பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

எரிபொருளே மாசு உமிழ்வுக்கு முக்கிய காரணி என்ற பட்சத்தில் பாரத் ஸ்டேஜ் கோட்பாடுகள் அனைத்தும் எரிபொருள் இல் கலக்கப்படும் ADDITIVES எனப்படும் சேர்ப்பங்களை குறிவைத்தே அமையும்.

அரசு விதிகளின் படி அனைத்து விதமான பொருட்களுக்கும் மாசு கட்டுப்பாடு என்ற ஒன்று உண்டு. துணி மணி, உணவு முதல் பொது இடங்களில் எச்சில் துப்புவது வரை இவற்றில் அடங்கும்.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

அவ்வழியே இந்திய அரசின் கீழ் இயங்கும் BSES எனப்படும் BHARAT STAGE EMISSION STANDARDS என்ற நிறுவனம் என்ஜின் இல் (BOTH COMPRESSION AND SPARK IGNITION ENGINES) இருந்து வரும் மாசு இன்ன பிற அளவில் தான் இருக்க வேண்டும் என்று வரையறை வகுக்கும். அவ்வாறு இயங்காத வாகனம் இந்திய சாலையில் செல்ல அனுமதி மறுக்கப்படும். காலத்திற்கு ஏற்றால் போல் இதன் தொழில் நுட்பங்கள் வளர்ந்து BS 2 ,3 ,4 என்று சென்றாயிற்று. இவை அனைத்து மேற்கத்திய EUROPEAN STANDARDS EURO 2 ,3 ,4 வழியே பின்பற்ற பட்டவை .

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

பாரத் ஸ்டேஜ் இன் வரலாறு...

முதல் மாசு உமிழ்வு கட்டுப்பாடானது 1991 ம் ஆண்டு பெட்ரோல் வாகனத்திற்கும் 1992 ம் ஆண்டு டீசல் வாகனத்திற்கும் வரையறுக்க பட்டது. பின் அதை தொடர்ந்து CATALYTIC CONVERTOR என்ற தொழில் நுட்பத்தையும் உரிய பெட்ரோல் வாகனத்தில் பயன்படுத்தவும் செய்தது. பின் UNLEADED PETROL என்ற மாசு கட்டுப்பாட்டையும் உட்புகுத்தியது.

பின்பு உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் படி EURO 1 ஐ 1999 திலும் EURO 2 கோட்பாட்டினை 2000 திலும் செயல்படுத்தியது . இப்படியாக படிப்படியாய் பாரத் ஸ்டேஜ் வழியே மாசினை குறைத்து வருகிறது.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2010இல் நாடு முழுவதும் BS3 கோட்பாடுகள் வாகன சட்டத்தில் உட்படுத்தப்பட்டன. பின் ஏப்ரல் 2010இல் தொடங்கி ஏப்ரல் 2017 வரை BS4 விதிகளுக்குட்பட்ட வாகனமே நடைமுறையில் உள்ளது என்பது நன்கு அசைத்து செரித்த விஷயமே. அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் முடிவாக அடுத்து BS5 வாகனங்கள் அல்லாமல் BS6 தொழில்நுட்பத்திற்குAPRIL 2020இல் இந்தியா விரைய நம்பிக்கை தெரிவித்தது மட்டுமல்லாமல் முயன்றும் வருகிறது என்பது பாராட்டவேண்டிய தீர்வு.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

மேலும் மாற்று எரிபொருள் மேலான விழிப்புணர்வு தற்போது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. இவை எரிபொருள் சிக்கனம் மற்றுமின்றி மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும் வல்லதாய் உள்ளது. கனரக வாகன பிரிவில் உலகிலேயே COMPRESSED NATURAL GAS (CNG) இல் இயங்கும் அதிக வாகனம் கொண்ட மாநகரம் டெல்லி என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? மேலும் எத்தனால் பயோ டீசல் போன்ற ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கம் துணை நிற்கிறது. இவை அனைத்தும் BSES இன் வெற்றி படிகளே!

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

எரிபொருளே மாசு உமிழ்வுக்கு முக்கிய காரணி என்ற பட்சத்தில் பாரத் ஸ்டேஜ் கோட்பாடுகள் அனைத்தும் எரிபொருள் இல் கலக்கப்படும் ADDITIVES எனப்படும் சேர்ப்பங்களை குறிவைத்தே அமையும்.

தற்போது உள்ள நடைமுறை படி அனைத்து வாகனங்களும் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையேனும் மாசு உமிழ்வு கட்டுப்பாடு பற்றிய பரிசோதனையை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் செய்து கொள்ளலாம். போக்குவரத்து கனரக மற்றும் அரசு வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் வழிலாக வருடத்திற்கு ஒரு முறை முழு சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

2 stroke engine உமிழ்வானது 4 stroke என்ஜின் விட அதிகம் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. 2 stroke engine இல் பெட்ரோலுடன் ஆயில் கலப்பதினாலும் இரண்டும் சேர்ந்து என்ஜின் இல் எரிந்து வெளிவரும் புகையில் சற்றே எரிபடாத பொருட்கள் காற்றில் கலப்பதே இம்மாசுக்கு காரணம்.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

2 STROKE எனப்படும் பழைய தொழில்நுட்பத்தில் இயங்கிய சீமைராஜாக்கள் M80 , CHETAK , டிவிஎஸ் XL , மாருதி 800 போன்றவை அதீத மாசு உமிழ்வு காரணமாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ஒரு காலத்தில் வருத்தமளித்த உண்மை என்றாலும் தற்போது 2 STROKE ENGINE ஒன்று கூட நடைமுறையில் இல்லாதது மட்டுமின்றி மாசு கட்டுப்படும் குறைந்துள்ளது என்பதே நல்ல ஆறுதல்.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

30 சதவிகித செயல் திறனுடன் இயங்கி வரும் 4 stroke engine காலங்கள் தாண்டி இன்று வரை அதீத சக்தியுடன் குறைந்த மாசு உமிழ்வுடன் இன்று வரை நடைமுறையில் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தத்துவங்கள் போல் இன்று நீங்கள் கண்ணில் காணும் அனைத்து வாகனமும் 4 stroke தான்.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

அட தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கட்டும் அய்யா நாளுக்கு நாள் வாகன விலை விண்ணை பிளக்கிறதே இதற்கென்ன வழி? கேட்பீர்களா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டால் வண்டி விலையை விட வாழ்க்கை விலையே பெரியதாக தோன்றும் நண்பர்களே. இந்த BSES கோட்பாடுகளினால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சியே.

பாரத் ஸ்டேஜ் மாசு உமிழ்வு விதி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!

எடிட்டர் கருத்து

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்றால் போல் நாமும் ஓடி தான் ஆகா வேண்டும் தலை விதி என்று சலித்து கொள்ளாமல், நமது நன்மை, சுற்றுப்புற தூய்மை, எதிர்கால வாழ்வை செம்மையாக்க மேம்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றி அழகுற செய்வோம் நம் வண்டி மற்றும் வாழ்க்கை பயணத்தை.

எல்லாம் சரி மரங்களை வெட்டுதல் தரமற்ற சாலை, தரமற்ற பேருந்து, பிளாஸ்டிக் கழிவுகள், நீர் நிலை மாசுபடுதல் இவையெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேட்டால் என்னிடம் மவுனமே விடையாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 31, 2018, 17:51 [IST]
English summary
All You Need To Know About Bharat Stage Emission Standards.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+