இவரது செல்வாக்கிற்கு வீட்டிற்கே வந்து காரை டெலிவிரி பண்ணி இருக்காங்க! நகை கடை எம்டி என்றால் சும்மாவா
ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை பிடிக்காதவர்களே கிடையாது என சொல்லலாம். அந்த அளவிற்கு, கம்பீரமான உடலமைப்பு உடன் எவரொருவரையும் கவரக்கூடிய லக்சரி அம்சங்கள் உடன் ரேஞ்ச் ரோவர் கார்களை லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்குகிறது. மற்ற வெளிநாடுகளை போல், இந்தியாவிலும் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதற்கு பலர் விரும்பும் நிலையில், பிரபல கேரள நகை உரிமையாளர் ஒருவர் மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பான படங்கள் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன.
கேரளா, பல விஷயங்களுக்கு பிரபலமான மாநிலமாக விளங்குகிறது. அவற்றுள், தங்க ஆபரணங்கள் வியாபாரமும் ஒன்றாகும். கேரளாவில் இருந்து தோன்றிய மலபார் கோல்டு, ஜாஸ் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்றவை தான் இந்தியா முழுக்க தங்க ஆபரணங்கள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் உள்ள மற்றொரு பிரம்மாண்டமான கேரள நகைக்கடையான பீமா ஜூவல்லரி (Bhima Jewellery)-இன் நிர்வாக இயக்குனராக இருப்பவர், சுஹாஸ் (Suhas) ஆவார். 2023ஆம் ஆண்டில், கேரளா மாநிலத்தின் இளம் தொழிலதிபர் விருதை கேரள மாநில எம்.எல்.ஏ ஏ.என்.ஷாம்சீரிடம் இருந்து பெற்றவர் சுஹாஸ் ஆவார்.
இத்தகையவர்தான் தற்போது விலை உயர்ந்த பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளார். பீமா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் சுஹாஸ் வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Autobiography) கார் ஆகும். புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் சுஹாஸின் வீட்டிற்கே சென்று டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதிய காரை மனைவி காயத்ரி சுஹாஸ் உடன் சேர்ந்து பீமா ஜூவல்லரியின் எம்டி சுஹாஸ் அவர்கள் டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படங்களையும் சம்பந்தப்பட்ட லேண்ட் ரோவர் டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில், தொடர்பான ஆவணங்களில் சுஹாஸ் அவர்கள் கையெழுத்திடும் காட்சியும், காரை டெலிவிரி பெற்ற பின் மனைவி உடன் சுஹாஸ் கேக் வெட்டி கொண்டாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் எச்.எஸ்.இ, ஆட்டோபயோகிராபி மற்றும் எஸ்வி என 3 விதமான வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பீமா ஜூவல்லரி எம்டி வாங்கியிருப்பது ஆட்டோபயோகிராபி வேரியண்ட் ஆகும். சமீப காலமாக செல்வந்தர்கள் பலரால் வாங்கப்பட்டு வரும் ஆட்டோபயோகிராபி ஆனது ரேஞ்ச் ரோவரின் மிட்-வேரியண்ட் ஆகும்.

அதாவது, இதன் விலை மிகவும் அதிகம் கிடையாது; அதேநேரம் மிகவும் குறைவானதும் கிடையாது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.70 கோடியில் இருந்து ரூ.3.64 கோடி வரையில் உள்ளன. விற்பனையில் ரேஞ்ச் ரோவருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்.எம் கார் போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டிக்கு எத்தனை கார்கள் இருந்தாலும், ரேஞ்ச் ரோவருக்கு கிடைத்துவரும் வரவேற்பு தனி என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கூறியதுபோல், குறிப்பாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டை தான் பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். அதேபோல், இந்த காரை கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில்தான் பலரும் வாங்க விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications









