சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

நடிகர் விