சொன்னதை செய்துக்காட்டிய பிக்பாஸ் பிரபலம்!! டைட்டில் உண்மையில் இவருக்குதாங்க கொடுத்து இருக்கணும்...!
பிக்பாஸ் (Bigg Boss) போட்டியில் வென்ற பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வேறொரு நபருக்கு பரிசாக வழங்கி பார்ப்போரை போட்டியாளர் நெகிழ வைத்துள்ளார். யார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்? எதற்காக தனது பரிசை வேறொருவருக்கு வழங்கியுள்ளார்? என்பது போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை இனி பார்க்கலாம்.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ், 7 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. 7வது சீசனின் வெற்றியாளராக அர்ச்சனா சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டார். தமிழ் பிக்பாஸ் 2017ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆனால், கன்னட பிக்பாஸ் 2014இல் இருந்து கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

கன்னட பிக்பாஸின் 10வது சீசனின் இறுதிச்சுற்று போட்டியாளர்களுள் ஒருவராக தேர்வாகியவர் பிரதாப். 'ட்ரோன் பிரதாப்' என அழைக்கப்படும் இவர் ட்ரோன்களை உருவாக்கி விற்பனை செய்யும் தொழிலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலமாக, கர்நாடகாவில் பலரால் அறியப்படக்கூடிய நபராக உருவெடுத்ததை அடுத்து, அந்த பிரபலத்தின் மூலமாக கன்னட பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
ட்ரோன் பிரதாப், கன்னட பிக்பாஸ் சீசன் 10-இன் டைட்டில் வின்னர் ஆகுவார் என்ற அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார்த்திக் மகேஷ் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ட்ரோன் பிரதாப் 2வது இடத்தை பிடித்தார். இதற்காக, ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பவுன்ஸ் நிறுவனம் உருவாக்கும் இன்ஃபினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் பிரதாப்புக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வேறொரு நபருக்கு ட்ரோன் பிரதாப் பரிசாக வழங்கியுள்ளார். தன்னை விட அந்த நபருக்கே ஒரு ஸ்கூட்டர் அவசியம் தேவைப்பட்டதால், தனது ஸ்கூட்டரை ட்ரோன் பிரதாப் பரிசளித்துள்ளார். மேலும், இதுகுறித்த பதிவையும் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ளார்.
பிரதாப்பின் இதுகுறித்த இன்ஸ்டா பதிவில், "பிக்பாஸில் வென்ற பைக்கை யாருக்கு பரிசாக கொடுப்பது? என்ற கேள்விக்கான பதில் இதோ. அவர் ராஜூ, மதியம் முதல் மாலை வரை ஹோட்டலில் வேலை செய்கிறார். மாலையில் உணவு விநியோகம் செய்கிறார். அவர் தனது நண்பரின் பெயரில் ஒரு காரை எடுத்து அதற்கு மாதத்தவணை செலுத்தி வந்தார்.
ஆனால் அவரது நண்பரின் மோசடியால், அவரது பைக்கை வங்கி பறிமுதல் செய்தது. அதனால், எனக்கு வெகுமதியாக கிடைத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவருக்கு கொடுத்தேன். நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரை பெறும் அந்த நபரது படங்களையும் ட்ரோன் பிரதாப் தனது இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கன்னட பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன் பலரும் ட்ரோன் பிரதாப்பை இணையத்தில் கிண்டலடித்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்பும் சில போட்டியாளர்கள் பிரதாப்பை கிண்டலடிக்கும் விதமாக பேசினர். அதையெல்லாம் தாண்டிவந்து, போட்டியில் 2வது இடத்தை இவர் பிடித்தார். 10வது சீசனின் கடைசி நாளில் வெற்றியாளரை அறிவிக்கும்முன், தான் வெல்லும் அனைத்து பரிசுகளையும் நன்கொடையாக வழங்கிவிடுவேன் என மேடையில் ட்ரோன் பிரதாப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பெரிய ஞானமா... என நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அதேவேளையில், மறுப்பக்கம் ட்ரோன் பிரதாப் செய்வது எல்லாம் உண்மைதானா என்ற சந்தேகமும் வராமல் இல்லை. ஏனெனில், முறையாக அனுமதி பெறாமல் ட்ரோன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதாக பிரதாப் மீது ஏற்கனவே ஒரு புகார் உள்ளது. தான் வென்ற ரூ.10 லட்சம் பரிசுத் தொகையையும் ஏழை, எளியோருக்கு பிரதாப் வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், யாருக்கு வழங்கினார்? எப்போது வழங்கினார் என்பது குறித்த விபரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications








