இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாறுமாறா உயரபோகுது! இதுக்கு இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம்

பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் அதற்காகத் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான விலை தற்போது உள்ளதை விட அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் இந்தியா பாரத் ஸ்டேஜ் 6 -ன் 2ம் கட்டத்திற்கு நகர்கிறது. தற்போது பாரத் ஸ்டேஜ் 6-ன் முதல் கட்டம் அமலில் இருக்கிறது. இதனால் தற்போது தயாராகும் வாகனங்களை விட வரும் ஏப்ரல் மாதம் முதல் தயாராகும் வாகனங்களிலிருந்து வெளியாகும் மாசு அளவு குறைவாக இருக்க வேண்டும். தற்போதே வாகன நிறுவனங்கள் இதற்கான பணிகளை இறங்கிவிட்டனர்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பயணிகள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கியமான காரணம் இந்த பாரத் ஸ்டேஜ் 6 இரண்டாம் கட்டத்திற்காக சில புதிய உதிரிப்பாகங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களுடன் இணைக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் வாகனத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. இது அடுத்த ஆண்டு முதல் வாகனத்தை வாங்குபவர்களின் தலையில் தான் முடியும்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இந்த பிஎஸ் 6 இரண்டாம் கட்டத்திற்காக வாகனங்களில் செல்ஃப் டைகனஸ்டிக் கருவியைப் பொருத்தவுள்ளனர். இந்த கருவி வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையை ரியல் டைமில் மானிட்டர் செய்யும். வாகனத்திலிருந்து புகை வெளியாகக் காரணமாக இருக்கும் கருவிகளான கேட்டலிஸ்ட் கன்வெர்டர், ஆக்ஸிஜன் சென்சார், உள்ளிட்ட கருவிகளை ரியல் டைமில் மானிட்டர் செய்யும். இதன் மூலம் வாகனத்தில் எப்பொழுதும் மாசுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

ஒரு வேலை ஒரு வாகனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மாசுவை வெளியிடத் துவங்கிவிட்டால் டிரைவருக்கு வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி வார்னிங் சிக்னல் ஒன்றை வழங்கும். இது மட்டுமல்ல வாகனத்தின் ஏற்கனவே உள்ள வேறு சில பாகங்களும் இந்த பிஎஸ் 6 இரண்டாம் கட்டத்திற்காக மாற்றப்படவிருக்கின்றன.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

அதன்படி வாகனத்தின் எரிபொருளை கண்ட்ரோல் செய்ய புரோகிராம்டு ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் பொருத்தப்படவுள்ளன. அதனால் வாகனத்திற்குள் எவ்வளவு எரிபொருள் செல்ல வேண்டும். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அது செல்ல வேண்டும் என்பது புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். வாகனத்தின் த்ராட்டலை மானிட்டர் செய்யச் செமி கண்டெக்டர் கருவி பொருத்தப்படவுள்ளன. இதனால் வாகனத்தின் த்ராட்டல் லெவல் சீராக ஏறி இறங்கும்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

வாகனத்தில் தற்போது பொருத்தப்படும் கிராங்க்ஸாஃப்ட் போசிஷன்கள் மாற்றப்படவுள்ளன. வாகனத்தின் உள்ள எடுக்கப்படும் ஏர் இன்டேக், இன்ஜின் டெம்பிரேச்சர், ஆகியன கண்ஸ்டன்டாக மானிட்டர் செய்யும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. இது போக எக்ஸாஸ்டில் வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடு, கர்பன் டை ஆக்ஸடு, சல்ஃபர் ஆகியவற்றை நிலைமை மாற்றியமைக்கும்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இந்த மாற்றம் காரணமாக வரும் ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வரும் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என என ஐசிஆர்ஏ துணைத் தலைவர் ரோஹன் குமார் குப்தா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விலை உயர்வு பிஎஸ் 4ல் இருந்து பிஎஸ் 6க்கு மாறும்போது ஏற்பட்ட விலை உயர்வை விடக் குறைவாகத் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இந்த பிஎஸ்6 இரண்டாம் கட்டத்திற்காக ஏராளமான பணம் இந்த செஃல்ப் டைக்னஸ்டிக் கருவிகளுக்காக முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த முதலீடுகள் வாகனத்தின் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்களில் முதலீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. பிஎஸ் 6 முதல் கட்டத்திற்கும் இப்படியான முதலீடுகள் தேவைப்பட்டன. அதைவிட இதற்குச் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இந்தியா இந்த பிஎஸ் 6 முதல் கட்டத்தைக் கடந்த 2020ம் ஆண்டு ஏப் 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. இதை இந்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு இந்தியா பிஎஸ்4ல் இருந்து நேரடியாக பிஎஸ்6க்கு வரும் 2020ம் ஆண்டு முதல் மாறவுள்ளதாக அறிவித்தது. அப்பொழுது குறைவான காலகட்டத்திற்குள் பெரிய மாற்றத்தைத் திட்டமிட்டுள்ளதாக அப்பொழுது பலர் விமர்சனம் செய்த இந்த பிஎஸ் 6 மாற்றத்திற்காக ஆட்டோமொபைல் துறை சுமார் ரூ70 ஆயிரம் கோடி பணத்தை முதலீடு செய்தது.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த அதிரடி மாற்றத்தை அரசு அறிவித்தது. பிஎஸ் 4-ல் இருந்து பிஎஸ் 6 மாறியதில் புகையில் சல்ஃபரில் அளவு மட்டுமே பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியா பிஎஸ் 3 ல் இருந்த போது இந்தியாவில் ஓடிய வாகனங்களில் வெளியேறிய மாசுவில் சல்ஃபரில் அளவு 350 பிபிஎம்ஆக இருந்தது. இதுவே பிஎஸ் 4 அது 50 பிபிஎம் அளவிற்குக் குறைக்கப்பட்டது. பிஎஸ் 6 முதல்கட்டத்தில் இது 10 பிபிஎம் எனக் குறைக்கப்பட்டுவிட்டது.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

தற்போது பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்டம் என்பது வாகனத்திலிருந்து வெளியேறும் புகையின் அளவு எப்பொழுதும் இதே அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டத்தை கட்டாயப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள சிஸ்டத்தில் ஆரம்பத்தில் குறைவான மாசு கார்களிலிருந்து வெளியேறினாலும் நாளடைவில் காரை பயன்படுத்துபவர்கள் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் மாசு அளவு அதிகமாகிவிடும்.

இன்னும் 6 மாசம் தான் வாகனங்களின் விலை எல்லாம் தாருமாற உயர போகுது . . . எல்லாத்துக்கும் இந்த அரசு போட்ட உத்தரவு தான் காரணம் . . .

இதனால் காற்று மாசுவை கார்களில் ரியல் டைமில் கண்காணித்தால் இப்படியாக மாசு அதிகமாகும் போது அது கார் டிரைவர்களுக்கு தெரியப்படுத்தும். இதனால் மூலம் காற்றின் மாசுவை கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. எது எப்படியோ இந்த மாற்றத்தால் கார்களின் விலை ஏறப்போவது மட்டும் உறுதி,இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Monday, October 10, 2022, 10:57 [IST]
English summary
Bharat stage 6 emission phase 2 may rise vehicle price
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+