இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

By Balasubramanian

கோடை விடுமுறை நெருங்குகிறது, வீட்டில் நீச்சயம் விடுமுறைகளை கழிக்க டிரிப் ஒன்றை நீச்சயம் பிளான் செய்து வருவீர்கள் உங்களுக்காக உதவே இந்த செய்தி சென்னையில் இருந்து எங்கெங்கு டூர் செல்லலாம் என்று கூறுகிறது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

நமக்கு பிடித்த இடத்திற்கு நமக்கு பிடித்த வாகனத்தில் பயணம் செய்வது என்றாலே சந்தோஷமான விஷயம் தான். நம்மில் பலர் காரணமே இல்லாமல் கூட பயணம் செய்துள்ளோம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இரவு தூக்கம் வரவில்லை என்றால் கூட பைக்கை எடுத்துக்கொண்டு சில கி.மீ. தூரம் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வரும் பழக்கம் பலருக்கு இருக்கிறது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

பைக்/ காரில் செல்லும் போது வரும் எதிர்காற்று மாற்றிக்கொண்டே வரும் லோக்கேஷன், பயணங்களில் போது நாம் சந்திக்கும் மாறுபட்ட மனிதர்கள். இப்படி பயணங்களில் உள்ள சுவாரஷ்யங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இவ்வாறு பயணங்கள் மீது காதல் கொண்ட நீங்கள் சென்னைவாசியா? உங்களுக்காக எங்கு சென்னையில் இருந்து எங்கெங்ல்லாம் பயணம் செய்யலாம் அது எவ்வாறு இருக்கும் என்பதற்கான டிப்ஸ்களை தான் கீழே பார்க்க போகிறோம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

மகாபலிபுரம்

சென்னைவாசிகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் ட்ரிப் செல்லும் இடம் தான் மகாபலிபுரம், இங்கு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில், பாறைகளிலே செதுக்கப்பட்ட கோவில்கள், மண்டபங்கள் என இங்கு பல இருக்கிறது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இங்குள்ள கடற்கரை சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருக்கும். ஜோடியாக டிரிப் வருபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். சென்னையில் இருந்து கொண்டு இங்கு நீங்கள் சென்றதில்லை என்றால் நிச்சயம் இந்த வார இறுதியிலேயே டிரிப் செல்வதற்காக ஏற்பாடுகளை துவங்குங்கள்

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

புதுச்சேரி

இது சென்னையில் இருந்து சுமார் 200 கி.மீ., தூரம் உள்ள பகுதி, இது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேஷங்களில் ஒன்று, இங்குள்ள அழகிய கடற்கரை, இங்கு செல்வதற்கான சென்னை- ஈசிஆர் ரோடு, புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலை என பயண பிரியர்களுக்க ஏற்ற இடம் புதுச்சேரியில் நீங்கள் சென்று ஓய்வெடுக்க பல தனியார் விடுதிகளும் இருக்கின்றன.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இந்த இடம் சுதந்திரத்திற்கு முன்பு பிரஞ்சுகாரர்கள் பிடியில் இருந்ததால் அவர்களின் கட்டிட கலை அமைப்புகள் இன்றும் அங்கிருக்கிறது. புதுச்சேரிக்கு செல்லும் ரோடுகளில் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகம் கவனமாக பயணத்தை மேற்கொள்ளுங்கள், நீங்களும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

ஏலகிரி

இது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஒரு சீர்தோஷனநிலை. அதில் ஆச்சரிப்படவேண்டிய விஷயமே இது வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது தான். வேலூர் மாவட்டம் வெயில் அதிகமாக உள்ள இடமாக இருக்கும் போது இங்கு ஏலகிரி மாதிரியான இடம் அதிசயம் தான்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இது சென்னையில் இருந்து சுமார் 230 கி.மீ. தூரம் இருக்கிறது. வார இறுதி நாட்களில் இங்கு ஒரு டிரிப் சென்று வந்தால் மனதிற்கும், சிந்தனைக்கும் சற்று ஓய்வு கிடைக்கும், முடிந்தால் இந்த இடத்திற்கு பைக்கில் செல்லுங்கள் நிச்சயமாக அதை வித்தியாசமான அனுபவமாக உணருவீர்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

ராமேஸ்வரம்

இது இந்திய அளவில் பிரபலமான ஒரு இடம். ராமாயணத்தில் ராமன் சீதையை மீட்க இங்கிருந்து தான் இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் நாம் பார்க்க வேண்டிய அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. முக்கியமாக பாம்பன் பாலம், இது ராமேஸ்வரம் என்ற தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் பாலமாக இருக்கிறது. ரோடு மற்றும் ரயில்வே பாலங்கள் இங்கிருக்கின்றன.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இதில் ரயில்வே பாலம் கப்பல் வரும் நாட்களில் இரண்டாக தூக்கி கப்பலுக்கு வழிவிடும். தொடர்ந்து புயலில் அழிந்து போன தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடற்கரை என பல நீங்கள் பார்க்கலாம். முடிந்தால் அங்கு படகு வைத்திருப்பவரிடம் காசு கொடுத்து கடலில் சிறிது தூரம் சென்று வாருங்கள் வித்தியாசனமான பயணமாக இருக்கும், விடுமுறை நாட்களில் இங்கு பயணம் செய்ய ஏற்ற இடம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

