மழை வெள்ள நீரில் மாஸ் காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! பென்ஸ் காரையே பின்னாடி தள்ளிடுச்சே!

மழை நீர் சூழ்ந்த சாலையில் மெர்சிடீஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் சிக்கி இருக்கும்போது அதே பகுதியில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீரை கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இது குறித்த விரிவான தகவலை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீபத்தில் பைபர்ஜாய் என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டன. சாலை எங்கும் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. பல முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகனங்கள் வெள்ள நீரில் மிதந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

benz vs ola waterlogged road video

இப்படியாக வெள்ளநிர் சூழ்ந்த ஒரு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரல் வீடியோவாக பரபரப்பாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் மழை வெள்ளநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலையில் பல கார்கள் சென்று கொண்டிருகு்கிறது.

இந்த வெள்ள நீருக்குள் புகுந்து செல்ல முயன்ற மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் ஒன்று பாதி வெள்ள நீரில் அப்படியே நின்றுள்ளது. அனேகமாக இந்த காரில் ஹைட்ரோலாக் ஆகி இருக்கும் என தெரிகிறது. அடுத்ததாக இந்த வீடியோவில் பென்ஸ் கார் நடுவில் ஸ்டிரக் ஆகி நின்ற அதே பகுதியில் இருவர் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர்.

benz vs ola waterlogged road video

இந்த வீடியோவை பார்க்கும் போது பலரும் இந்த ஓலா ஸ்கூட்டரும் நடுவில் வந்து ஸ்டிரக் ஆகி நிற்கப் போகிறது என நினைத்தனர். ஆனால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் நிறைந்து இந்த சாலையை சுலபமாக கடந்து வந்தார்.

பெரும்பாலும் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் கொண்ட வாகனங்கள் தண்ணீர் நிறைந்த பகுதியில் செல்வது சற்று ஆபத்தான விஷயமாக இருக்கும். எக்ஸாஸ்ட் பைப், ஏர் இன் டேக் பகுதி ஆகிய இடங்களில் வழியாக தண்ணீர் இன்ஜினிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐபி 67 சான்று பெற்ற பேட்டரியை கொண்டதாகும்.

benz vs ola waterlogged road video

அதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நீரில் மூழ்கினாலும் பேட்டரி இருக்கும் பகுதிக்கு தண்ணீர் செல்லாது. இதனால் தண்ணீருக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செல்லும் போதும் தாராளமாக செயல்படும் அளவிற்கு திறன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் இருக்கிறது. ஜெர்மன் கார்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

இந்த கார்களில் உள்ள ஏர் இன்டேக் பகுதி சாலைக்கு மிக அருகில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீர் ஏர் இன்டேக் என்று பகுதி வழியாக இன்ஜினிற்கு சென்று ஹைட்ரோலாக் ஆக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில் எக்ஸாஸ்ட் பைப் என்ற ஒரு உதிரிபாகமே கிடையாது இதனால் ஸ்கூட்டருக்கு தண்ணீர் உள்ளே புகுந்து செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். இது மட்டுமல்ல ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பும் தண்ணீருக்குள் எந்த சிரமமும் இல்லாமல் ஸ்கூட்டர் பயணிக்கும் படியாக இருக்கிறது.

இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை பொருத்தவரை இப்படியாக மழை வெள்ள நீரில் பாதிக்கப்பட்டால் அதை ரிப்பேர் செய்வதற்கான செலவு அதிகமாக இருக்கும். குறிப்பாக மெக்கானிக்கல் மாற்றங்கள் மற்றும் இன்ஜின் எலெக்ட்ரிக்கல் பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படியான பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு குறைவுதான்.

அதே நேரம் ஹெவி கமர்சியல் வாகனங்களான பஸ் ட்ரக் ஆகியவை இப்படியாக மழை நீரில் செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இதற்கு முக்கியமான காரணம் இவையெல்லாம் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸில் இருப்பவை அதனால் அவ்வளவு உயரத்திற்கு மழை நீர் தேங்குவது என்பது அவ்வளவு எளிதில் நடக்காத விஷயம்.

அதே நேரத்தில் எலெக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி கார்களில் இப்படியாக தண்ணீர் தேங்கிய பகுதிகள் செல்வது மற்ற சில ஆபத்துகளை விளைவிக்கும். காரின் கதவு பகுதி வழியாக தண்ணீர் காருக்குள் ஏற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படி காருக்குள் தண்ணீர் ஏறினால் இது மற்ற பாகங்களை பாதிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேக் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர் இடம் வாங்காமல் இருந்தாலும் அது சரியான முறையில் சீர் செய்யப்படாமல் இருந்தாலும் தண்ணீர் பேட்டரிக்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் தண்ணீர் நிறைந்த சாலையில் வாகனங்களில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 24, 2023, 18:10 [IST]
English summary
Benz vs ola waterlogged road video gone viral on social media
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X