பிக் பாஸ் ஜெயிச்சவங்களா இவங்க! கொஞ்ச வருஷத்துல ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறீட்டாங்க!

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class). சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த இந்த கார், செயல்திறன் மற்றும் சொகுசு வசதிகள் ஆகிய 2 முக்கியமான அம்சங்களும் ஒருங்கிணைந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாக கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இ-க்ளாஸ் திகழ்கிறது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 78.50 லட்ச ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 92.50 லட்ச ரூபாயாக உள்ளது. இவை புது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

Gauahar Khan Buys Mercedes Benz E-Class

இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில், டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 3 டிஸ்ப்ளேக்கள் முக்கியமானதாகும். இதில் ஒன்று 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். மற்றொன்று 14.4 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். பெரும்பாலான கார்களின் டேஷ்போர்டில் இந்த 2 டிஸ்ப்ளேக்கள் மட்டுமே இருக்கும்.

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரின் டேஷ்போர்டில் கூடுதலாக ஒரு டிஸ்ப்ளே இருக்கும். அது முன் பக்க இருக்கையில் அமரும் பயணிக்கான 12.3 இன்ச் ஸ்க்ரீன் ஆகும். இவை தவிர ஆன்லைன் மீட்டிங்குகளில் பங்கேற்பதற்காக கேமரா, 17 ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் இருக்கின்றன.

Gauahar Khan

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், முன் பக்க இருக்கைகளுக்கு மெமரி ஃபங்ஷன், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் 8 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல், 2.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் டீசல் ஆகியவை ஆகும். இந்த 3 இன்ஜிகள் உடனும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் கௌகர் கான் (Gauahar Khan) ஆவார். ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கௌகர் கான் தோன்றி வருகிறார். அத்துடன் 2013ம் ஆண்டில் ஹிந்தி பிக் பாஸ் (Bigg Boss) சீசன் 7-ஐ இவர் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர்களில் ஒருவராக கௌகர் கான் அறியப்படுகிறார். அவர் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரை வாங்கியுள்ள நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கௌகர் கான் தனது குடும்பத்துடன் காரை டெலிவரி எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கௌகர் கான் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார் ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரக்கூடிய ஒரு கார்தான். இதில், சயீஃப் அலி கான் - கரீனா கபூர் கான் (Saif Ali Khan - Kareena Kapoor Khan) தம்பதியினர் மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த வரிசையில் கௌகர் கான் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார், அவருக்கு சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என நாம் நம்பலாம். இவர் பிக் பாஸ் சீசன் 7-ஐ வென்று கிட்டத்தட்ட 11 வருடங்கள் கடந்து விட்டன. தற்போது கௌகர் கான் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் பலரும் சமூக வலை தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 22, 2024, 18:15 [IST]
English summary
Bigg boss winner gauahar khan buys mercedes benz e class luxury sedan all details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+