கன்னியாகுமரி

இது இந்தியாவின் தென்கோடி பகுதியாகும். இது சென்னையில்இருந்து சுமார் 700 கீ.மீ. தொலைவில் உள்ளது. அதனால் நீங்கள் விடுமுறை காலங்களில் இந்த பகுதிக்கு டிரிப் செல்ல திட்டமிடலாம். இந்த பகுதியில் காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம், கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளூவர் சிலை என பல இடங்கள் இருக்கிறது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இந்த இடத்திற்கு டிரிப் சென்றால் மறக்காமல் அருகில் உள்ள திருவட்டாறு, திற்பரப்பு ஆகிய இடங்களுக்கு செல்ல மறக்காதீர்கள், அதிக தூரம் பயணத்தை விரும்புபவர்களுக்கு இந்த டிரிப் தான் சரியான சாய்ஸ், இந்த பகுதியில் ரோடுள் மோசமாக இருப்பதால்கள் கார் பைக்கில் அவசர கால தேவைகள் இருக்கிறதா என்ற நிச்சயம் செக் செய்து கொள்ளுங்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

மூணார்

இது கேரள மாநிலத்தில் உள்ள பகுதி அடர்ந்த வனக்பகுதிகளுக்கு இடையே இந்த பகுதிய அமைந்துள்ளது. த்ரிலாக ட்ரிப் செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த இடம் நல்ல சாய்ஸ், நீங்கள் செல்லும் வழியில் யானைகள், காட்டு விலங்களை பார்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

இங்கு செல்ல தேனி, உடுமலைபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ரூட் இருக்கிறது. கரடு முரடான, இக்கட்டனா, குறுகிய ரோடுகளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் உடுமலையில் இருந்து செல்லும் ரோட்டை தேர்தெடுங்கள், முக்கியமானக இந்த ரோட்டில் நல்ல பயற்சி பெற்ற டிரைவர்களால் மட்டுமே செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அறைகுறை டிரைவிங்கில் சென்று ஆபத்தில சிக்க வேண்டாம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

வேலூர்

இது சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஊர் தான் இந்த ஊரில் முக்கியமான வேலூர் கோட்டை, மற்றும் ஸ்ரீபுரம் எனும் இடத்தில் தங்க கோயில் ஆகியன உள்ளது. ஒரு வார இறுதி நாளில் ஆன்மீக பயணம் செய்ய விரும்பினால் இங்கு செல்லுங்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

நெல்லூர்

இது ஆந்திர மாநிலத்தில் உள்ள பகுதி ஆனால் சென்னையில் இருந்து 177 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. இந்த பகுதி மெளரிய பேரரசர்களால் உருவாக்கப்பட்டது. இந்த பகுதிக்குள் நீங்கள் செல்லும் போதே அதற்கான சுவடிகளை உணருவீர்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

பெங்களூரு, மைசூரு

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு சென்னையை விட சற்று பரபரப்பான நகரம் தான், இது சுமார் 357 கி.மீ., தொலைவில் உள்ளது. நீண்ட தூர பயணம் செல்ல விரும்புபவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுக்கலாம். இங்குள்ள நந்தி மலை, பெங்களூருவில் உள்ள சில பார்க்குகள், என நீங்கள் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

மைசூரு, இது பெங்களூருவில் இருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் தான் இருக்கிறது. இங்கு அரண்மனைகள், பழங்காலகட்டிடங்கள் என கட்டிடகலைக்கு என பெயர் பெற்ற ஊர், இந்த இரண்டு இடங்களுக்கும் விடுமுறை காலங்களில் ஒரே டிரிப்பாக சென்று வரலாம். இந்த பகுதிகளில் நல்ல ரோடு இருப்பதால் சிறந்த பயண அனுபவம் கிடைக்கும், விரைவில் சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் ஹைவே வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

கொடைக்கானல்

இது சென்னையில் இருந்து 518 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பகுதி இங்கு மலைகள் வழியாக பயணம் செய்ய விரும்பினால் இந்த பாதையை தேர்த்தெடுத்து கொள்ளலாம். இங்கு சென்ற கொடைக்கானல் உள்ளேயே நாம் ஒரு குட்டி டூர் போகும் அளவிற்கு அங்கு நிறைய இடங்கள் இருக்கிறது. விடுமுறை காலங்களில் இந்த டிரிப்பை தாராளமாக திட்டமிடலாம்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

ஊட்டி

இதுவும் கொடைக்கானல் போன்ற ஒரு பகுதிய தான். இது சென்னையில் இருந்து 547 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு உயர்ந்த மரங்கள், ஏரி, இங்குள்ள வித்தயாசமான உணவுகள் என நீங்கள் பயணத்தை வித விதமாக அனுபவிக்கும் வாய்பு இங்கு கிடைக்கும், சிலர் இன்னும் ஒரு படி மேல சென்று இங்குள்ள மலைவாழ் மக்கள்களை சந்தித்து வருகின்றனர். முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

நாகர்ஹோல்

இது கர்நாடகா மாநிலம் குடகு மாவடத்தில் உள்ளது. இதில் நாம் ரோடு வழியாக பயணம் செய்ய வேண்டும் இந்த பகுதி பயணம் என்பது த்ரில் பயணமாக இருக்கும்.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

நீங்கள் செல்லும் பாதையில் புலிகள், யானைகள், மான்கள் என நீங்கள் மிருங்களை பார்ப்பதற்கு நிரைய வாய்ப்புகள் உள்ளது.

 இந்த கோடை விடுமுறைக்கு எங்கு டூர் போகலாம்? இங்கிருக்கிறது உங்களுக்கான டிரிப் பிளான்

கபினி

இது காவிரிக்கு முக்கிய நீர் ஆதாரம் தரும் அணையாக இருக்கிறது. இது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் பிரம்மாண்டம், அதன் அழகு, அணை அமைந்து சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காவே இந்த இடத்திற்கு டிரிப் செல்லலாம்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
BEST ROAD TRIPS FROM CHENNAI.Read in Tamil
Story first published: Thursday, April 5, 2018, 11:57 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more