கார் பிரியர்களின் தாகத்தை தணிய வைக்கும் கார் எஞ்சின் காபி மேஜைகள்!
கார் பிரியர்களின் இல்லங்களில் கார்களின் உதிரிபாகங்களில் செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், ஸ்கேல் மாடல் கார்கள் மற்றும் இதர பொருட்களால் நிரம்பி வழியும். சிலர் தங்கள் வீட்டையும், காரையும் பல வித்தியாசமான கார் உதிரிபாகங்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களால் அலங்கரிப்பதும் வழக்கம்.
அந்த வகையில், கார் பிரியர்களால் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்ட அழகழகான கார் எஞ்சின் கண்ணாடி காபி மேஜைகளை ஸ்லைடரில் காணலாம். மேலும், ஆன்லைன் வியாபார இணையதளங்களிலும் இந்த கார் எஞ்சின் காபி மேஜைகளின் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

எஞ்சின் பாகங்கள்
எஞ்சினை மட்டுமின்றி, எஞ்சினிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உதிரிபாகங்களிலும் காபி மேஜைகள் செய்து கொடுக்கின்றனர்.

பெஸ்ட் எது?
கிறைஸ்லர் ஹெமி, மஸராட்டி, ஃபெராரி, ஃபோக்ஸ்வேகன் ஆகிய பிராண்டுகளின் கார் எஞ்சின்கள் சிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வி மற்றும் டபிள்யூ வரிசையில் வெளியிடப்படும் எஞ்சின்களும் சிறந்ததாக கூறப்படுகிறது.

விலை
185 அமெரிக்க டாலர் முதல் 5,000 அமெரிக்க டாலர் வரையிலான விலையில் இந்த கார் எஞ்சின் காபி மேஜைகள் கிடைக்கின்றன.

லம்போர்கினி எஞ்சின் காபி டேபிள்.

ஹோண்டா வி8 எஞ்சின் காபி டேபிள்!

ஜாகுவார் எஞ்சின் காபி டேபிள்
ஜாகுவார் எஞ்சின் காபி டேபிள்.

ஃபோக்ஸ்வேகன் எஞ்சின் காபி டேபிள். இன்னும் சில அழகான காபி டேபிள்களைை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பல நிறுவனங்கள் ஆர்டரின்பேரில் இந்த காபி டேபிள்களை உங்களுக்கு பிடித்தமான விதத்தில் பெயிண்ட் செய்து அட்டகாசமாக செய்து கொடுக்கின்றனர்.

ஃபெராரி நிறுவனத்தின் கார் எஞ்சினில் வடிவமைக்கப்படும் கார் எஞ்சின் காபி டேபிளுக்கு உலக அளவில் அதிக மவுசு இருக்கிறது.

விரும்பிய வண்ணம் பெயிண்ட் செய்து தருவதற்கு தகுந்தாற்போல் கட்டணம் அதிகரிக்கிறது.

இ-பே உள்ளிட்ட பல ஆன்லைன் வியாபார இணையதளங்களில் கார் எஞ்சின் காபி டேபிள்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








