அம்பானி, அதானியிடம் இந்த பைக் இருக்குமான்றது கூட சந்தேகம்தான்! எவ்வளவு பெரிய காரியத்தை அசால்ட்டா செய்த நடிகர்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் பைக்குகளுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு டிரையம்ப் பைக்குகளுக்கு பல நாடுகளில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் பைக்குகள் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியவைகளாக உள்ளன. இந்திய மிடில்-கிளாஸ் மக்கள் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் பக்கம் சென்று விடுகின்றனர். டிரையம்ப் பைக்குகள் அவற்றின் அசத்தலான தோற்றத்தின் மூலமாகவும், பவர்ஃபுல்லான என்ஜினின் மூலமாகவும் வெகுவாக ஈர்க்கின்றன.
இதனாலேயே, சினிமா (Cinema) துறையை சேர்ந்தவர்களும் டிரையம்ப் பைக்குகளை வாங்குவதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், பிக்பாஸ் (BiggBoss) போட்டியில் கலந்துக்கொண்ட யூடியூப் (Youtube) பிரபலம் ஒருவர் விலையுயர்ந்த டிரையம்ப் பைக்கை வாங்கி உள்ளார்.

பிக்பாஸில் கலந்துக் கொண்ட இந்த யூடியூப்பரின் பெயர் பஷீர் பாஷி (Basheer Bashi) ஆகும். இவர் தமிழ் பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டவர் கிடையாது; மலையாள பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர் ஆவார். கேரளாவில் யூடியூப் அறிமுகமாகிய காலம் முதலே வீடியோக்களை பதிவேற்றம் செய்துவரும் பஷீர் பாஷி அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலமாக மலையாள பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
இந்தியாவில் பல மொழிகளில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் தொடர் மலையாளத்தில் 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மலையாள பிக்பாஸின் அந்த முதல் சீசனில் கலந்துக் கொண்டவர்களுள் பஷீர் பாஷியும் ஒருவர் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்குள் 84 நாட்கள் தாக்குப்பிடித்தவர், நிகழ்ச்சி முடிவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் 84 நாட்கள் இருந்ததில் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிய பஷீர் பாஷி அதன் மூலமாக மலையாள திரைப்பட வாய்ப்பை பெற்றார். 2023இல் நடிகர் விஜய் யேசுதாஸின் நடிப்பில் திரைக்கு வந்த 'சல்மான் 3டி' திரைப்படத்தில் யூடியூப்பர் பஷீர் பாஷி நடித்திருந்தார். மேலும், இவரது நடிப்பில் 'பிரதிமுகம்' என்கிற புதிய மலையாள திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
இதற்கிடையில்தான், நடிகரும், யூடியூப்பருமான பஷீர் பாஷி புதியதாக டிரையம்ப் பைக் ஒன்றை வாங்கி உள்ளார். டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இவர் வாங்கியிருப்பது 'ராக்கெட் 3 ஸ்டோர்ம் ஜிடி' (Rocket 3 Storm GT) என்கிற மிகவும் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும். இன்னும் சொல்லப்போனால், டிரையம்ப்பில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக விலையுயர்ந்த பைக், ராக்கெட் 3 ஸ்டோர்ம் ஆகும்.
இத்தகைய பைக்கின் ஜிடி வேரியண்ட்டை நடிகர் பஷீர் பாஷி வாங்கியுள்ளார். ஷோரூமில் நண்பர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் சிறிய நிகழ்ச்சி மூலமாக பிராண்ட்-நியூ டிரையம்ப் ராக்கெட் 3 ஸ்டோர்ம் ஜிடி பைக்கை டெலிவிரி பெறுவதை பஷிர் பாஷி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், "இது மோட்டார்சைக்கிள் மட்டும் அல்ல. இது டிரையம்ப் ராக்கெட் 3 ஸ்டோர்ம் ஜிடி - என கனவு நனவானது" என பஷீர் பாஷி குறிப்பிட்டுள்ளார். இவர் இவ்வளவு புகழ்ந்து பேசும் அளவிற்கு இந்த டிரையம்ப் பைக்கில் என்ன உள்ளது என்று பார்த்தால், ஏற்கனவே கூறியதுபோல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த டிரையம்ப் பைக் இதுவாகும்.
ஆர் மற்றும் ஜிடி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் ராக்கெட் 3 ஸ்டோர்ம் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.21.99 லட்சம் மற்றும் ரூ.22.59 லட்சம் ஆக உள்ளன. இதில் ரூ.22.59 லட்சம் மதிப்பிலான ஜிடி வேரியண்ட்டை தான் நடிகர் பஷீர் பாஷி வாங்கி உள்ளார். ராக்கெட் 3 ஸ்டோர்ம் பைக்கின் 2 வேரியண்ட்களிலும் அளவில் பெரியதான 2.5 லிட்டர் ராக்கெட் டிரிபிள் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் ராக்கெட் 3 ஸ்டோர்ம் ஆனது படங்களில் நாம் பார்ப்பதை காட்டிலும் பிரம்மாண்டமான பைக் ஆகும். 2.5 லிட்டர் என்ஜினில் ஒரு பெரிய ஃபார்ச்சூனர் காரையே ஓட வைக்க முடியும். அத்தகைய பவர்ஃபுல்லான என்ஜினை கொண்ட பைக்கை வாங்கியிருப்பதன் மூலம் மலையாள சினிமா உலகில் பஷீர் பாஷியின் பெயர் மேலும் அதிகமாக கவனத்தை பெற ஆரம்பிக்கும்.


Click it and Unblock the Notifications








