பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மின் வாகனத்தில் மக்கள் இனி தடையின்று பயணிக்க 100 இடங்களில் மின் வாகன சார்ஜ் நிலையங்கள் அமைக்கவுள்ளதாக பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை இன்று அந்நிறுவனம் வெளியிட்டது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாசிற்கு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டினை தவிர்க்க டெல்லி அரசு திண்டாடி வருகிறது. மேலும் பல நாகரங்களில் சுற்றுசூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பெட்ரோல், டீசல் கார்களை போல மின்சாரத்தில் இயங்கும் மின் கார்களை மற்றும் பைக்குகளை நடைமுறைக்கு கொண்டு வர அரசு மத்திய அரசு முடிவு செய்தது.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

இதையடுத்து அனைத்து மாநிலங்களில் மின் கார்கள் மற்றும் பைக்குகளின் விற்பனையை மக்களிடம் அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல கார் நிறுவங்களை மின் கார்கள் தயாரிக்க வலியுறுத்தியது. மேலும் மின் வாகனங்களுக்கு பல்வேறு சலுகையை அரசு வழங்கி வருகிறது.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

குறிப்பாக நேற்று கேரளா அரசு மின் கார்களுக்கு வாழ்நாள் வாகன பதிவு வசதியும், டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு 10 வருடங்களுக்கு மட்டும் வாகன பதிவு செல்லும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.இதுபோல பல்வேறு மாநிலங்களில் அரசு மின் பேருந்துகளை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் தற்போது பெட்ரோல் பைக்குகளுக்கு மத்திய அரசு பசுமை வரி என்னும் புதிய வரியை கொண்டுவரவுள்ளது. இதனால் மக்கள் பெட்ரோல் பைக்குகளில் இருந்து மின் பைக்குகளுக்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

இதுகுறித்து பெஸ்காம் துணை பொது மேலாளர் சி.கே.ஸ்ரீநாத் கூறியபோது ஒரே நேரத்தில் 4 வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் விதமாக பெங்களூரில் 100 இடங்களில் இ-சார்ஜ் நிலையங்கள் காட்டப்படுகிறது, முதலில் முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் இந்த ஏ-சார்ஜ் நிலையம் கட்டப்படும் என கூறினார்.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

இதில் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், ப்ரூத் பெங்களூரு மகாநகர பாலிகே, கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம், கர்நாடகா தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் மற்றும் பெஸ்கோம் அலுவலகங்கள் மற்றும் 11 பிஎம்டிசி போக்குவரத்து டிரான்சிட் மேலாண்மை மையங்களில் முதலில் இந்த மின் வாகன சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பின்னர் நகரத்தில் உள்ள முக்கிய டிராபிக் சிக்கனல்கள் அருகே அமைக்கப்டும் என்றும், சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டிற்கு 4.85 ரூபாய் கட்டம் நிர்யக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநாத் கூறினார்.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

மின் பைக்குகளுக்கான எ.சி சார்ஜ் நிலையங்கள் மிக குறைவான இடமே பிடிக்கும் என்பதால் ஒரு நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் செலவிலும், பைக் மற்றும் கார்களுக்கான டி.சி சார்ஜ் நிலையங்களுக்கு என ஒரு நிலையத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி கணக்கிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்ததார டெண்டர்களை வெளியிட்டுள்ளதாக பெஸ்காம் துணை பொது மேலாளர் சி.கே.ஸ்ரீநாத் கூறினார்.

பெங்களூரில் 100 இ-சார்ஜ் நிலையங்கள்: பெஸ்கோ நிறுவனம் அதிரடி முடிவு...!!

பெஸ்காம் நிறுவனம் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு கே.ஆர் வட்டத்தில் உள்ள தனது கார்ப்பரேட் அலுவலகத்தில் தனது முதல் மின் வாகன சார்ஜ் நிலையத்தை திறந்தது, அதன் பின் கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகம், வித்யா சவுதா மற்றும் விகாசா சௌதா.ஆகிய இடங்களில் இ-சார்ஜ் மையங்களை திறந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Bescom Release Tenders for E-vehicle Charging Stations: Read in Tamil
Story first published: Friday, January 25, 2019, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X