யாரென்று தெரியுதா!! பிக்பாஸ் டைட்டில் வின்னர்... 1.70 கோடி ரூபாய் காரில் ஜாலியா போறாரு!

பிக்பாஸ் (Bigg Boss) 17வது சீசனின் வெற்றியாளர் புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழில் பிக்பாஸ் இன்னும் அத்தனை சீசன் போகவில்லையே? என நீங்கள் கேட்பது புரிகிறது. இது ஹிந்தி பிக்பாஸ் ஆகும். யார் அந்த வெற்றியாளர்? அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் கார் என்ன? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தி பிக்பாஸ் 17வது சீசனின் வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி (Munawar Faruqui). நகைச்சுவை நடிகரான ஃபரூக்கி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார். அதாவது, நம்ம ஊர் காமெடி நடிகர் புகழை போன்று. ஆனால், ஃபரூக்கி குஜராத், மஹாராஷ்டிரா என பல இந்திய மேற்கத்திய மாநிலங்களில் பரவலாக மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

munawar faruqui s range rover sport

இந்தி பிக்பாஸ் 17வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட முனாவர் ஃபரூக்கி டைட்டில் கார்டை வென்றது மட்டுமின்றி, ரூ.50 லட்சம் பணத்தையும் பரிசாக பெற்றார். இதனால் தொடர்ந்து முனாவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காமெடி நடிகர் முனாவர் ஃபரூக்கி, புதியதாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரை வாங்கியுள்ளார்.

வாங்கிய புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் இருந்து வெளியே வந்து முனாவர் ஃபரூக்கி நடந்து செல்லும் வீடியோ ஒன்று புதியதாக வெளியாகி உள்ளது. ஃபரூக்கி புதிய கார் வாங்கி இருப்பதற்கு இந்தி நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், ஃபரூக்கி இப்படிப்பட்ட ஒரு ரேஞ்ச் ரோவர் கார் வாங்கியிருப்பதை அந்த நடிகர் தான் வீடியோ மூலமாக தெரிவித்தார்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை கருப்பு நிறத்தில் ஃபரூக்கி வாங்கியுள்ளார். இந்தியாவில், மொத்தம் 7 வெவ்வேறு விதமான கருப்பு நிறங்களில் இந்த ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த கருப்பு நிறத்தில் இவர் காரை வாங்கியுள்ளார் என்பதை இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவின் மூலமாக அறிய முடியவில்லை. அதேபோல், இந்தியாவில் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்.இ டைனமிக், எச்.எஸ்.இ டைனமிக் மற்றும் ஆட்டோபயோகிராபி என்பன அவை ஆகும். இதில் எந்த வேரியண்ட்டை ஃபரூக்கி வாங்கியுள்ளார் என்பதும் தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்டின் இந்த வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.70 கோடியில் இருந்து ரூ.1.87 கோடி வரையில் உள்ளன. இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் மட்டுமே இந்த ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகிறது.

munawar faruqui s range rover sport

கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் அப்டேட் செய்யப்பட்டது. இந்த லக்சரி எஸ்யூவி காரில் பொருத்தப்படும் ஆற்றல்மிக்க 3.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ரேஞ்ச் ரோவர் காரின் டாப்-ஸ்பீடு 234kmph ஆகும்.

இந்த காரில் 22 இன்ச்சில் டார்க் கிரே நிறத்தில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 13.1 இன்ச்சில் மற்றும் 13.7 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் டிரைவர் இருக்கையை எலக்ட்ரிக் மூலமாக எளிதாக 22 விதமாக தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இந்தியாவில் விற்பனையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காருக்கு ஆடி ஆர்.எஸ் க்யூ8 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட கார்கள் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முனாவர் ஃபரூக்கி காமெடி நடிகர் மட்டுமல்ல, நல்ல பாடகரும் கூட. ராப் பாடல்களை பாடுவதையும் தொழிலாக வைத்துள்ளார். இத்தனை திறமைகளை ஒருசேர வெளிக்காட்டுவதினால் தான் இவ்வளவு சிறிய வயதிலேயே சுமார் ரூ.1.70 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை இவரால் வாங்க முடிந்தது. மனைவி மற்றும் மகனை வெளியில் அழைத்து செல்ல முனாவருக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 8:00 [IST]
English summary
Bigg boss title winner munawar faruqui bought range rover sport all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+