விஜய் வந்தா கூட இவ்ளோ கூட்டம் கூடுமான்னு தெரியல! பாதுகாப்பு படை புடை சூழ வந்து எல்லாரையும் மிரள விட்டது அவரா!

தமிழகத்தின் பல மாவட்டங்களை மழை தற்போது தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இதற்கு ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) காரணமாக அமைந்துள்ளது. ஆளும்கட்சியான திமுக (DMK) தவிர, எதிர்கட்சியான அதிமுக (ADMK) உள்பட பல்வேறு கட்சிகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. இதில், நடிகர் விஜய் (Vijay) புதிதாக தொடங்கியுள்ள தவெக (TVK) கட்சியும் ஒன்றாகும். ஆனால் தவெக கட்சியின் நிவாரண பொருட்கள் வழங்கல் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெறுவதற்கு பதில், கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இதற்கு விஜய் களத்திற்கு நேரில் வராததுதான் காரணம். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை நேரில் வரவழைத்து விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார். இதனால் விஜய் களத்திற்கு வராமல் 'வொர்க் ஃப்ரம் ஆபிஸ்' (Work From Office) என அரசியல் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

Bigg Boss Winner Munawar Faruqui

இதற்கு விஜய் தரப்போ, விஜய் நேரில் வந்தால் கடுமையான கூட்டம் கூடி விடும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் அசௌகரியங்களை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே விஜய் நேரில் வரவில்லை என விளக்கம் அளித்து வருகிறது. இதில் உண்மை இருக்கிறதா? என்று கேட்டால், கொஞ்சம் உண்மை இருக்கவே செய்கிறது.

ஏனெனில் விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்கள் வரும்போது அவர்களை பார்ப்பதற்கு என்றே தனியாக கூட்டம் கூடி விடும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுடன் அவரால் எந்த அளவிற்கு சகஜமாக கலந்துரையாட முடியும்? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. கடந்த காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நிகழ்ச்சிகளில் இருந்து விஜய் தப்பித்து சென்ற நிகழ்வுகளும் கூட நடந்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Winner Munawar Faruqui Spotted In Range Rover Sport

எனவே விஜய் களத்திற்கு வராததை அவரது தரப்பு நியாயப்படுத்தி பேசி வருகிறது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சமீப ஆண்டுகளாக, திரைப்பட நட்சத்திரங்களை போல், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் போன்றவர்களை காணவும் கூட மிகப்பெரிய கூட்டம் கூடி கொண்டுள்ளது. இதற்கு டிடிஎஃப் வாசனை (TTF Vasan) காண குவிந்த கூட்டம் ஒரு உதாரணம்.

இந்த வரிசையில் முனாவர் ஃபரூக்கி (Munawar Faruqui) எங்கு சென்றாலும் அவரை காண தற்போது பெரும் கூட்டம் கூடி விடுகிறது. இவர் ஹிந்தி பிக் பாஸ் 17 (Bigg Boss 17) நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார். மேலும் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் பாடகர் என முனாவர் ஃபரூக்கிக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இதன் காரணமாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவராக இவர் அறியப்படுகிறார்.

இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பெரும் கூட்டத்திற்கு மத்தியில், அதிக பாதுகாப்புடன் முனாவர் ஃப்ரூக்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. புற்றுநோய் விழிப்புணர்வு மராத்தான் நிகழ்ச்சிக்கு அவர் வந்தபோதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு தற்போது தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதிக பாதுகாப்புடன் அவர் புற்றுநோய் விழிப்புணர்வு மராத்தான் நிகழ்ச்சிக்கு வந்து சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி வர அவர் பயன்படுத்தியது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலையும் (Ex-Showroom Price) சரியாக 1.40 கோடி ரூபாய்தான். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.64 கோடி ரூபாய் வரும்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 3.0 லிட்டர் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 3.0 லிட்டர் டீசல் மைல்டு ஹைப்ரிட் ஆகியவை ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 398 பிஎஸ் மற்றும் 550 என்எம் ஆக உள்ளது.

அதே நேரத்தில் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 351 பிஎஸ் மற்றும் 700 என்எம் ஆக இருக்கிறது. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில், 13.7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் முன் இருக்கைகளில் மசாஜ் அம்சம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) உள்ளிட்ட கார்களுடன், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் போட்டியிட்டு வருகிறது. இந்தியாவில் பிரபலங்கள் பலரும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வைத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2024, 18:25 [IST]
English summary
Bigg boss winner munawar faruqui spotted in range rover sport viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+