பிப்.1ம் தேதி எல்லாரும் டில்லிக்கு கிளம்புங்க! முக்கியமான நிகழ்ச்சி நடக்கபோகுது!

மத்திய அரசு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 என்ற பெயரில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கான புதிய எக்ஸ்போ ஒன்றை வரும் பிப்ரவரி 1ம் தேதி நடத்துகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெறப் போகும் நிறுவனங்கள் அங்கு காட்சிப்படுத்தப் போகும் தொழில்நுட்பங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கான டிக்கெடுகளை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய அரசு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் என்ற இடத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து பங்கேற்க உள்ளனர்.

Bharat Mobility Global Expo

இந்த கண்காட்சியில் எதிர்காலத்தில் உள்ள மொபிலிடி தொடர்பான தொழில்நுட்பங்களும், ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களும், அது சார்ந்த மற்ற விஷயங்களும் இடம்பெற உள்ளன. சுமார் 10 லட்சம் சதுர அடி கொண்ட இடப்பரப்பில் இந்த கண்காட்சி என்பது நடைபெற உள்ளது. மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை காண ஏராளமான ஆட்டோமொபைல் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த கண்காட்சியில் வெறும் கார்களை மட்டுமல்லாமல் டிரோன்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான சார்ஜிங் தொழில்நுட்பம், பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன், உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் மோட்டார், எலெக்ட்ரானிக் சிஸ்டம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சிறப்பான டயர்கள், பேட்டரி தொழில்நுட்பம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான பொருட்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Bharat Mobility Global Expo

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக முக்கிய மார்க்கெட்டாக இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்கள் குறித்த தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் எல்லாம் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஆட்டோமொபைல் உலகில் இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது குறித்த பல்வேறு தொழில்நுட்ப தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி அதன் பேட்டரியை மாற்றுவது பேட்டரிக்கான பாதுகாப்பு , இவி கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதற்காக 12 நாடுகளில் இருந்து எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பாரத் மொபைலிடி குளோபல் எக்ஸ்போவில் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துகின்றன. இந்நிறுவனங்கள் எல்லாம் மற்ற நிறுவனங்களுக்கு தங்கள் தொழில்நுட்பத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளதால் அவர்களுக்கு இந்த எக்ஸ்போர்ட் நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை வளர்ந்து வருவதால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அது சார்ந்த சிறு தொழில்கள் வேகம் எடுக்கும் அப்படியாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக நடக்கும் உதிரி பாகம் மற்றும் ரிப்பேர் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில் தொடர்பான தொழில்நுட்பத்திற்கும் இந்த எக்ஸ்போவில் தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த எக்ஸ்போவில் சர்வதேச நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்வதால் நிச்சயம் இந்தியாவில் வாகனங்களை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து இந்தியாவிற்கு ஏற்றார் போல் அதை மாற்றி இந்திய வாகன சேவையை பூர்த்தி செய்யும் பல்வேறு விஷயங்கள் நடைபெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தொடர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் வழியில் இந்த எக்ஸ்போ எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு மிக உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் அவை பிரபலமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, January 29, 2024, 15:19 [IST]
English summary
Bharat mobility global expo delhi feb 1 3 details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+