நிறைய பேர் இதை சொல்ல மாட்டாங்க - விமானத்தில் பயணம் செய்யும்போது இருக்கையை இந்த இடத்தில் புக் செய்ய பாருங்க!!
மனிதன் முதன்முதலாக சக்கரங்களை கண்டுப்பிடித்த காலத்தில் இருந்து போக்குவரத்தில் இன்று நாம் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. சாலை, தண்டவாளம், நீர், ஆகாயம் என மனிதனின் போக்குவரத்து நுழையாத இடமே கிடையாது என்கிற அளவிற்கு மாறிவிட்டது. ஆனால் அதற்கேற்ப, வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலிலும் நம் இந்திய போக்குவரத்து துறையை பற்றி சொல்லவே வேண்டாம். அத்தகைய கூட்ட நெரிசலுக்கு மத்தியில், வாகனங்களில் சிறந்த இருக்கையை தேர்வு செய்வது எவ்வாறு? ஒவ்வொரு வாகனத்திலும் எல்லாவற்றிற்கும் சவுகரியமான இருக்கையை அடையாளம் காண்பது எவ்வாறு? என்பதை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
கார்: கார் இல்லாத வீடே கிடையாது என்கிற அளவிற்கு பெரும்பாலான மக்களுக்கு கார் அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. காரை நீங்கள் தான் ஓட்டுகிறீர்கள் எனில், இருக்கையில் நன்கு சவுகரியமாக அமர்ந்துக் கொண்டு, பிரேக் & ஆக்ஸலரேட்டர் பெடல்களில் உங்களது கால்கள் போதிய இடைவெளியில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். சாலையை முழுமையாக பார்க்கும் வகையில் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளவும். அதுவே, நீங்கள் கார் ஓட்டவில்லை எனில், டிரைவருக்கு பின்னால் இருக்கும் இருக்கை அமர்வதற்கு சிறந்தது.

மினி பேருந்து: நம் தமிழ்நாட்டில் மினி பேருந்துகள் அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. மினி பேருந்துகள் அளவில் சிறியதாக இருப்பதால், சடர்ன் பிரேக்குகள் மிகவும் வலுவானதாக இருக்கும். ஆதலால், முடிந்தவரையில் பேருந்திற்கு சரியாக மத்தியில் அமர பாருங்கள். டிரைவருக்கு பின்னால் இருக்கும் முதல் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர வேண்டாம்.
பேருந்து: மினி பேருந்துகளை விட சாதாரண பேருந்துகள் பரவலாக அனைத்து இடங்களிலும் உள்ளன. மலிவான போக்குவரத்து முறையாக இருப்பதால், பேருந்தை மக்கள் நிறைய பேர் விரும்பி பயன்படுத்துகின்றனர். மினி பேருந்தை போன்று வழக்கமான பேருந்துகளிலும் சரியாக மத்தியில் அமர்வது சிறந்தது. பேருந்தின் இடதுப்பக்க இருக்கை வரிசையில் அமர்ந்தால் விபத்தின்போது பெரிய பாதிப்பு ஏற்படாது. அரசு பேருந்துகளில் இடது வரிசை இருக்கைகள் மகளீருக்காக ஒதுக்கப்படுகின்றன.

ட்ராலி பேருந்து: லோக்கல் எலக்ட்ரிக் இரயிலை போன்று செயல்படக்கூடியது ட்ரோலி பேருந்து ஆகும். சென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டுமே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. சாதாரண பேருந்துகளை போன்று ட்ராலி பேருந்துகளிலும் இடதுப்பக்க இருக்கையில் அமர்வது மோதலின் போது உங்களது பாதுகாக்கும். ஏனெனில், நம் இந்தியாவில் இடது-கை-டிரைவ் முறை பின்பற்றப்படுகிறது.
இரயில்: பேருந்து பயணங்களை போல் இல்லாமல், இரயில் பயணங்களில் பெரியதாக உடல் சோர்வு இருக்காது. இதனாலேயே, இரயில் இயங்கும் திசைக்கு எதிர்திசையிலும் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய இருக்கைகளை முடிந்தவரையில் தவிர்த்து, இரயில் இயங்கும் திசைக்கு நேர் திசையில் உள்ள இருக்கைகளை அமர பாருங்கள். இரயிலின் நடு பெட்டியில் அமரும்போது குலுக்கல்கள் அதிகமாக இருக்காது.

விமானம்: பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருப்பினும், மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பானது ஆகும். விமானங்களில் பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் எக்கனாமி கிளாஸ் என இரண்டு வகுப்புகள் இருக்கும். இதில் விலை குறைவான டிக்கெட் கட்டணத்தை கொண்ட எக்கனாமி கிளாஸ் ஆனது விமானத்தின் பின்பக்கத்தில் வழங்கப்படுகிறது. உண்மையில், விமானத்தின் பின் இறக்கை பகுதிக்கு அருகே அமர்ந்து பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது ஆகும்.
கப்பல்: பெரிய கப்பலாக இருப்பினும், கடலில் மிதந்தப்படி பயணம் செய்வது புதியவர்களுக்கு பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்தும். சிலருக்கு கப்பலில் பயணம் செய்யும்போது வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்படுவதை பார்த்திருப்பீர்கள். கப்பல்களில் கீழ்பகுதி அறைகளில் பயணம் செய்வது குலுக்கல்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். சிறிய ரக கப்பல் எனில், கப்பலின் மத்தியில் வழங்கப்படும் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை தவிர்த்து, இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள மற்ற வாகனங்களில் தங்களுக்கு பிடித்தமான இருக்கைகளை பெறுவது சற்று சிரமமானதே. இருப்பினும், இப்போதுதான் ஆன்லைன் புக்கிங் போன்ற வசதிகள் வந்துவிட்டதால், இங்கு கூறப்பட்டுள்ளதன்படி இருக்கைகளை தேர்வு செய்வது சவுகரியத்தை வழங்குவது மட்டுமின்றி, பயணிகளுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications









