நாம வாங்கும் தங்கத்துல வரும் லாபத்தை பீமா ஜுவல்லரி ஓனர் எப்படி செலவு பண்ணியிருக்காரு பாருங்க! பணமாவே மதிக்கல!
தங்க நகை வியாபாரி ஒருவர் மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தங்க நகைக் கடை பீமா ஜுவல்லரி. இந்த தங்க நகைக் கடை கேரளாவில் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் பீமா கோவிந்தன். இவரே இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் (Mercedes Maybach GLS) சொகுசு எஸ்யூவி (SUV) ரக காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.
ஏற்கனவே அவரிடத்தில் பலதரப்பட்ட சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே மேலும் ஒரு அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மெர்சிடிஸ் சொகுசு காரை அவர் புதிதாக வாங்கி இருக்கின்றார். அவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ மற்றும் போர்ஷே போன்ற பலதரப்பட்ட ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவற்றின் வரிசையிலேயே தற்போது மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி இணைக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 3.35 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கேரளாவில் இதன் ஆன்-ரோடில், அதாவது, வரி, காப்பீடு மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட நிலையில் அதன் விலை ரூ. 4.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய உயரிய விலைக் கொண்ட காரையே பீமா ஜுவல்லரியின் ஓனர் பீமா கோவிந்தன் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த வாகனத்தை சொகுசு கார் என்பதற்கு பதிலாக அதை சாலையில் நடமாடும் சொகுசு கப்பல் என கூறலாம். அந்த அளவிற்கு மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களையும், தண்ணீரில் மிதப்பதைப் போன்ற பயண அனுபவத்தை வழங்கும் சிறப்பம்சங்களையும் அந்த கார் கொண்டிருக்கின்றது.
கேரளாவின் முன்னணி மெர்சிடிஸ் பென்ஸ் கார் விற்பனையாளரான பிரிட்ஜ்வே மோட்டார்ஸிடமிருந்தே தனக்கான காரை பீமா கோவிந்தன் வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் எஸ்யூவியின் 600 4 மேட்டிக் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இதில் 48V ஹைப்ரிட் அமைப்புடன் இணைந்து 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் எஞ்சினும் வழங்கப்பட்டு இருக்கும்.
9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 557 பிஎச்பி பவரையும், அதிகபட்சமாக 770 என்எம் டார்க்கையும் இந்த கார் மாடல் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.
அதேவேளையில், வெறும் 4.9 வினாடிகளில் அதனால் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். திறன் வெளிப்பாட்டில் மட்டுமல்ல சொகுசு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களிலும் மிக சிறந்த கார் மாடலாக பீமா கோவிந்தன் வாங்கிய இந்த கார் மாடல் உள்ளது.
அந்தவகையில், இரண்டு 12.3 அங்குல திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். இதுதவிர, பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக குட்டி குளிர்சாதனப் பெட்டி, சென்டர் கன்சோல், 4-மண்டல காலநிலை கட்டுப்பாடு, தானாக நீட்டிக்கும் பக்கவாட்டு படிகள், பனோரமிக் சன்ரூஃப், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ஹீட் மற்றும் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் இருக்கைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது.
இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், ஆக்டிவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரோனிக், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டிவ் ப்ளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் மெர்சிடிஸ் மேப்க் ஜிஎல்எஸ் 600-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பீமா கோவிந்தனின் புதிய மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி கார் அவருடைய கார்களின் சேகரிப்பிலேயே மிகவும் ஈர்க்கக்கூடிய ஓர் கார் மாடலாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் மாடலை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பயன்படுத்தி வருகின்றனர். அதேவேளையில், திரை பிரபலங்கள் மத்தியில் மிகவும் மிகவும் பிரபலமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








