துபாய்க்கு உல்லாச கப்பல் விட போறாங்க! டிக்கெட் கட்டணம் இவ்ளோதானா! இனி விமானத்தை யாரும் சீண்ட கூட மாட்டாங்க!

பேப்பூர்-கொச்சி-துபாய் உல்லாச கப்பல் சேவைக்கு (Beypore-Kochi-Dubai Cruise Service), கேரள அரசு தற்போது பச்சை கொடி காட்டியுள்ளது. கேரள அரசின் அனுமதியை தொடர்ந்து, பேப்பூர்-கொச்சி-துபாய் உல்லாச கப்பல் சேவை வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்தியாவில் இருந்து துபாய் செல்பவர்களுக்கும், இந்த உல்லாச கப்பல் சேவை பெரிதும் பயன் அளிக்கும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. விமான டிக்கெட் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, இந்த உல்லாச கப்பல் சேவைக்கான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதுதான்.

Cruise Ship

விமான டிக்கெட் கட்டணத்தில் பாதிதான், இந்த உல்லாச கப்பலின் டிக்கெட் கட்டணமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு விமான டிக்கெட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றால், இந்த உல்லாச கப்பலின் டிக்கெட் கட்டணம் வெறும் 7,500 ரூபாயாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குறைவான கட்டணத்தில், துபாய் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த உல்லாச கப்பல் சேவை பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டிக்கெட் கட்டணம் குறைவு என்பதுடன், விமானங்களை விட 3 மடங்கு அதிக லக்கேஜை இந்த உல்லாச கப்பலில் கொண்டு செல்ல முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cruise Ships

இந்த உல்லாச கப்பலில் ஒரே நேரத்தில் சுமார் 1,250 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உல்லாச கப்பலில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். எனவே பயணிகள் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான கடல் பயணத்தை 'என்ஜாய்' செய்ய முடியும்.

இந்தியாவில் இருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து, துபாய் உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நிறைய பேர் சென்று வருகின்றனர். ஆனால் விமான டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பது, அவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதை மனதில் வைத்துதான், இந்த உல்லாச கப்பல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சாதாரண பயணிகளுக்கு மட்டுமல்லாது, உல்லாச கப்பல்களில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ள சுற்றுலா பயணிகளுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும். கூடிய விரைவில் இந்த உல்லாச கப்பல் சேவை தொடங்கப்படலாம் என்றாலும், இன்னும் அதிகாரப்பூர்வமான அறிமுக தேதி வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்தாலும் கூட, இந்த உல்லாச கப்பல் துபாய் சென்றடைய சுமாராக 3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவசரமாக பயணம் செய்பவர்களுக்கு இந்த உல்லாச கப்பல் ஏற்றதாக இருக்காது. பொறுமையாக கடலில் அழகை ரசித்து கொண்டே செல்பவர்களுக்கு மட்டுமே இது ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 18:59 [IST]
English summary
Beypore kochi dubai cruise service starting soon all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+