எல்லா காருலையும் 777 நம்பர்தான்.. நாம கொடுத்த செய்கூலி, சேதாரம் எப்படி வேலை செய்யுது பாத்தீங்களா?..
பிரபல ஜுவல்லரி கடை உரிமையாளர் ஒருவர் வைத்திருக்கும் கார் கலெக்சனை வெளிக்காட்டக் கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோ கார் ஆர்வலர்கள் மத்தியில் காட்டு தீயை போல வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. இவ்வளவு கார்களை வைத்திருக்கும் அந்த நகைக் கடை உரிமையாளர் யார்? என்னென்ன கார் மாடல்களை அவர் வைத்து இருக்கின்றார்? என்பது போன்ற தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
வீடியோவைப் பார்த்த பலரும் நாம கொடுத்த செய்கூலி, சேதாரம் எப்படி வேலை பார்த்திருக்கு பாத்தீங்களா என புலம்பும் அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையிலேயே அந்த பிரபல நகைக் கடைக்காரர் ஆடம்பர கார்களை வைத்திருக்கின்றார். குறிப்பாக, அவர் வைத்திருக்கும் பெரும்பாலான கார்களில் 777 அல்லது 0777 என்கிற பதிவெண்ணேக் கொண்டிருக்கின்றன.

இதுவும் கார் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த பதிவெண்ணைக் கொண்ட கார்களுக்கு உரிமையாளர் வேறு யாருமல்ல பிரபல நகைக் கடையான பீமா ஜுவல்லர்ஸ்-இன் சொந்தக்காரர் பி கோவிந்தன் அவர் ஆவார். சாலைகளில் மிகவும் அரிதாகத் தென்படக் கூடிய கார் மாடல்கள் பலவற்றை இவர் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கின்றார்.
அந்தவகையில், மஸேராட்டி குவாட்ரோபோர்டே டீசல் கார் தொடங்கி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் வரை அவரிடத்தில் உள்ளன. மிக முக்கியமாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி (Mercedes-Maybach GLS600 SUV) போன்ற கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதுமட்டுமல்ல, அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் (Aston Martin DBX), பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur V8), லெக்சஸ் இஎஸ் 300எச் (Lexus ES 300h) போன்ற கார் மாடல்களுக்கும் இந்த நகைக் கடைக்காரர் உரிமையாளர் சொந்தக்காரராக இருக்கின்றார்.
இதில் சற்றே விலை குறைவான கார் மாடல் என்றால் அது லெக்சஸ் இஎஸ் 300எச் ஆகும். இதன் விலை எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 64 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். ஆன்-ரோடில் 70 லட்சத்தைக் கடக்க நேரிடலாம். அதேவேளையில், மிக மிக அதிக விலைக் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் இருக்கின்றது.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை இந்தியாவில் ரூ. 10 கோடியை நெருங்கும். இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே புல்லட் ப்ரூஃப் காராக இந்தியாவின் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி மாற்றியிருக்கின்றார். மேலும், இந்த ஒரு நபரிடத்தில் மட்டும் ரோல்ஸ் ராய்ஸ்-இன் இந்த ஒற்றை தயாரிப்பு மட்டும் 10 யூனிட்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அல்ட்ரா காஸ்ட்லியான காரையே பீமா நகைக் கடை உரிமையாளரும் வைத்திருக்கின்றார். கேரளா மாநிலத்தைப் பூர்வீமாகக் கொண்ட இந்த நபரிடத்தில் இன்னும் பல கார் மாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிலதே தற்போது அவரின் வீட்டு வாசல் முன் நின்றுக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









