புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

சொகுசு கார்களை யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் கனவு கார் என்று ஒரு சொகுசு கார் இருக்கும்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

பலருக்கு அந்த கனவு இன்னும் நினைவாகி இருக்காது. ஆனால் சிலரோ அசாதாரணமாக சொகுசு கார்களை வாங்குவர். குறிப்பாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் புதிய புதிய சொகுசு கார்களை வாங்குவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

இந்த வகையில் உலகளவில் பிரபலமான மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். ஷாஷி குமார், இந்த பெயரை எங்கேயும் கேள்விப்படாதது போல் தோன்றாலாம்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

ஏனெனில் இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொண்டவர். மேலும் இந்த சீசனின் வெற்றியாளருமான இவர் மிக சமீபத்தில் சிவப்பு நிறத்தில் மினி கூப்பர் காரை டெலிவிரி எடுத்துள்ளார்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "எனது கனவு கார்களில் ஒன்று இப்போது எனது வீட்டில் உள்ளது. எனது முதல் கார் ஆம்னி, நான் கடைசியாக வாங்கியுள்ள கார் மினி" என குறிப்பிட்ட்டுள்ளார்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

கர்நாடகாவில் வெவ்வேறு விதமான விவசாய பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுத்தத்தின் மூலம் பிரபலமான ஷாஷி குமார், இதன் மூலம் கன்னட பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் நுழைந்தார்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

அங்கிருந்து வெளியே வந்த பின்பு தொடர்ந்து விவசாய பிரச்சனைகளில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறது. இதன்படி விவசாய உரங்களின் விலை அதிகரிப்பை கண்டித்து ஷாஷி குமார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

இதற்கிடையில் அவ்வப்போது சினிமா படங்களிலும் ஷாஷி குமார் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவலினாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதினாலும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடிப்பில் ஈடுப்படாமல் இருந்த இவர், சுகர் ஃபேக்ட்ரி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவுகளினால் பாதியில் இருக்கும் மெகபூபா படத்திலும் நடித்து முடித்து கொடுக்கவுள்ளதாக ஷாஷி குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்சமயம் 4 மினி கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

இதில் ஷாஷி குமார் வாங்கியுள்ள மினி கூப்பர் மாடல் கூப்பர் எஸ் 3 கதவு, பட்டி ஹாப்கிர்க் எடிசன் மற்றும் ஜே.சி.டபிள்யூ என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.34.77 லட்சத்தில் இருந்து ரூ.43.90 லட்சம் வரையில் உள்ளன.

புதியதாக மினி காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!! கனவு நிஜமாகியதாக நெகிழ்ச்சி பதிவு!!

சுமார் 11 விதமான நிறங்களில் கிடைக்கும் மினி கூப்பர் கார்கள் முழுவதும் உருவாக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கூப்பர் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BiggBoss Kannada Winner Shashi Bought Car. Read All Details In Tamil.
Story first published: Monday, April 19, 2021, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X