பிக்பாஸ் வீட்டுக்குள் போய்ட்டு வந்தால் போதும் போலயே! 20 லட்ச ரூபா காரை சத்தமே இல்லாமல் வாங்கிய பிரபலம்!!

பிக்பாஸ் (Bigg Boss), மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியா வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி. நம் நாட்டு மக்களிடை மிகுந்த வரவேற்பை பெற்றதால், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் தற்சமயம் 8வது சீசன் பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. எல்லா மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி, மற்ற துறையை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். தமிழ் பிக்பாஸ் சீசன்-8இல் சில பேச்சாளர்கள் கலந்துக் கொண்டிருப்பதை போன்று.

அந்த வகையில், 2018ஆம் ஆண்டில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்துக் கொண்டவர், சமீர் ஆச்சார்யா (Sameer Acharya). உண்மையில் இவர் புரோகிதர் ஆவார். விஐபி (VIP)-கள் மற்றும் பணக்காரர்களுக்கு புரோகிதம் பார்த்து கர்நாடகா மாநிலத்தில் பிரபலமானவராக விளங்கியதன் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பை பெற்றார், சமீர் ஆச்சார்யா.

biggboss fame buys mg zs

ஆரம்பத்தில், மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுடன் எந்நேரமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சமீர் ஆச்சார்யா, அதனால் விரைவாகவே வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீசனின் கடைசி வாரத்தில்தான் எலிமினேட் (Eliminate) செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 99 நாட்களுக்கு தாக்குப் பிடித்தவர், முடிவில் 6வது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட பின்னர் சமீர் ஆச்சார்யாவின் புரோகிதம் தொழில் மேலும் பிரபலமாகியது என்றுதான் வேண்டும். இடையில் சமீர் ஆச்சார்யாவின் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு, அது செய்திகளில் வெளிவந்த போதிலும், அவரது வாழ்க்கை செழிப்பாகவே சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு சாட்சியாக, தற்போது விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கியுள்ளார்.

biggboss fame buys mg zs

சமீர் ஆச்சார்யா புதியதாக வாங்கியிருப்பது, எம்ஜி இசட்.எஸ் இவி (MG ZS EV) எலக்ட்ரிக் கார் ஆகும். சில்வர் (Silver) நிறத்திலான பிராண்ட்-நியூ இசட்.எஸ் இவி காரை சமீர் ஆச்சார்யா ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், டெலிவிரி பெற்ற பின் காருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் சமீர் ஆச்சார்யா வெளியிட்டுள்ளார்.

எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும். 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு 2022 மார்ச் மாதத்தில் அப்கிரேட் செய்யப்பட்டது. இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.18.98 லட்சத்தில் இருந்து ரூ.25.75 லட்சம் வரையில் உள்ளன.

எம்ஜி இசட்.எஸ் இவி காரில் 50.31kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 461கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். ஸ்டார்ரி பிளாக், டார்க் க்ரீன், அரோரா சில்வர், கிளேஸ் ரெட் மற்றும் கேண்டி வெள்ளை என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் சமீர் ஆச்சார்யா வாங்கியிருப்பது அரோரா சில்வர் நிறத்தில் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீர் ஆச்சார்யா வாங்கியிருப்பது எம்ஜி இசட்.எஸ் இவி காரின் எந்த வேரியண்ட் என்பது தெரியவில்லை. ரூ.18.98 லட்சத்திலான விலை குறைவான வேரியண்ட்டை வாங்கியிருந்தாலும், அது எக்ஸ்-ஷோரூம் விலை என்பதை மறந்துவிடாதீர்கள். ஆன்-ரோடு விலை ரூ.21 லட்சத்திற்கு வந்துவிடும். விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்கியிருந்தால் அதன் ஆன்-ரோடு விலை ரூ.28 லட்சம் அளவில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 22:40 [IST]
English summary
Bigg boss fame sameer acharya buys mg zs ev electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+