முட்டி போட்டு கொடுத்ததுதான் ஹைலைட்டே.. அம்மாவுக்கு காஸ்ட்லியான காரை கிஃப்ட் செய்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தன்னுடைய அம்மாவிற்கு மிகவும் காஸ்ட்லியான காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். சஹட் பாண்டே, இவரே அம்மாவிற்கு காரை பரிசாக வழங்கி இருக்கும் அந்த பிக்பாஸ் பிரபலம் ஆவார். இந்தி பிக்பாஸ் 18 இல் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான கேரன்ஸ் (Carens) கார் மாடலையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும்.

இந்த கார் பரிசளிப்பால் நெட்டிசன்களின் மனதில் பிக்பாஸ்-க்கு பின்னர் மீண்டும் ஒரு முறை அவர் இடம் பிடித்திருக்கின்றார். குறிப்பாக, முட்டி போட்டு அந்த காரின் சாவியை அவரின் அம்மாவிடம் கொடுத்தது பலரின் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. அத்துடன், மிகப் பெரிய வரவேற்பை வழங்கியே இந்த காரை அவர் பரிசாக தந்திருக்கின்றார்.

Chahat pandey surprises mum with kia carens

கியா நிறுவனத்தின் கார்கள் கான்வாயாக அணிவகுத்து வந்து அவர்களை ஷோரூமுக்கு பிக்-அப் செய்து வந்தது கூடுதல் ஹைலைட்டாக பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல அந்த கான்வாயில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் சில கார்களும் இடம் பெற்றிருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே கேக் வெட்டுதல், காருக்கு பூஜை செய்தல் போன்ற கொண்டாட்டங்களுடன் பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சற்றே விலை குறைவான எம்பிவி ரக கார் மாடல்களில் கேரன்ஸ்-ம் ஒன்றாகும். இந்த கார் ரு. 12.24 லட்சம் தொடங்கி ரூ. 23.75 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது.

இது ஓர் 7 சீட்டர் எம்பிவி கார் மாடல் ஆகும். ஆகையால், குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர் செல்வோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அது பெற்று வருகின்றது. மொத்தமாக மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், பன்முக கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் இந்த கார் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.5 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

Chahat pandey surprises mum with kia car

கியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்த காரை நாட்டில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நல்ல டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் எம்பிவி கார் மாடலையே மிகப் பெரிய ஆடம்பரமான கொண்டாட்டத்துடன் தன்னுடைய அம்மாவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் பிக்பாஸ் பிரபலம் சஹத் பாண்டே. இது அவருடைய ரசிகர்களை மட்டுமல்ல மொத்த இணைய வாசிகளையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று கார் பரிசளிப்பு நிகழ்வு மிகப் பெரிய கொண்டாட்டத்துடன் செய்யப்படுவது முதல் முறையல்ல ஏற்கனவ இதுமாதிரியான நிகழ்வுகள் பல அரங்கேறி இருக்கின்றன. ஆனால், அவற்றில் இது சற்றே வித்தியாசமானதாக உள்ளது. இதனால்தான் தற்போது பார்வையாளர்களை அது வெகுவாக கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 16:16 [IST]
English summary
Bigg boss 18 star chahat pandey surprises her mother with a new kia carens mpv
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+