இந்தியா பாரத் என பெயர் மாறினால் இப்படி ஒரு பிரச்சனை வேற இருக்குதா? இது எல்லாம் சரிபட்டு வருமா?
இந்தியாவிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்தால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் பதிவிவெண்ணில் மாற்றம் வருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பாரத் சீரியஸில் நம்பர் பிளேட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து வாகனங்களுக்கும் இந்த நம்பர் பிளேட் பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் வெளியான இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழில் அவரது பெயரை குறிப்பிட்டு பாரத் நாட்டின் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தற்போது இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற முயற்சிப்பதாக பலர் பேசி வருகின்றனர்.

இதற்கு ஒரு பக்கம் ஆதரவு குரல்களும் ஒரு பக்கம் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகிறது. இருந்தாலும் தற்போது இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் பல்வேறு இடங்களில் இந்த பெயர் பெயர் மாற்றம் காரணமாக பல மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும். அதில் முக்கியமாக வாகனங்களில் நம்பர் பேட் மாற்றப்படுமா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு இந்திய அரசு பாரத் நம்பர் பிளேட் என்ற புதிய வகை நம்பர் பிளேட்டுக்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த நம்பர் பிளேட் மூலம் ஒரு வாகனம் ஒரு மாநிலம் வித இன்னொரு மாநிலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்நிலையில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது இந்த கேள்விக்கு பதிலை காண்பதற்கு முன் நாம் இந்தியாவில் உள்ள நம்பர் பிளேட்டிங் முறை குறித்து முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் போக்குவரத்து துறையை கொள்கை அடிப்படையில் மத்திய அரசும் வருவாய் அடிப்படையில் மாநில அரசும் கையாண்டு வருகிறது.
அதன்படி பார்த்தால் மத்திய அரசு காட்டிய வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் தான் இந்தியாவின் போக்குவரத்து துறையை நிர்வாகம் செய்து வருகின்றன. இதில் ஒவ்வொரு மாநில அரசும் எப்படியான நம்பர் பிளேடுகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுதான் வழிகாட்டுதல் செய்துள்ளது. அதன்படி தான் மாநில அரசுகள் நம்பர் பிளேட்டுகளை பதிவு செய்து அதை வாகனங்களுக்கு வழங்கி வருகிறது.

தற்போது வழங்கப்பட்டு வரும் நம்பர் பிளேட்டுகளில் முதலில் மாநில கோடும் அதன் பின்பு ஆர்டிஓ அலுவலகத்தின் எண்ணும் அதன்பின்பு எந்த சீரியஸ் என்ற குறியீடும் அதன் பின்பு தான் வாகனத்தின் பதிவு எண்ணும் வழங்கப்படுகிறது. இதில் இந்தியா என்ற அடையாளம் எங்குமே இல்லை. மாநில அரசின் அடையாளமும் ஆர்டிஓ வின் அடையாளமும் தான் முக்கியமாக இருக்கின்றன.
அதனால் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டாலும் அது வாகன பதிவு எண்ணில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே நம்பப்படுகிறது. இருந்தாலும் மத்திய அரசு பாரத் சீரியஸ் என்ற புதிய ரக நம்பர் பிளேட்டுகளை தற்போது அறிமுகப்படுத்தி அதை தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் இந்த முறையான நம்பர் பிளேட்டை இந்தியா முழுவதும் உள்ள வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது உள்ள நிர்வாக சிக்கல் காரணமாக மாநில அரசுகள் கையில் வாகனங்களுக்கான பதிவு எண் வழங்கும் நடைமுறை இருக்கிறது. வாகனங்களுக்கான பதிவு எண்களை மாநில அரசுகளை வழங்கி வருகின்றன. இதற்கான வழிகாட்டுதலை மட்டும்தான் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் மாநில அரசின் பதிவேட்டில் தான் நேரடியாக வாகனங்களை பதிவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா முழுவதும் ஒரே விதமான நம்பர் பிளேட் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆனால் இப்படியாக ஒரு நம்பர் பிளேட் வழங்கப்பட்டால் அந்த நம்பர் பிளேட்டில் உள்ள வாகனம் ஏதாவது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் அந்த வாகனத்தை டிராக் செய்வது என்பது சற்று கடினமான விஷயமாக மாறிவிடும். தற்போது உள்ள வாகனங்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் போது வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை வைத்து எளிதாக அதன் உரிமையாளர்களை கண்டுபிடிக்கக்கூடிய நிலை இருக்கிறது.
குறிப்பாக அது எந்த மாநிலம் எந்த ஏரியா என நம்பர் பிளேட்டிலேயே தெளிவாக இருக்கும் அதன் பின்னர் அதில் சீரியஸ் மற்றும் நம்பரை வைத்து எளிதாக அதன் உரிமையாளர் மற்றும் மற்ற விபரங்களை சேகரித்து விடமுடியும். இந்தியா முழுவதும் ஒரே விதமான நம்பர் பிளேட் என வந்துவிட்டால் அதில் மாநில மற்றும் எந்த பகுதி என்று அடையாளம் இல்லாமல் இருந்தால் வாகன நம்பர் பிளேட்டுகளை கவனிப்பது சற்று சிரமம் ஆகிவிடும்.
இதுவரை மதிய அரசோ, மாநில அரசோ வாகனங்களை நபர் பெயர்களை மாற்றுவது குறித்து எந்தவித முடிவையும் அறிவிக்கவில்லை இதனால் விரைவில் இதற்கான மாற்றம் எதுவும் ஏற்படாது என்றே நம்பலாம். அப்படி மாற்றுதல் செய்யப்பட வேண்டும் என்றால் அது மிகப் பெரிய வேலை என்பதால் இதற்கான முன்னறிவிப்புகள் எல்லாம் படிப்படியாக வெளியாகும் அதன் பின்பு தான் இந்த மாற்றம் ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினாலும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் எதிர்காலத்தில் இது குறித்து மாற்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதில்லை


Click it and Unblock the Notifications
