தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை அமைக்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பாரத்மாலா 2.0 என்னும் பெயரில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின்மீது மற்றுமொரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டினால், எப்பேர்ப்பட்ட கரடு முரடான சாலைகளையும் மிக எளிதாக கடந்து விடலாம் என்ற கருத்து ஓட்டுநர்கள் யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். சாலை விபத்துக்களால் இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மூன்று பேர் இறப்பதாக தேசிய குற்ற ஆணைய காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

நாடு முழுக்க மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல், முறையற்ற பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகளை குறைக்கும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் விதமாகவும் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் 'பாரத்மாலா' என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திடத்தின்கீழ், நாடு முழுவதும் 6 ஆயிரத்து 741 கி.மீ., தொலைவுக்கு பசுமை வழிச்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

அதன்படி, தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே 277 கி.மீ., தூரத்துக்கு 8 வழி பசுமைச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டதின்மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஆகிய மாவட்டங்களில் சாலை அமையவுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

மேலும், இத்திட்டத்துக்காக ஆயிரத்து 900 ஹெக்டேர் அளவில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் விவசாயம், காடு, மலை உள்ளிட்ட பலதரப்பட்ட நிலங்களும் அடங்கும். ஆகையால் இத்திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் பல இடங்களில் அரசு அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இதன் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்றது. அப்போது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் வழக்குரைஞர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

அப்போது அவர், '8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய இருப்பதாகவும், அதுவரை நிலம் கையகம் செய்யப்படாது' என்றும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், 'தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது' என்று உத்தரவிட்டிருந்தனர்.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இதற்கிடையே, இத்திட்டத்தை நிறைவேற்றும் விதமாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பசுமை வழி சாலைத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிட்டது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆகிய மாவட்டங்களில் விடுபட்டநிலங்களை கையகப்படுத்த இருப்பதாக அறிவிக்கையில் தெரிவித்திருந்தது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ., தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்காகவும் அறிவிக்கை வெளியிட்டது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இந்நிலையில், பாரத்மாலா திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக உருவாக்கப்பட இருக்கும் எக்ஸ்பிரஸ் வழிச்சாலையின் பட்டியலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 4 ஆயிரம் கி.மீ., சாலையை 2024ம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலையாக உருவாக்க திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், வாரணாசி -ராஞ்சி-கொல்கத்தா, இந்தோர்-மும்பை, பெங்களூரு-புனே மற்றும் சென்னை-திருச்சி ஆகிய இடங்களில் பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இதற்காக ஆய்வு பணி மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னையில் இருந்து திருச்சி வரை 310 கி.மீ., தூரத்துக்கு புதிய சாலை அமைப்பதுக்கான ஆய்வுப்பணி தொடங்க உள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

இந்த புதிய திட்டமும் மாநிலங்களை இணைக்கும் வண்ணம் உருவாக இருப்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு இடையே உள்ள நீண்ட இடைவெளியை குறைக்கும் விதமாக சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சாலை செல்லும் பாதையில் உள்ள காடுகள், மலைகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இத்திட்டன்மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளது.

தமிழகத்தின் மீதான மோடி அரசின் அடுத்த சூழ்ச்சி??

ஏற்கனவே, சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசின் புதிய அறிவிப்புக்கு விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bharatmala 2.0 Focus On 4000 KM Greenfield Roads. Read in Tamil
Story first published: Monday, January 21, 2019, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X