அக்டோபர் மாதம் தலையெழுத்து தெரியும்! இந்த 5 காரை தான் முதல்ல கிராஷ் டெஸ்ட் பண்ண போறாங்களா?

இனி இந்தியாவின் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களை கிராஷ் டெஸ்ட் செய்ய குளோபல் என்கேப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதன் இந்திய வருஷனாக பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் அறிமுகமாக உள்ளது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு முதலில் பரிசோதனைக்கு செல்ல உள்ள கார்களை பற்றி தான் இங்கே காண போகிறோம்.

இந்த பாரத் என்கேப் சோதனையில் குளோபல் என்கேப்பை போல கார்களை பல்வேறு விதமாக கிராஷ் டெஸ்ட் செய்து அதற்கான சேஃப்டி ரேட்டிங் 1 முதல் 5 ஸ்டார்கள் என வழங்க உள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்படும் அத்தனை கார்களும் இந்த கிராஷ் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை.

bharat ncap

கார் தயாரிப்பாளர்கள் விரும்பினால் இதை செய்து கொள்ளலாம். இதுவரை எந்த கார்களெல்லாம் கிராஷ் டெஸ்ட் செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் இதுவரை எந்த ஏஜென்சியிலும் டெஸ்ட் செய்யாத சிலர்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. அந்த கார்கள் எல்லாம் பாரத் என்கேப் அறிமுகத்திற்காக காத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த கார்களை பற்றி காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா: மாருதி நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தியது சிறப்பாக விற்பனையாக வரும் கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரில் என்ட்ரி வேரியன்டை பொறுத்தவரை இரண்டு ஏர்பேக் மட்டுமே பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.

bharat ncap

மற்ற வேரியண்ட்களில் சீட் பெல்ட் வார்னிங், குழந்தைகள் சீட்டுக்கான ஆன்கர் பாயிண்ட், பின்வரிசை சீட்டில் நடுவில் அமருவதற்கு மூன்று பாயிண்ட் சீட் பெல்ட், இஎஸ்பி, 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆன்ட்டி தெஃப்ட் இன்ஜின் மொபைலைசர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

மிட் மட்டும் டாப் வேரியண்ட்களில் 6 ஏர்போக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கர்டன் ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக இருக்கிறது. மாருதி நிறுவனம் இந்த காரில் அக்குஸ்டிக் வெஹிகில் அலார்டிங் சிஸ்டம் என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த காருக்கு அருகே நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. இந்த கிராஷ் டெஸ்டில் இந்த கார் அதிக ஸ்டார்களை எல்லாம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.

bharat ncap

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாய் நிறுவனம் இந்த எக்ஸ்ட்ர் காரை சிறிய ரக எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக இருக்கிறது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இந்த கார் இருக்கிறது.

இதுபோக ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு மவுண்டுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் மற்றும் 40 தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இந்த கார் கிராஷ் டெஸ்டில் நல்ல மதிப்பெண்ணை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ஸ்டார்களை குறைந்தபட்சமாவது பெறும்.

கியா செல்டோஸ்: புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரில் அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டு அடாஸ் லெவல் 2 சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இதில் 15 தொழில்நுட்ப அம்சங்கள் பாதுகாப்பு விஷயங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அடாஸ் போக தனியாக இந்த காரில் 6 ஏர்பேக் 350 டிகிரி கேமரா பிளைன் ஸ்பாட் டிடெக்சன் சிஸ்டம் இருக்கிறது.

இதுபோக எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், அசிஸ்ட் கண்ட்ரோல், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஆனால் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸ் கார் ஏஎன்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றது. இந்தியாவில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கலாம்.

ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனம் தனது எலவேட் காரின் டெலிவரியை இப்பொழுதுதான் துவங்கியுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த அறை ஸ்டிராங்கான காராக கட்டமைத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இதில் அடாஸ் என்ற தொழில்நுட்பம் இருக்கிறது.

இதுபோக 6 ஏர்பேக் ஐஎஸ்ஓபிக்ஸ், ஹில் ஸ்டார்ட், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் 5 ஸ்டார்களை பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் ஆகிய கார்கள் குளோபல் என்கேப்பில் ஐந்து ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி ஜிம்னி: மாருதி நிறுவனத்தின் இந்த ஆண்டு மிகப்பெரிய கார் இது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் இபி டி உடன் குடியை ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், சைடு இம்பேக்ட் டோர் பீம்கள் உள்ளது.

இதன் 3 டோர் வெர்ஷன் கார் ஏற்கனவே யூரோ என்கேப் உள்ளிட்ட என்ற பல்வேறு கிராஷ் டெஸ்ட் செய்துள்ளது இதில் யூரோ என்கேப்பில் மூன்று ஸ்டார்களை இந்த கார் பெற்றுள்ளது. பாரத் என்கேப் இந்த கார் இன்னும் அதிக ஸ்டார்களை பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாரத் என்கேப் அறிமுகப்படுத்தப்பட்டது, உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது இந்த பாரத் என்கேப்பில் இந்த கார்கள் எல்லாம் முதலில் செட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள்ளேயே விற்பனைக்கு வரும் கார்களாகும். எல்லா கார்களும் நல்ல விதமான ரேட்டிங்கை பெறும் இணை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 5, 2023, 20:27 [IST]
English summary
Bharat ncap begins crash tests on oct 5 which indian suvs should go first
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X