உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

உல்லாச கப்பலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு சிறந்த வழிகள் என்ன? அவற்றின் மூலம் பணத்தையும், நேரத்தையும் எவ்வாறு மிச்சப்படுத்தலாம் என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

உல்லாச கப்பலில் பயணம் நம்மில் பலருக்கு வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால் அத்தகைய சொகுசு கப்பலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை பெறுவது எவ்வாறு?, டிக்கெட்டை பணம் மிச்சப்படுத்தி பெறுவது எப்படி? என்ற கேள்வி எல்லாரிடமும் நிச்சயம் இருக்கும்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

உல்லாச கப்பல் பயணத்திற்கான டிக்கெட்டை வாங்குவதற்கு சில நாட்கள் அலைய வேண்டியிருக்கும் என்று கூட சிலர் நினைத்து கொண்டிருப்பீர்கள். அத்தகையவர்களுக்கு, ஒவ்வொரு தலைப்பிலும் இனி நாம் பார்க்க போகின்ற விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த தலைப்புகள் எந்தவொரு வரிசைப்படியும் வரிசைப்படுத்தப்படவில்லை.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

ஆன்லைன் பயண இணையத்தளங்கள்

உல்லாச கப்பல் பயணத்திற்கு ஏகப்பட்ட ஆன்லைன் பயண இணையத்தள பக்கங்கள் உள்ளன. இவை பல்வேறுப்பட்ட நிறுவனங்களின் உல்லாச கப்பல்களை ஒரே இணைய பக்கங்களில் ஒருங்கிணைத்தவாறு உள்ளன. இவை விடுமுறை நாட்களிலும், முக்கியமான விழா நாட்களிலும் சில சலுகைகளுடன் முன்பதிவுகளை ஏற்கின்றன. ஆதலால் இவற்றின் வாயிலாக டிக்கெட் புக் செய்வதன் மூலமாக சில ஆயிரங்களை சேமிக்க வாய்ப்புள்ளது.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

நேரடியாக உல்லாச கப்பல் நிறுவனத்தின் முலமாக

சொகுசு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களையும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்காகவே அத்தகையவர்களில் பலர் சொந்தமாக ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களையே நீங்கள் உங்களது தனிப்பட்ட சுற்றுலா திட்டமிடுபவராக மாற்றி கொள்வதால் பயணத்தின்போது உங்களுக்கு விஐபி போன்ற அந்தஸ்து கிடைக்கும். ஆனால் இதற்கேற்ப நீங்கள் சற்று பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கும்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

நீங்களாக முன்பதிவு செய்தல்

யாருடைய உதவியும், ஆலோசனையும் தேவையில்லை, தனக்கே உல்லாச கப்பல்களை பற்றி ஓரளவிற்கு விஷயங்கள் தெரியும் என இருப்போர் நேரடியாக கப்பல் நிறுவனத்தின் வெப்சைட் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் பயண இணையத்தளங்கள் மூலமாகவோ தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அப்போதே பயணத்தின்போது தங்களது விருப்பங்களையும் சம்மந்தப்பட்ட சொகுசு கப்பல் நிறுவனத்திடம் தெரிவித்து கொள்ளலாம்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

உள்ளூர் டிராவல் ஏஜெண்ட் வாயிலாக

ஏற்கனவே உல்லாச கப்பல்களில் பயணம் செய்தோரிடம் கேட்டீர்கள் எனில் அவர்கள் கூறும் வழி இது. ஏனெனில் ஓர் டிராவல் ஏஜெண்ட் பலத்தரப்பட்ட உல்லாச கப்பல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி இருப்பார். ஆதலால் அவரிடம் இருந்து எந்த நேரத்திலும் எந்தவொரு ஆலோசனைகளையும் பெற முடியும். ஆனால் இந்த வழியில் உள்ள ஒரே குறை என்னவென்றால், பயணத்தின்போது நீங்கள் நேரடியாக கப்பல் நிறுவனத்துடன் கலந்துரையாட முடியாது. எதற்கெடுத்தாலும் உங்களது ஏஜெண்டை தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

சுற்றுலா குழுக்கள்

இந்தியாவில் பெரியதாக பிரபலமில்லை என்றாலும், பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுலா குழுக்கள் பிரபலமாகி வருகின்றன. இத்தகைய குழுக்களில் சேருவதன் மூலன் பெரும் தொகையை உல்லாச கப்பல் பயணத்தில் சேமிக்க முடியும். இவ்வளவு ஏன், சில நாடுகளில் சில சுற்றுலா குழுக்கள் தங்களது உறுப்பினர்களை இலவசமாகவும் அழைத்து செல்கின்றன. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், ஏமாற்றாத சரியான குழுவை பார்த்து சேருவதுதான்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

பணிப்புரியும் அலுவலகம் வாயிலாக

நீங்கள் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணிப்புரிகிறீர்கள் என்றால், உங்களது அலுவலத்தில் சுற்றுலாக்களுக்கும் பணம் சேமிக்கும் வசதியை வழங்கி வருவார்கள். அதிலிலும், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் என்றால் நிச்சயமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வழியில் உல்லாச கப்பல் டிக்கெட்டை புக் செய்வதன் மூலம் சில ஆயிரங்களை சேமிக்கலாம். ஆதலால் டிக்கெட் முன்பதிவு செய்யும்முன் அலுவலத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

உல்லாச கப்பல் டிக்கெட் புக் செய்வதில் இவ்ளோ விஷயம் இருக்கா!! எதுவும் தெரியாம போய் மாட்டிக்காதீங்க!

இவைதான் உல்லாச கப்பல் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான வழிகள் ஆகும். இவற்றில் உங்களுக்கு ஏற்ற வழியில் உல்லாச கப்பல் பயணத்திற்கான டிக்கெட்களை புக் செய்து கொள்ளுங்கள். எங்களை கேட்டால், தனியாகவோ அல்லது ஜோடியாகவோ பயணிக்கிறீர்கள் எனில் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஆனால் குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் எனில் அருகில் உள்ள டிராவல் ஏஜெண்ட்டை அணுகுவது சிறந்தது. ஏனெனில் குடும்பமாக அதிக பேர் பயணிக்கும்போது எந்த தேவை எப்போது ஏற்படும் என்றே கூற இயலாது.

Article Published On: Monday, August 1, 2022, 17:06 [IST]
English summary
Best ways to book cruises helpful guide
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+