ஒரே நேரத்தில் 6 பேர் பறக்கலாம்... றெக்கை கொண்ட கார்! சென்னைவாசிகள் நம்பி ஏமாற வேண்டாம்
சர்ளா அவியேஷன் (Sarla Aviation), பெங்களூரு (Bengaluru)-ஐ சேர்ந்த ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் (Aerospace Start-up) நிறுவனம். டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) சுன்யா (Shunya) என்கிற பெயரில் புதிய ஏர் டாக்ஸி மாதிரி ((Air Taxi Prototype)-ஐ வெளியீடு செய்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஏர் டாக்ஸி மாதிரியை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்றுவரும் இந்த மோட்டார் கண்காட்சியில் வழக்கமான வாகனங்களில் இருந்து பறக்கும் வாகனங்கள் வரையில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், பெங்களூருவின் இந்திரா நகரில் செயல்படும் சர்ளா அவியேஷன் நிறுவனம் சுன்யா என்கிற பெயரில் ஏர் டாக்ஸி மாதிரியை வெளியீடு செய்துள்ளது.

உலகளவில் ஏர் டாக்ஸிகள் பல்வேறு விதமான நிறுவனங்களால் பல பகுதிகளில் செயல்பட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் பல நிறுவனங்கள் ஏர் டாக்ஸியை வடிவமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இதற்காகவே பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவ்வாறான ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான், சர்ளா அவியேஷன் ஆகும்.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள சர்ளா அவியேஷனின் சுன்யா ஏர் டாக்ஸி மாதிரியில் இருந்து உருவாக்கப்படும் ஏர் டாக்ஸி ஆனது 2028ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதற்கட்டமாக பெங்களூரில் தான் இந்த ஏர் டாக்ஸி சேவை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய சுன்யா ஏர் டாக்ஸியை 20- 30கிமீ என குறுகிய தொலைவு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் டாக்ஸியில் விமானி உள்பட அதிகப்பட்சமாக 6 பேர் வரையில் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த ஏர் டாக்ஸி அதிகப்பட்சமாக சுமக்கும் எடையின் அளவு 680 கிலோ ஆகும்.
சர்ளா அவியேஷனின் பெயரில் உள்ள 'சர்ளா' என்பது சர்ளா துக்ரல் என்கிற இந்தியாவின் முதல் பெண் விமானியை குறிக்கிறது. அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயரை நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர். சர்ளா அவியேஷன் ஆனது சமீபத்தில்தான் சுமார் 1 கோடி டாலர் நிதி உதவியை பெற்றிருந்தது.

இதற்காக நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு கூட்டத்தில் ஃபிளிப்கார்ட்டின் துணை நிறுவனர் பின்னி பன்சால் மற்றும் செரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் கமத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 2023 அக்டோபரில் அட்ரியன் ஷ்மிட் (Adrian Schmidt), ராகேஷ் கோய்ன்கர் மற்றும் சிவம் சவுகான் என்பவர்களால் சர்ளா அவியேஷன் நிறுவப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலாவதாக பெங்களூரில் துவங்கப்பட்டாலும், பின்னர் காலத்தில் மும்பை, புனே, டெல்லியிலும் சுன்யா ஏர் டாக்ஸி சேவையை வழங்க சர்ளா அவியேஷன் திட்டமிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் மருத்துவ போக்குவரத்துகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையாகவும் ஏர் டாக்ஸியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டங்களை எல்லாம் தைரியமாக சர்ளா அவியேஷன் முடிவெடுப்பதற்கு காரணம், சமீபத்தில் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த நிதி உதவி ஆகும்.


Click it and Unblock the Notifications









