பிக்பாஸ் வீட்டுக்கு போய்ட்டு வந்தாலே புதுசா கார் வாங்கிடலாம் போலயே!! 10 லட்ச ரூபாய் காரை வாங்கியது இந்த நடிகரா

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தாலே புதியதாக கார் வாங்கிவிடலாம் போல. ஏனெனில், சமீப மாதங்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் நிறைய பேர், போட்டியை முடித்து வெளிவந்த பின் புதியதாக கார் வாங்குவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, கன்னட பிக்பாஸில் கலந்துக் கொண்டவர்கள் வெளியே வந்த உடனேயே கார் வாங்கும் வேலைகளில் ஈடுப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, கன்னட பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துக் கொண்டு, அதன் மூலம் பிரபலமாகி உள்ள துகாலி சந்தோஷ் என்பவர் புதியதாக கியா செல்டோஸ் (Kia Seltos) காரை வாங்கி உள்ளார். துகாலி சந்தோஷ் தனது மனைவி மானசா மற்றும் குடும்பத்துடன் அருகில் உள்ள கியா ஷோரூமில் செல்டோஸ் காரை டெலிவிரி எடுக்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

bigg boss fame buys seltos

திரைப்பட நகைச்சுவை நடிகரான துகாலி சந்தோஷ் புதிய கார் வாங்கியிருப்பதை மிகவும் சந்தோஷத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் துகாலி சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி உடன் காரை டெலிவிரி எடுத்து இருப்பதை காண முடிகிறது.

மேலும், இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "கனவு நினைவாகி உள்ளது" என துகாலி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த கன்னட நடிகரின் உண்மையான பெயர் சந்தோஷ் குமார் ஆகும். துகாலி என்கிற கன்னட படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமாகியதால், அந்த படத்தின் பெயர் அப்படியே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது. புதிய கார் வாங்கியதற்காக திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் துகாலி சந்தோஷ்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் வெள்ளை நிறத்தில் கியா செல்டோஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் புதியதாக நுழைந்த தென்கொரியாவை சேர்ந்த கியா முதலாவதாக அறிமுகப்படுத்திய கார் செல்டோஸ் ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு தென்கொரியா உள்பட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் செல்டோஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து கொண்டிருந்த சமயம் அது.

அதன்பின், கடந்த 5 வருடங்களில் கியா செல்டோஸ் கார் பல்வேறு அப்டேட்களுக்கு உள்ளாகி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் கூட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அப்டேட்டட் செல்டோஸ் காரை தான் தற்போது கன்னட நகைச்சுவை நடிகர் துகாலி சந்தோஷ் வாங்கியுள்ளார். முந்தைய செல்டோஸ் காருடன் ஒப்பிடுகையில், புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

bigg boss fame buys seltos

கியா செல்டோஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.90 லட்சத்தில் இருந்து ரூ.20.30 லட்சம் வரையில் உள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் செல்டோஸ் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு செல்டோஸில், 17 ஆப்ஷன்களை கொண்ட அடாஸ், பனோராமிக் சன்ரூஃப், முன் வெண்டிலேட்டட் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ட்யூயல்-ஸோன் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ஏசி, 8 ஸ்பீக்கர்கள் உடன் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் 8-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உள்ளிட்டவற்றை கியா நிறுவனம் வழங்குகிறது.

bigg boss fame buys seltos

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கியா எஸ்யூவி காரின் விலை பெரியதாக அதிகம் கிடையாது. ஆதலால், ஒரு நடிகருக்கு இந்த காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாக இருக்காது என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், கன்னட நடிகர் துகாலி சந்தோஷ் இப்போதுதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறார். அப்படிப்பட்டவருக்கு ரூ.10 லட்சத்திற்குள் மேல் ஒரு காரை வாங்குவது என்பது பெரிய விஷயமே.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2024, 12:57 [IST]
English summary
Bigg boss fame actor buys new kia seltos suv car wishes from across social media
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X