பிக்பாஸ் டைட்டில் வென்றவர் செய்ற காரியமா இது!! எல்லாமே விலையுயர்ந்த கார்... வைரல் வீடியோ!

பிக்பாஸ் ஒடிடி சீசன் 2-இன் வெற்றியாளரான எல்விஷ் யாதவ் விலையுயர்ந்த மெர்சிடிஸ் இ53 ஏஎம்ஜி கேப்ரியோலெட் காரில் நெடுஞ்சாலையில் லம்போர்கினி கார் உடன் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதில் வெற்றி பெற்றது எந்த கார்? இந்த பந்தயத்தில் எல்விஷ் யாதவ் பயன்படுத்திய மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலர் பிரபலமாகி உள்ளனர். நடிகர் கமலஹாசன் நடத்தும் தமிழ் பிக்பாஸில் கலந்துக் கொண்டதன் மூலம் ஃபேமஸாகிய பலரை நமக்கு தெரியும். சில நடிகர், நடிகைகள் இந்த ஃபேமஸின் மூலமாக பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். இங்கேயே இப்படியென்றால், இந்தி பிக்பாஸை பற்றி சொல்லவா வேண்டும்.

elvish yadhav in car race

இந்தி மொழியில் பல வருடங்களாக பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. ஒடிடி தளங்களில் மட்டும் ஒளிப்பரப்பு செய்யப்படும் பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியும் 2 சீசன் முடிந்துவிட்டது. பிக்பாஸ் ஒடிடி சீசன்-2 இன் வெற்றியாளரான எல்விஷ் யாதவ் ஒரு யுடியூப் பிரபலமாகும். யுடியூப்பில் வீடியோக்களை பதிவு செய்து பலரது கவனத்தை பெற்றதன் காரணமாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் எல்விஷ் யாதவ் அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பின்பும், எல்விஷ் யாதவ் தனது யுடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, கார் ரேஸில் ஈடுப்படும் வீடியோவை எல்விஷ் யாதவ் இணையத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த பந்தயத்தில், எல்விஷ் யாதவ் மெர்சிடிஸ் இ53 ஏஎம்ஜி என்ற ஆற்றல்மிக்க மாடர்ன் மெர்சிடிஸ் காரை ஓட்டியுள்ளார்.

elvish yadhav in car race

இவருடன் பந்தயத்தில் ஈடுப்பட்ட நபர் எல்விஷ் யாதவை காட்டிலும் ஒருபடி மேலே போய் லம்போர்கினியின் ஹூராகென் என்ற உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காரை பந்தயத்தில் பயன்படுத்தி உள்ளார். இந்த பந்தயம், சமீபத்தில் திறக்கப்பட்ட டெல்லி - மும்பை விரைவுச்சாலையில் நடந்துள்ளது. வீடியோவில், இந்த விரைவுச்சாலை நன்கு பளபளப்பாக காட்சி தருவதை காணலாம்.

இந்த பந்தயத்தில் லம்போர்கினி ஹூராகென் காரை பயன்படுத்திய நபர் இந்த காரை புதியதாக சமீபத்தில்தான் வாங்கியுள்ளார். பந்தயத்தை துவங்கும்முன், இருவரும் தங்களது கார்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பந்தயத்திற்காக தயார் செய்வதை வீடியோவின் துவக்கத்தில் காணலாம். எல்விஷ் யாதவ் தனது இ53 ஏஎம்ஜி காரை ஸ்போர்ட்+ மோடில் வைத்து பந்தயத்தை ஸ்டார்ட் செய்துள்ளார்.

elvish yadhav in car race

அதேபோல், ஹூராகென் டிரைவரும் பந்தயந்திற்கு ஏற்ப பொருத்தமான டிரைவிங் மோடை தேர்வு செய்தார். பந்தயம் துவங்கியதும், எல்விஷ் யாதவ்வின் டிரைவிங் திறமையால் அவரது மெர்சிடிஸ் கார் உடனடியாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. லம்போர்கினி கார் டிரைவர் கொஞ்சம் மெதுவாகவே காரை ஸ்டார்ட் செய்தார். அதுமட்டுமின்றி, பந்தயத்தின்போது சில இடங்களில் எல்விஷ் யாதவ்வுக்கு வேண்டுமென்றே விட்டு கொடுத்தது போல் இருந்தது.

இருப்பினும், முதல் ரவுண்ட்டை ஹூராகென் வென்றது. 2வது ரவுண்ட்டில், இம்முறை லம்போர்கினி கார் டிரைவர் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக செயல்பட ஆரம்பித்தார். இதனால், 2வது ரவுண்டையும் லம்போர்கினி கார் வென்றது. இந்த முடிவை எல்விஷ் யாதவ் உள்பட அங்கிருந்த அனைவரும் ஏற்கனவே எதிர்பார்த்தனர். இருப்பினும், நிஜ உலகில் இப்படிப்பட்ட இரு கார்களுக்கு இடையேயான பந்தயம் எவ்வாறு இருக்கும் என்பதை அறியவே இதனை செய்து பார்த்ததாக வீடியோவில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் பார்க்க அருமையாக உள்ளது, டிரைவர்களும் சிறப்பாக கார்களை ஓட்டினர். என்றாலும், பொது சாலையில் ரேஸ் ஓட்டக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. எக்ஸ்பிரஸ்வே ஆக இருந்தாலும் அதிகப்பட்சமாக 120kmph வேகத்திற்கு மேல் செல்ல கூடாது. ஆனால், இந்த வேகத்தை எல்லாம் இவர்கள் சில வினாடிகளில் கடந்துவிட்டனர். இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுப்பட்டவருக்கு தான் பிக்பாஸ் பட்டத்தை கொடுத்துள்ளனர் எனும்போது வெட்கக்கேடாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 16, 2024, 8:00 [IST]
English summary
Bigg boss winner elvish yadhav involves in dangerous car race
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X