படத்துல இருப்பவரா அந்த ஃபேமஸ் தங்க நகை கடையோட ஓனரு!.. வச்சிருப்பது போதாதுனு இந்த சொகுசு காரையும் வாங்கிட்டாரா!

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்ற சூழலில், ஓர் தங்க நகைக் கடை உரிமையாளர் காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நகைக் கடை உரிமையாளருக்கு அந்த ஆடம்பர டெலிவரி வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. வீடியோவை வெளியிட்டது யாரோ மர்ம நபர் அல்ல. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலரான பிஎம்டபிள்யூ இவிஎம் ஆட்டோகிராஃப்ட்-டே அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது.

நகைக் கடை உரிமையாளர் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 (BMW X1) மாடல் ஆகும். இந்த காரையே நகைக் கடை உரிமையாளர் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்தியாவின் புகழ்பெற்ற நகைக் கடைகளில் ஒன்றாக பீமா ஜுவல்லர்ஸ் உள்ளது. இதன் சேர்மேன் பி கோவிந்தன், இவரே புதிதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆடம்பர காரை வாங்கியவர் ஆவார்.

B govindan adds new bmw x1 to collection

இவரிடத்தில் ஏற்கனவே ஆடம்பர கார்கள் அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன. மஸேராட்டி குவாட்ரோபோர்டே (Maserati quattroporte), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி (Mercedes-Maybach GLS600 SUV) போன்ற கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதுமட்டுமல்ல, அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் (Aston Martin DBX), பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur V8), லெக்சஸ் இஎஸ் 300எச் (Lexus ES 300h) உள்ளிட்ட கார் மாடல்களையும் பீமா நகைக் கடை உரிமையாளர் பி கோவிந்தன் சொந்தக்காரராக இருக்கின்றார்.

இந்த நிலையிலேயே தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் மாடலையும் அவர் வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த கார் ரூ. 50 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலை உங்களுக்க மிக அதிகமாக தெரியலாம். ஆனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை லக்சூரி கார் இதுவே ஆகும்.

இதனால்தான், இது நாட்டின் அதிகம் விற்பனையாகும் சொகுசு காராகவும் காட்சியளிக்கின்றது. இதன் மூன்றாம் தலைமுறை வெர்ஷனே இப்போது சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. அடாஸ் மற்றும் கார் இணைப்பு போன்ற நவீன கால அம்சங்கள் பல இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. 136 எச்பி மற்றும் 230 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 150 எச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மோட்டார் இவையே எக்ஸ்1 காரில் வழங்கப்படும் மோட்டார் ஆப்ஷன்கள் ஆகும்.

இரு மோட்டாரிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட் ஆட்டோமேட்டிக் தேர்வு வழங்கப்படுகின்றது. இதன் பெட்ரோல் மோட்டார் லிட்டர் ஒன்றிற்கு 15.03 கிமீ மைலேஜையும், டீசல் 19.23 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதிகம் மைலேஜை வழங்கக் கூடியதாக டீசல் ஆப்ஷன் இருப்பதனால், அதையே இந்திய பணக்காரர்கள் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடல் எக்ஸ்1 என்பதன் பி கோவிந்தன் இந்த காரை வாங்கி இருப்பதனால் மீண்டும் உறுதியாகி இருக்கின்றது. இவர் சமீப காலமாக காரை தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே தற்போது விலை குறைவான பிஎம்டபிள்யூ காரை வாங்கி மொத்த இந்தியாவையும் அவர் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 15, 2025, 18:26 [IST]
English summary
Bhima group chairman b govindan expands luxury car collection with new bmw x1 acquisition
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+