நாசா எல்லாம் இனி இஸ்ரோ கிட்ட வந்து கத்துக்கனும்! வேற லெவல் சம்பவம் செய்த இந்திய விஞ்ஞானிகள்!

இஸ்ரோ அமைப்பை இந்தியாவின் முதல் விண்வெளி மையத்தை அமைப்பதற்கான பணிகளை துவங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி மையத்திற்கு பாரதிய அந்தரிக்ஷா மையம் என பெயரிட்டுள்ளதாகவும் இதை 2025-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் எழுத்து மூலமாக பதில் அறிக்கையை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதில் இஸ்ரோவின் மிக முக்கியமான அப்டேட் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. போட்டியாக இஸ்ரோவும் விண்வெளியில் தனக்கென ஆய்வு மையத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Bharatiya Antariksha Station

இது குறித்து அவர் எழுதிய பதில் இந்தியா வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிட்டு வருவதாகவும் அதற்காக இஸ்ரோ தனது பணிகளை துவங்கி உள்ளதாகவும் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாரதிய அந்தரிக்ஷா மையம் என பெயர் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் எனவும் இதற்கான முழுமையான திட்ட அறிக்கைகள் எல்லாம் விரைவில் வெளியாகும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பாரதிய அந்தரிக்ஷா மையம் என்பது இஸ்ரோ பிரத்தியேகமாக இந்தியாவிற்கு என உருவாக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமாகும். இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வரும் 2035-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharatiya Antariksha Station

தற்போது இந்த திட்டம் வெறும் கான்செப்ட் வடிவமைப்பிலேயே இருக்கிறது. இதை சாத்தியக்கூறாக மாற்ற என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது இதற்காக நாம் பின்பற்ற வேண்டிய பாதை என்ன என்பது குறித்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து திட்டமிட்டு வருகின்றனர். இந்த திட்டமிடங்களுக்குப் பிறகுதான் இது குறித்த அடுத்த கட்ட நபர்கள் நமக்கு தெரியும்.

பாரதிய அந்தரிக்ஷா மையம் என்பது தற்போது செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வருவதால் இதற்காக எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை. போதுமான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்பு இதை திட்டமிடலாம் இதற்காக செலவு செய்யலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஸ்ரோ இதற்கான சாத்தியக்கூறுகளை எல்லாம் ஆய்வு செய்து நிலவுக்கு ரோபோக்களை அனுப்பும் திட்டத்தையும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் பூமியிலிருந்து நிலவிற்கு ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், அனுப்பப்பட்டு அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அவை நிலவிலிருந்து கிளம்பி மீண்டும் பூமிக்கு சாம்பிள்களுடன் பத்திரமாக இறங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதுபோக இஸ்ரோ தற்போது ககன்யான் திட்டத்தில் முக்கிய சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. ககன்யான் திட்டம் என்பது பூமியிலிருந்து மனிதர்களை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்று அங்கு ஆய்வுகள் நடத்தி மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டமாக இருக்கிறது.

இந்த திட்டத்தில் முதல் கட்ட சோதனை வெற்றியடைந்த நிலையில் 2ம் கட்ட சோதனை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த இரண்டு கட்ட சோதனைகளும் முடிவடைந்து விட்டால் அடுத்து 2025-ம் ஆண்டு துவக்கத்திலேயே ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமாக செயல்பட்டு தற்போது உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தற்போது பல்வேறு கட்ட ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் இந்தியாவுக்கான பிரத்தியேக விண்வெளி ஆய்வு மையம் குறித்த தகவல் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 8, 2024, 13:55 [IST]
English summary
Bharatiya antariksha station construction phases multiple phases planned
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+