சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இந்த நிறுவனத்தின் கார்களை சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட ஆர்வமாக வாங்குகின்றனர். கன்னட நடிகை நம்ரதா கௌடா (Namratha Gowda) இதற்கு ஒரு உதாரணம்.
இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) காரை வாங்கியிருந்தார். இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த வரிசையில் மற்றொரு பிரபலம் ஒருவர், எம்ஜி கார் நிறுவன உரிமையாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். அவர் ஆயிஷா கான் (Ayesha Khan) ஆவார். மாடலான (Model) இவர், பிக் பாஸ் 17 (Big Boss 17) நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாறியவர். நாங்கள் பேசி கொண்டிருப்பது ஹிந்தி (Hindi) பிக் பாஸ் ஆகும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) காரைதான், ஆயிஷா கான் தற்போது வாங்கியுள்ளார்.

இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். புதிதாக வாங்கியுள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில், ஆயிஷா கான் வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video)ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டது ஆகும்.
சினிமா அலுவலகம் ஒன்றுக்கு ஆயிஷா கான் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் வந்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆயிஷா கான் வாங்கியிருப்பது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின், ஷார்ப் ப்ரோ வேரியண்ட் (Sharp Pro Variant) என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆகும்.

அதிகபட்சமாக 167 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில், இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 22.51 லட்ச ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 6 லட்ச ரூபாய் அதிகமாக வரும். இதே வீடியோவில் இன்னும் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் (Bollywood Celebrities) மற்றும் அவர்களின் விலை உயர்ந்த கார்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. இதில், அனிமல் (Animal) திரைப்படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மிகவும் முக்கியமானவர்.
இவர் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) காரை புதிதாக வாங்கியுள்ளார். இந்த காரில் அவர் வரும் காட்சிகளை, வீடியோவின் இறுதியில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காரின் விலை சுமார் 6 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் என்றாலே, விலை உயர்ந்த கார்கள்தான் நம் மனதில் முதலில் தோன்றும் விஷயமாக இருக்கும். ஆனால் ஆயிஷா கான் வளர்ந்து வரும் பிரபலம் என்பதால், ஓரளவிற்கு விலை குறைவான எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரை வாங்கியுள்ளார்.
ஆனால் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார், ஆயிஷா கானுக்கு, சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) உள்ளிட்ட கார்களுடன், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








