தேதியை குறிச்சிட்டாங்க! டில்லியில் அடுத்த திருவிழாவுக்கு இப்பவே ரெடியாகுங்க!
இந்தியாவில் அடுத்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 9ம் தேதி முதல் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 எடிசன் நடந்த நிலையில் தற்போது 3வது எடிசனிற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி நடந்தது. இதன் அடுத்த எடிசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை டில்லியில் வைத்து நடைபெறும் என வணிகத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி என்பது ஆட்டோமொபைல் துறை, துறை வல்லுநர்கள், துறைக்கான திட்டங்களை தயாரிப்பவர்கள், தொழிற்நுட்ப அறிஞர்கள் என பலர் ஒரே இடத்தில் சேர்ந்து இந்த துறையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி துறையில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது.
தற்போது 2027ம் ஆண்டிற்கான குளோபல் மொபிலிட்டி கண்காட்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது 3வது எடிசன் கண்காட்சியாகும். இந்த கண்காட்சி டில்லி பகுதியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளது. முக்கியமாக மல்டி மாடல் மொபிலிட்டிக்கான கண்காட்சியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ரயில், சாலை, ஆகாய வழி, தண்ணீர் வழி, நகர்புற பயணம், கிராமப்புற பயணம், விவசாய பணிகள் உள்ளிட்ட பல்வேற வகையான வாகனங்கள் மற்றும் அது சார்ந்த தொழிற்நுட்பங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கண்காட்சி இந்தியாவின் முக்கியமான கண்காட்சியில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சிக்கு முதல் இரண்டு எடிசன்களுக்கு கிடை்தத வரைவேற்ப்பை பொருத்து இந்த 3வது கண்காட்சியை பெரியஅளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த கண்காட்சி இந்தியாவில் டில்லியில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்தது. பாரத் மண்டபம், யசோபூமி, பெருநகர நொய்டா பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய பகுதிகளில் நடந்தது.

இந்த கண்காட்சியில் 1500 நிறுவங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிபடுத்தின. அடுத்தாக 9.8 லட்சம் வாடிக்கையாளர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை கண்டுகழித்தனர். இந்நிலையில் 2027ம் ஆண்டு அடுத்த கட்ட கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் அரசு மாசு இல்லாத வாகனங்களுக்கான முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்யவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடக்கும் இந்த கண்காட்சி உலக அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆட்டோமொபைல் துறையில் இந்த கண்காட்சி மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் தான் காட்சிப்படுத்தி வருகின்றன. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









