மோட்டோ ஜிபி பாரத் போட்டியை இவர் நேர்ல போய் பாக்க போயிட்டாரா? இவருக்குள்ள இப்படி ஒரு முகம் இருக்குதா?
இந்தியாவில் முதன்முறையாக நடக்கும் மோட்டோ ஜிபி பாரத் போட்டியை ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் நேரில் சென்று பார்வையாளராக கலந்து கொண்டு பார்த்து ரசித்தார். இவர் ஏற்கனவே டூவீலர்கள் மீது அலாதியான பிரியம் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பைக் ரேஸ் போட்டியை நேரில் காண வந்திருந்தார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலக அளவில் மிக முக்கியமான ரேஸாக பார்க்கப்படுவது மோட்டோ ஜிபி போட்டிகள் தான். இந்த போட்டிகள் இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. இதுவரை இந்த போட்டி இந்தியாவில் நடந்தது இல்லை. இந்நிலையில் இந்திய அரசு இந்தியாவில் உள்ள பைக் ரைடர்களுக்கு ஆர்வத்தை கூட்டும் வகையில் இந்தியாவில் இந்த மோட்டோ ஜிபி போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி தற்போது நொய்டா பெருநகர பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் தற்போது மோட்டோஜிபி பாரத்-2023 என்ற பெயரில் பைக் ரேஸ் போட்டிகள் நடந்து வருகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாளை ஞாயிற்றுக்கிழமை தான் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியை காண ஆயிரம் கணக்கான மக்கள் தற்போது புத் இன்டர்நேஷனல் சர்க்யூடிற்க்கு நேரில் சென்று இந்த மோட்டார் பைக் பந்தயத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த போட்டியை நேரில் காண நொய்டாவிற்கு சென்று உள்ளார். அங்கு இவர் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று இந்த பைக் ரேஸ் பந்தயத்தை கண்டு ரசித்தார். இவருக்கும் பைக் ரைடிங்கிற்க்கும் மிகப்பெரிய தொடர்பு ஒன்று இருக்கிறது. இவரும் பைக் ரைடிங்கில் அலாதி பிரியம் கொண்டவர். தற்போதும் அடிக்கடி பைக்கில் இந்தியா முழுவதும் டூர் சென்று வருகிறார்.
இது குறித்து அவர் பேசும் போது: " இந்தியா பைக்குகள் நிறைந்த நாடாக இருக்கிறது. இந்திய மக்கள் பைக்குகளை மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு அவர்களது சக்தியை ஒரு விளையாட்டு போட்டியில் ஒரு சேலஞ்சிக்கான போட்டியில் கவனத்தை திருப்பி செய்து திருப்புவதற்கு இந்த பைக் ரேஸ் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
பலர் பைக் ரேஸ் பற்றி பேசும்போது இது மிகவும் ஆபத்தான விளையாட்டு என கருதுகின்றனர். ஆனால் சாலையில் பைக் ஓட்டுவது தான் டிராக்கில் பைக் ஓட்டுவதை விட ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. டிராக்கில் நடப்பது எல்லாம் ஒரு கண்ட்ரோலுக்குள் நடக்கிறது. இங்கே ஏராளமான விதிகள் இருக்கிறது. இந்த விதிகளை மீற முடியாது ஆனால் சாலையில் அப்படி அல்ல விதிகள் இருந்தாலும் அது அடிக்கடி மீறப்படுகிறது.
நான் எனது 18 வது வயது பூர்த்தியான உடனேயே டூவீலர் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுவிட்டேன். என்னை பொறுத்தவரை பைக் ஓட்டுவது என்பது ஒரு போக்குவரத்திற்கான சாதனமாக மட்டுமே பயன்படுத்துகிறேன். இதை நான் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக பயன்படுத்தவில்லை. இந்த லைசென்ஸ் பெற்ற பிறகு நான் இந்தியா முழுவதும் சுற்றி வர எனக்கு கிடைத்த சுதந்திரமாக இதை கருதினேன்.
நான் பலமுறை பைக்கில் இந்தியாவை சுற்றி வந்துள்ளேன். என்னிடம் சூப்பர் பைக் எல்லாம் கிடையாது. சாதாரண 250 சிசி, சிங்கிள் சிலிண்டர் பைக் தான் நான் வைத்துள்ளேன். நான் பைக்கில் இந்த இடத்திற்கு தான் பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்து பயணம் செய்ய மாட்டேன். என் மனம் போன போக்கில் போகிறேன். அப்படி செல்லும்போது இந்தியாவின் அழகையும் இயற்கை காட்சிகளையும் ரசித்துக் கொண்டே செல்வேன்" என கூறினார்.
மோட்டோ ஜிபி பாரத் போட்டிகளை பொருத்தவரை தற்போது 41 டீம்களில் 82 ரைடர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான பயிற்சி மற்றும் தகுதி சுற்றுகள் நடந்து வருகிறது .இந்த போட்டிக்கான இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி போட்டிகள் நடந்த பின்பு தான் வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் ரைடிங் மோகம் கொண்ட பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் உற்சாகமளிக்கும் வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த போட்டியில் கலந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பைக் ரைடிங் மோகத்திற்கு வயது ஒரு தடை இல்லை என்பதையும் இவர் நிரூபணம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








