும் அரிதாக வாகனம் சார்ந்து நடைபெறும் விநோத நிகழ்வுகளையே இந்த நபர் அதிகம் பகிர்வார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதனாலேயே, இவருடைய பகிர்வுகளுக்கு நல்ல ரீச் உண்டு. அந்தவகையிலேயே, இந்தியாவில் அரங்கேறிய இந்த நிகழ்குறித்த சம்பவத்தின் பதிவும் மிகப் பெரிய அளவில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும்.
ஆடம்பர வசதி, தாராளமான இட வசதி மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திற்கும் பெயர்போன சொகுசு கார் மாடலாக ஜி63 ஏஎம்ஜி காட்சியளிக்கின்றது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 480 லிட்டர் ஆகும். ஆகையால், அதிக அளவில் லக்கேஜ் மற்றும் பொருட்களை இந்த காரில் ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், இத்தனை சிமெண்ட்டுகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பது இப்போதே தெரிய வந்திருக்கின்றது.
மாருதி ஜிப்ஸியை போல முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக தயார் செய்யப்பட்ட ஓர் கார் மாடலே ஜி வேகன் ஆகும். இந்த காரையே பின் நாளில் அதிகம் பிரீமியம் வசதிக் கொண்ட காராக பென்ஸ் தயார்படுத்தியது. அதுவே தற்போது உலக பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாறி இருக்கின்றது. இந்த காரையே இந்தியர் லோடு வாகனமாக மாற்றி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பைக் காட்டிலும் இப்போது அதிகளவில் சொகுசு கார்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சென்ற 2023 ஆம் ஆண்டில் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த நிலையிலேயே, இந்தியர்களில் ஒரு சிலர் அவர்கள் வாங்கும் சொகுசு கார்களை என்ன மாதிரியான பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








