EV Charging Station: துணிஞ்சு எலெக்ட்ரிக் காரை வாங்கலாம்! இவி சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாறும் பெட்ரோல் பங்க்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக வேகமாக அதிகமாகிவருகிறது. டூவீலர் மட்டுமல்ல கார்களிலும் எலெக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனையாகத் துவங்கியுள்ளது. பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வரிசையாகக் களம் இறக்கி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது இருக்கும் மிகப்பெரிய விமர்சனம் ரேஞ்ச் தான்.

பெட்ரோல் கார்கள் போல எலெக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என மக்கள் நம்பி வருகின்றனர். குறிப்பிட்ட தூரம் சென்று பெட்ரோல் போட்டுப் பயணிப்பதைப் போல சார்ஜ் போட்டுப் பயணிப்பது சாத்தியம் இல்லாதது என நினைக்கின்றனர். அது கிட்டத்தட்ட உண்மை தான். இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதுமான அளவில் இல்லை. இதற்கிடையில் மத்திய அரசு சார்ஜிங் கட்டுமானத்தை அதிகரிக்கப் பல திட்டங்களை வகுத்துள்ளது.

துணிஞ்சு எலெக்ட்ரிக் காரை வாங்கலாம்! இவி சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாறும் பெட்ரோல் பங்க்கள்!

அதன்படி தற்போது இந்தியா அரசின் முக்கியமான நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது பெட்ரோல் சில்லறை விநியோக மையங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை திறக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக இந்தியாவில் அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 110 பெட்ரோல் பங்க்களை இவி சார்ஜிங் ஸ்டேஷன்களாக உருவாக்கியுள்ளது.

இதற்காகத் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளைத் தேர்வு செய்து அந்த நெடுஞ்சாலைகளில் 100 கி.மீக்கு மிகாமல் இருக்கும் அந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்களில் இந்த இவி சார்ஜிங் ஸ்டேஷன்கள கட்டமைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 58 பெட்ரோல் ஸ்டேஷன்களில் இவி சார்ஜிங் மையங்களை உருவாக்கியுள்ளது.

சென்னை - புதுச்சேரி - வேளாங்கன்னி நெடுஞ்சாலை, கோவை- கரூர் நெடுஞ்சாலை, ஓசூர்,-சேலம்-கரூர், மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி , மதுரை - ராஜபாளையம் - செங்கோட்டை, மதுரை -ராமேஷ்வரம்,சேலம் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, தேனி - மதுரை - தொண்டி, கோவை -சேலம் நெடுஞ்சாலை, தூத்துக்குடி - மதுரை ஆகிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்க்களில் இவி சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தது. 125 கி.மீ ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார்கள் தான் விற்பனையாகி வரும் நிலையில் 100 கி.மீக்கு ஒரு இவி சார்ஜிங் ஸ்டேஷன் என் கணக்கில் இந்த ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கார் டிரைவர்களே ஆப்ரேட் செய்து கொள்ள முடியும் தேவைப்பட்டால் அதற்கு உதவுவதற்காகவும் பெட்ரோல் பங்க்கில் உள்ள ஒரு நபர் இருப்பார்.

மேலும் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் உள்ள நிலை, அதற்கான அப்பாயிமென்ட், மற்றும் பணப்பரிவர்த்தனைகளை ஹலோ பிபிசிஎல் என்ற ஆப் மூலம் செய்து கொள்ள முடியும். ஒரு காரை முழுவதுமாக சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் வரை ஆகும் என்பதால் இந்த சார்ஜ் ஸ்டேஷன் அருகே ரெஸ்டாரென்ட் மற்றும் கழிவறை வசதிகள் இருக்கும்படி இந்நிறுவனம் வசதிகளைச் செய்துள்ளது.

இதனால் நீண்டதூரம் எலெக்ட்ரிக் கார்களில் பயணிக்கும் பயணிகள் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் கார் சார்ஜ் ஆகும் போது அவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவது, உணவருந்துவது, பயணத்தின் போது ஓய்வெடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து கொள்ள முடியும். பிபிசிஎல் நிறுவனம் இப்படியாக 15 முக்கியமான காரிடார்களை இணைக்கும் வகையில் இதை உருவாக்கியுள்ளது.

இதுபோக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உயர் தர உணவகங்களான மெக்டோனல்ட்ஸ், ஏ2பி, க்யூப் ஸ்டாப், கபே காஃபி டே ஆகிய இடங்களிலும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதனால் மக்கள் உணவருந்தும் இடைவெளியில் அவர்களின் கார் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும். இப்படியாக இந்தியா முழுவதும் 200 நெடுஞ்சாலைகளில் இதைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இந்நிறுவனம் தங்கள் சார்ஜிங் ஸ்டேஷன்களில் 30 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்தியுள்ளனர். முக்கியமாகச் சுற்றலா தளங்களைக் கவர் செய்யும் வகையில் இதைத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, ராமேஷ்வரம், கன்னியாகுமரி, குற்றாலம் போன்ற இடங்களில் இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைத்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன: இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயம். இதை பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனம் எடுத்துச் செய்வது வரவேற்கதக்கது தான். இருந்தாலும் பெட்ரோல் பங்க்களில் இது எந்த அளவிற்குச் செயல்பாட்டில் இருக்கும் என்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். அதே போல ஒரே நேரத்தில் 2-3 கார்களாவது சார்ஜ் செய்யும் இடம் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளும் இந்தியாவிற்குக் கட்டாயம் தேவை.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 21:00 [IST]
English summary
Bharat petroleum electrifies 110 fuel stations with ev charging stations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+