அப்பா சொல்ல சொல்ல கேட்காமல் சினிமாவுக்கு வந்தவர்... மஹிந்திரா கார் உடன் இப்போ வாழ்க்கையே மாறிவிட்டது!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். சமீபத்தில்தான் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் சமீபத்தில், கடந்த மார்ச் மாதத்தில்தான் துவங்கப்பட்டன. இந்த கார்களின் விலைமிக்க வேரியண்ட்களின் டெலிவிரிகள் (Deliveries) மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. இதனாலேயே இவற்றை டெலிவிரி பெற்று வருபவர்கள் எல்லாருமே செல்வந்தர்களாகவும், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களாகவும் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது இந்த எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றை டெலிவிரி பெற்றிருப்பவர், ஒரு பிக்பாஸ் (BiggBoss) பிரபலம் ஆவார். அவரது பெயர், முகமது திலிஜெண்ட் பிலெஸ்லீ (Muhammad Diligent Blesslee). இப்படியொரு பெயரில் பிக்பாஸ் போட்டியாளரை கேள்விப்பட்டதே இல்லையே என உங்களுக்கு தோன்றலாம். இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த 27 வயதான பிலெஸ்லீ, 'பீசீக்கா' (Becheeka) என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளராக வளர்ந்துவரும் பிலெஸ்லீ, தனது வித்தியாசமான குணாதியசங்களால் மற்றவர்களிடம் இருந்து வேறுப்படுகிறார். ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவராக விளங்கும் பிலெஸ்லீ, தினந்தோறும் யோகா (Yoga) பயிற்சிகளை மேற்கொள்வதுடன், தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உண்கிறார்.
இவ்வாறு மிகவும் கட்டுக்கோப்பான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பதினாலேயே 2022ஆம் ஆண்டில் மலையாள பிக்பாஸ் வீட்டிற்கு அழைக்கப்பட்ட பிலெஸ்லீ போட்டியின் கடைசி 99வது நாள் வரையில் தாக்குப்பிடித்து 2வது இடத்தை பிடித்தார். அதன்பின் பிலெஸ்லீயின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் வெளிப்பாடாகவே தற்போது மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ பிஇ 6 எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெறுவதை வீடியோவாக காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பிலெஸ்லீ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான இன்ஸ்டா பதிவில், வேறு யாருக்கோ வாழ்த்து தெரிவிப்பதுபோல தனக்கு தானே பிலெஸ்லீ வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிக்பாஸ் ரன்னர்-அப் பிலெஸ்லீ புதிய பிஇ 6 எலக்ட்ரிக் காரை முற்றிலும் ஆரஞ்ச் நிறத்தில் வாங்கி உள்ளார். இதனை 'ஃபையர்ஸ்டோர்ம் ஆரஞ்ச்' (Firestorm Orange) என அழைக்கின்றனர். இது இல்லாமல், டாங்கோ சிவப்பு, ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரஸ்ட், டெசர்ட் மிஸ்ட் சாடின், டெசர்ட் மிஸ்ட் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை நிற பெயிண்ட் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் 2, பேக்-3 செலெக்ட், பேக்-3 என 5 விதமான வேரியண்ட்களில் பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கலாம். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் மஹிந்திரா நிர்ணயித்து உள்ளது. இதில், ரூ.26.90 லட்சம் விலை கொண்ட பேக்-3 வேரியண்ட்டின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன.
ஆதலால், மலையாள பிக்பாஸ் பிரபலம் பிலெஸ்லீ வாங்கியிருப்பதும் பேக்-3 வேரியண்ட் ஆகவே இருக்கும். இதனை தொடர்ந்து பேக்-3 செலெக்ட் வேரியண்ட்டின் டெலிவிரிகள் ஜூன் மாதத்தில் இருந்தும், மற்ற வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஆகஸ்ட்க்கு பின்பும் துவங்கப்பட உள்ளன. அதன்பின், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பரவலாக சாலைகளில் அதிகம் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இசையமைப்பாளர் பிலெஸ்லீக்கு புது, புது வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இவரது அப்பா பிலெஸ்லீயை மருத்துவராக ஆக்கி பார்க்கவே ஆசைப்பட்டுள்ளார். ஆனால், பிலெஸ்லீ இவ்வாறு சினிமா பாதையை தேர்வு செய்ததினால், தந்தை- மகன் இடையே நீண்ட வருடங்களாக நெருங்கிய உறவு இல்லை. ஆனால், இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் காரை பார்த்தால் பிலெஸ்லீயின் தந்தை கொஞ்சம் மனசு மாறுவார் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









