பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு! விலையுயர்ந்த பைக் மீது அமர்ந்திருக்கும் பிரபலம்!
பிக்பாஸ் (Biggboss) மூலமாக வட இந்தியாவில் பயங்கர ஃபேமஸ் ஆகி இருப்பவர், காமெடி நடிகர் முனாவர் ஃபரூக்கி (Munawar Faruqui). சினிமாவில் நடிப்பதுடன் விலையுயர்ந்த கார் & பைக்குகளை ஓட்டுவதையும் நடிகர் முனாவர் ஃபரூக்கி மிகவும் விரும்பக்கூடியவர். அந்த வகையில், புதியதாக ஜாவா (Jawa) பைக் ஒன்றை இந்த நடிகர் வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டேண்ட்-அப் காமெடியனான முனாவர் ஃபரூக்கியை பற்றியும், அவர் வாங்கியுள்ள ஜாவா பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமா பிரபலங்கள் என்றாலே அவ்வப்போது புது, புது கார் & பைக்குகளை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக, பாலிவுட் பிரபலங்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருவராவது விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை பார்க்க முடியும். அந்த வரிசையில் தற்போது, இந்தி பிக்பாஸ் டைட்டில் வின்னர் முனாவர் ஃபரூக்கி ஜாவா பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் கலந்துக் கொண்டவர், முனாவர் ஃபரூக்கி. தனது காமெடியான பேச்சுகள் மூலமாகவும், தந்திரமான செயல்பாடுகளின் மூலமாகவும் கடந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக்பாஸில் கலந்துக் கொள்வதற்கு முன்னரே முனாவர் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மூலமாக கவனத்தை பெற்றவர்.
ஏனெனில், இவர் நடிகர் மட்டுமல்ல, ராப் பாடகரும் கூட. முனாவரின் வாழ்வில் நல்லதுகளும், கெட்டதுகளும் மாறி மாறி வந்துள்ளன. அதாவது, இவர் ஒருமுறை ஜெயிலுக்கு கூட சென்று வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஆனால் தற்போது முனாவர் ஃபரூக்கி புதியதாக ஜாவா 42 பாப்பர் பைக்கை வாங்கி இருப்பதை தெரிவித்து இருப்பது ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் ஆகும்.

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸின் இந்த இன்ஸ்டா பதிவில், "ஜாவா உடனான முனாவர் ஃபரூக்கியின் பயணம் ஜாவா 42 பாப்பர் பைக் மூலம் இன்னும் உற்சாகமடைகிறது. 42 பாப்பர், காலத்தால் அழியாத வடிவமைப்பு மற்றும் அதிநவீன செயல்திறனின் சரியான கலவையாகும். இது குறைவான எதையும் ஏற்க மறுப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சவாரி. இந்த பைக் ஒரு புதிய அத்தியாயம் அல்ல - இது ஒரு புதிய கதை!" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் முனாவர் ஃபரூக்கி ஜாவா ஷோரூம் ஒன்றினுள் நுழைவதில் இருந்து துவங்குகிறது. ஷோரூமிற்குள் நுழைந்த முனாவர், அங்கு மூடியிருக்கும் தனது ஜாவா 42 பாப்பர் பைக்கை திறந்து அனைவருக்கும் காண்பித்தார். பின்னர், பைக் மீது அமர்ந்து சில பல போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தவர், பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்து ஸ்பீடோ மீட்டரை ஆன் செய்தார்.

பழமையான தோற்றம் கொண்ட பைக்குகள் தனக்கு பிடித்த காரணத்தினால், ஜாவா 42 பாப்பர் பைக்கை வாங்கியதாக கூறும் முனாவர் ஃபரூக்கி இந்த பைக்கை க்ரோம் ஷேடில் வாங்கியுள்ளார். ஜாவா 42 பாப்பர் பைக் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது. பழைய மாடல் உடன் ஒப்பிடுகையில், புதிய 42 பாப்பர் பைக்கில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை 2024 ஜாவா 42 பாப்பர் பெற்றுள்ளது.
அதேபோல், கலர் ஆப்ஷன்களும் புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஜாவா பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்கள், ட்யூயல் எக்ஸாஸ்ட் குழாய்கள், பார்-எண்ட் மிரர்ஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. ஒரேயொரு இருக்கையை மட்டுமே கொண்ட ஜாவா 42 பாப்பர் பைக்கில் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜாவா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.13 லட்சமாக உள்ளது. ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்திற்கு வந்துவிடும். கேரியரின் உச்சத்தில் இருக்கும் முனாவர் ஃபரூக்கிக்கு ரூ.3 லட்சத்தில் ஒரு பைக்கை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. முனாவரை போலவே அவரது புதிய ஜாவா பைக்கும் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது.


Click it and Unblock the Notifications









