அதிவேகத்தில் வந்த காரை நிறுத்த முயன்ற போலீஸ்காரர்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? ஷாக் வீடியோ...
அதிவேகத்தில் வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற காவல் துறை அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, காவல் துறை அதிகாரி மீது மோதியுள்ளது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. நேற்று காலை (மே 30) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

முக்கியமான ஜங்ஷன் ஒன்றில், காவல் துறை அதிகாரி போக்குவரத்தை சரியாக கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் அனைத்தும் சரியாகதான் நடந்து கொண்டிருந்தது. காவல் துறை அதிகாரியும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது.

எனவே அதனை நிறுத்துவதற்காக காவல் துறை அதிகாரி சென்றார். ஆனால் அந்த காரின் டிரைவர் காரை நிறுத்தவில்லை. அத்துடன் காவல் துறை அதிகாரி மீது அவர் காரை மோதினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காவல் துறை அதிகாரிக்கு காயம் ஏற்படவில்லை. சாலையில் கீழே விழுந்த அவர் உடனடியாக எழுந்து விட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றை அந்த காவல் துறை அதிகாரி நிறுத்தினார். பின்னர் அதில் ஏறி, தன் மீது மோதிய காரை துரத்தி சென்றார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. மத்திய பிரதேச காவல் துறை அதிகாரிகளும் இன்னும் இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும் அடையாளம் தெரியாத அந்த ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரியின் மீது மோதிய காரை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினாலும், அவர்களால் இன்னும் காரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஐபிசி24 செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களிலும் காவல் துறை அதிகாரிகள் மீது பலர் காரை மோதியுள்ளனர். இதில், சில சமயங்களில் காவல் துறை அதிகாரிகள் கார் பானெட்டின் மீது தவறி விழுந்து விட, ஓட்டுனர்கள் அப்படியே சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை ஓட்டி சென்ற கொடுமைகளும் அரங்கேறியுள்ளன.

காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் சலான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி காவல் துறை அதிகாரிகள், விதிமுறையை மீறிய வாகனத்தை புகைப்படம் மட்டும் எடுத்தால் போதுமானது. அதன்பின் அதில் உள்ள பதிவு எண் மூலமாக சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு சலானை அனுப்பி வைக்கலாம்.
அத்துடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் பாடி கேமராக்களை அணிந்து கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஏதாவது தவறு நடந்தால், அதனை முறையாக பதிவு செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வருங்காலங்களில் காவல் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








