இவ்வளவு சின்ன வயசுல எத்தனை சாதனைகள்!! கார்கள் கொட்டி கிடக்குது... யார் இந்த எல்விஷ் யாதவ்?

பிக்பாஸ் ஒடிடி2 டைட்டில் வின்னர் எல்விஷ் யாதவ் வைத்திருக்கும் சொகுசு கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். யூடியூப்பராக தனது பயணத்தை துவங்கிய எல்விஷ் யாதவ் குறுகிய காலத்திலேயே பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை தனதாக்கி உள்ளார். சொகுசு கார்களாக இவரிடம் 3 கார்கள் உள்ளன.

போர்ஷே 718 பாக்ஸ்டர்: எல்விஷ் யாதவ் வைத்திருக்கும் மிகவும் விலையுயர்ந்த கார் இதுதான். இந்தியாவில் இந்த போர்ஷே காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 கோடியாக உள்ளது. ட்ராப்-டாப் ரோட்ஸ்டர் காரான 718 பாக்ஸ்டர் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் இரு டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

elvish yadav luxury cars collection

2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல், 2.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 4.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் என்பன அந்த 3 என்ஜின் ஆப்ஷன்களாகும். இவை அதிகப்பட்சமாக 300 பிஎஸ்-இல் இருந்து 450 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என 2 விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ53 காப்ரியோலெட்: பிக்பாஸில் வெற்றி பெற்ற கொண்டாட்டத்தில், சமீபத்தில் எல்விஷ் யாதவ் வாங்கிய கார் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ53 காப்ரியோலெட் ஆகும். இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.30 கோடியாக உள்ளது. பொதுவாகவே, மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி கார்கள் ஆற்றல்மிக்கவை ஆகும்.

elvish yadav luxury cars collection

அதாவது, ஸ்டாண்டர்ட் மெர்சிடிஸ் இ-கிளாஸ் காரின் ஸ்போர்டியர் வெர்சன் தான் இ53 காப்ரியோலெட் ஆகும். ஆனால், வழக்கமான இ-கிளாஸ் செடான் காரை விட இதன் நீளம் குறைவு. காரில் 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 430 பிஎஸ் மற்றும் 520 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்: இந்தியாவில் பிரபலமான டொயோட்டா கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் ஃபார்ச்சூனரும் ஒன்றாக இருக்கும். ஃபார்ச்சூனரின் விலைமிக்க லெஜண்டர் வெர்சனை எல்விஷ் யாதவ் கொண்டுள்ளார். இந்தியாவில் ஃபார்ச்சூனர் லெஜண்டர் 4X2 மற்றும் 4X4 என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

elvish yadav luxury cars collection

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.43.66 லட்சம் மற்றும் ரூ.47.64 லட்சம் ஆகும். இந்தியாவில் ஃபார்ச்சூனரில் 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை டொயோட்டா நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு இளம் வயதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனது மட்டுமின்றி, 3 சொகுசு கார்களுக்கு ஓனராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இதனை எல்விஷ் யாதவ் மிக சிறப்பாக செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். நம் தமிழ் மக்கள் சிலருக்கு எல்விஷ் யாதவ் யார் என்று தெரியாமல் இருக்கலாம். வட இந்தியாவில், நம்ம ஊர் யுடியூப் பிரபலமான மதன் கௌரியை போன்றவர் எல்விஷ் யாதவ் ஆவார்.

Article Published On: Friday, November 3, 2023, 20:26 [IST]
English summary
Bigg boss ott2 title winner elvish yadav luxury cars collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X