ஊறுகாய் கம்பெனி ஆரம்பித்தவரின் வாழ்க்கை இப்போது... சாதாரணமான ஸ்கூட்டர் என்று நினைத்து விடாதீர்கள்!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. மற்ற ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், ரிஸ்டா ஆனது கொஞ்சம் வித்தியாசமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஃபேமலி ஸ்கூட்டர் என்கிற அடைமொழி உடன் தான் ரிஸ்டாவை ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்தது.

அந்த அளவிற்கு, மற்ற ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல் பவர்ஃபுல்லானதாக இல்லாமல், பட்ஜெட் விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ரிஸ்டா விளங்குகிறது. இதன் காரணமாகவே இந்த ஸ்கூட்டரை பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், வளர்ந்துவரும் இந்திய தொழிலதிபர் ஒருவர் ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

bhat n bhat owner sudarshan

அவர் வேறு யாருமில்லை... பாட் என் பாட் (Bhat N Bhat) என்கிற பெயரில் பாரம்பரிய இந்திய ஊறுகாய், துவையல்கள் போன்ற வீட்டில் தயாரிக்கும் உணவுகளை பாக்கெட் போட்டு விற்பனை செய்யும் நிறுவனத்தை நிறுவியவரான சுதர்சன் ஆவார். கேரளாவில் வசிக்கும் சுதர்சனும், அவரது சகோதரருமான மனோகர் பாட் என்பவரும் இணைந்து 2020இல் துவங்கிய நிறுவனம் தான் பாட் என் பாட் ஆகும்.

கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் இருந்த சமயத்தில் இவ்வாறான ஒரு தொழிலை துவங்குவதற்கான யோசனை கிடைத்ததாக இந்த சகோதரர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைக்கு, பாட் என் பாட்-இல் 12 தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் விலைகளும் ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே இருக்கிறது. ஆக, பாட் என் பாட் தற்போதைக்கு ஓர் சிறு வணிகமாகவே செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், பாட் என் பாட் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருவாயின் உதவியுடன் சுதர்சன் குடும்பத்தினர் புதியதாக ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். சுதர்சனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. மனைவி வந்த ராசி, தற்போது புதிய வாகனமும் வீட்டிற்கு வந்துள்ளது. ஏத்தர் ஷோரூம் ஒன்றில் புத்தம் புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சுதர்சன் அவரது சகோதரர் மற்றும் மனைவி உடன் டெலிவிரி பெறும் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பட்ஜெட் விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என நாங்கள் ஆரம்பத்தில் கூறினாலும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.37 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. எஸ், இசட் என 2 விதமான வேரியண்ட்களில் ஏத்தர் ரிஸ்டா விற்பனை செய்யப்படுகிறது. இதில், எஸ் வேரியண்ட் 2.9kWh பேட்டரி உடனும், இசட் வேரியண்ட் கூடுதலாக 3.7kWh பேட்டரி ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

bhat n bhat owner sudarshan

ரூ.1.37 லட்சத்தில் துவங்கும் ஏத்தர் ரிஸ்டாவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.1.65 லட்சம் வரையில் உள்ளன. இவை எல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரலாம். மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 2.9kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 105கிமீ வரையிலான ரேஞ்சையும், 3.7kWh பேட்டரி 125கிமீ வரையிலான ரேஞ்சையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. அதாவது, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் மேற்கூறப்பட்ட தொலைவிற்கு பயணிக்கலாம். ரிஸ்டா ஸ்கூட்டரின் இசட் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சமாக 7-இன்ச் வண்ண டிஎஃப்டி டிஸ்பிளே கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரை பாட் என் பாட் நிறுவனத்தின் நிறுவனர் சுதர்சன் எந்த வேரியண்ட்டில் வாங்கினார் என்பது தெரியவில்லை. இந்த புதிய ஸ்கூட்டர் நிச்சயமாக இவரது தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் ரிஸ்டாவில் நிறைய பொருட்களை எடுத்து செல்ல முடியும்.

Image Courtesy

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 23:52 [IST]
English summary
Bhat n bhat owner sudarshan buys ather rizta electric scooter check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+