நம்ம பிக்பாஸ் மணியா இது? அதுக்குள்ள இவ்வளவு சம்பாதிச்சிட்டாரா? காஸ்ட்லியான காரை வாங்கி மாஸ் பண்ணுறாரு!
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான நடிகரும், நடன கலைஞருமான மணி சந்திரா தற்போது சொந்தமாக மஹிந்திரா நிறுவனத்தின் கார் காரை வாங்கி உள்ளார். இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 17.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்கி உள்ளது குறித்து அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ளே அவர்கள் செய்யும் வேலைகளை எல்லாம் மக்கள் பார்த்து அதன் மூலம் மக்கள் குறிப்பிட்ட நபர்களின் ரசிகர்களாக மாறி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக வந்தவர் தான் மணி சந்திரா. இவர் பிக்பாஸ் சீசனில் பங்கேற்று வீட்டுக்குள் பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர். இவர் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் நடனமாடி காட்டிய சம்பவங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வைரலாக பரவியது.
பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை வைத்து இவர் தற்போது பல்வேறு விதமான சினிமா பணிகளை செய்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. இதை பயன்படுத்திய அவர் தனது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டார். இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்கி உள்ளார்.

இந்த காரை அவர் வாங்கியது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் கார் ஷோரூம் உள்ளே செல்வது போலவும், அங்கு தேவையான ஆவணங்களில் கையொப்பமிட்டு இவரிடம் காரின் சாவி ஒப்படைக்கப்படுவதையும், மேலும் கார் சிவப்பு நிற துணியால் மூடப்பட்டு இருப்பதையும், அதை இவரே திறப்பது போலவும், பின்னர் அவரோ காரை சாலை ஓட்டி செல்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து பிக்பாஸ் புகழ் மணி சந்திராவிற்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவர் தனது நடனம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கும் நிலையில், அவர்களும் தற்போது இவரது இந்த முன்னேற்றம் குறித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் காஸ்டிலியாக வாங்கிய இந்த கார் தான் பலர் பேச்சாக இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை தான் இவர் வாங்கியுள்ளார். இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் காராகும். இது ஒரு ஆஃப் ரோடு எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மொத்தம் 17 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. கியரிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 11.25 லட்சம் முதல் ரூபாய் 17.60 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் சிறப்பம்சமே இந்த காரின் ரோடு பிரசென்ஸ் தான். இந்த கார் சாலையில் செல்லும்போது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இதன் வடிவமைப்பு இருக்கும். இந்த காருக்கு என ஒரு தனி ரெகார்ட் லுக் இருக்கிறது ஆஃப் ரோட்டில் பயணிப்பதற்கான பல்வேறு அம்சங்களும் இந்த காரில் உட்பகுத்தப்பட்டுள்ளன.
இந்த கார் ஒரு ஆஃப் ரோடு அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி கார் என்பதால் இதில் டூவீல்மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான ஆப்ஷன்களும் உள்ளன. மக்கள் அவர்களை தேவைக்கு ஏற்ப இரண்டு ஆப்ஷன்களின் தேர்வுகளை செய்து கொள்ள முடியும்.
இந்த கார் ஆஃப் ரோடு எஸ்யூவி கார் என்பதால் அதற்கு ஏற்றார் போல் இதில் லோ ரேஞ்ச் சிஸ்டம், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் சிறப்பான அப்ரோச் ஆங்கிள், ஆஃப் ரோடுக்கு தகுந்த டயர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிக்பாஸ் புகழ் மணிச்சந்திரா வாங்கிய இந்த மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் ஒரு ரக்கெட் லுக் கொடுக்கும் என்பதால் பல பிரபலங்கள் இந்த காரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்த காரை வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்த மணிச்சந்திரா இந்த காரை தற்போது வாங்கியுள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


Click it and Unblock the Notifications









