இவ்வளவு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியது இந்த பிக்பாஸ் பிரபலமா!! நடுரோட்டில் ஓபன் செய்து ரகளை!

பிக்பாஸ் வெற்றியாளரான எல்விஷ் யாதவ் சுமார் ரூ.1.2 கோடியில் புதியதாக மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ளார். மேலும், இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எல்விஷ் யாதவ் வாங்கியுள்ள புதிய மெர்சிடிஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

பிக்பாஸ் ஒடிடி-இன் 2வது சீசனின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ். யூடியூப்பில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமடைந்த எல்விஷ் யாதவ் சமீபத்தில்தான் வெற்றிப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், புத்தம் புதிய மெர்சிடிஸ் கார் ஒன்றை எல்விஷ் யாதவ் வாங்கியுள்ளார்.

elvish yadav buys mercedes e53

இவர் வாங்கியிருக்கும் புதிய மெர்சிடிஸ் கார் ஆனது மெர்சிடிஸ் இ53 ஏஎம்ஜி கேப்ரியோலெட் ஆகும். யூடியூப்பரான எல்விஷ் யாதவிடம் ஏற்கனவே ஏகப்பட்ட லக்சரி கார்கள் உள்ளன. இதனுடன் புதியதாக மெர்சிடிஸ் இ53 கேப்ரியோலெட் காரும் இணைந்துள்ளது. இந்த சொகுசு காருடன் நிற்கும் படத்தை எல்விஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ53 ஏஎம்ஜி கேப்ரியோலெட் காரின் டெல்லி ஆன்-ரோடு விலை ரூ.1.2 கோடியாக உள்ளது. இது மெர்டிசிஸ் இ53 காரின் கூபே வெர்சனை விட ரூ.30 லட்சம் அதிகமாகும். முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் இ53 கேப்ரியோலெட் கார் ஆனது இரு கதவுகளை மட்டுமே கொண்ட 4-இருக்கை லக்சரி செடான் ஆகும்.

elvish yadav buys mercedes e53

இந்த காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 435 பிஎஸ் மற்றும் 520 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஸ்டார்டர் ஜெனரேட்டர் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஜெனரேட்டர் மூலமாக கூடுதலாக 21 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

இந்த இயக்க ஆற்றல்கள் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக காரின் 4 சக்கரங்களுக்கு செல்லும். 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மெர்சிடிஸ் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில், டைனாமிக் செலக்ட் டிரைவிங் மோட்கள் மற்றும் ஏஎம்ஜி-இன் ரைடு கண்ட்ரோல்+ ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

elvish yadav buys mercedes e53

இந்த கேப்ரியோலெட் காரின் கேபினுக்குள் ட்யூயல்-ஸ்க்ரீன் செட்-அப் டேஸ்போர்டில் வழங்கப்படுகிறது. அத்துடன், லெதரால் மூடப்பட்ட 5-ஸ்போக் ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் ஸ்டேரிங் சக்கரத்தை இந்த கார் பெறுகிறது. இந்த காரின் முன் இருக்கைகளில் கழுத்து பகுதிக்கான ஹீட்டர்களும், எதிர்வரும் காற்றை தடுத்து நிறுத்துவதற்கான ஏர்கேப் விண்ட்-ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் சினிமா துறையை சேர்ந்தவர்கள் புத்தம் புதிய பிராண்ட்-நியூ கார்களை வாங்கும் அதேவேளையில், ப்ரீ-ஓவ்ண்டு கார்களை வாங்கவும் விரும்பக்கூடியவர்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால், எல்விஷ் யாதவ் தனது புதிய லக்சரி காரை பிராண்ட்-நியூவாக வாங்கி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Friday, September 22, 2023, 16:22 [IST]
English summary
Bigg boss winner elvish yadav buys mercedes e53 cabriolet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X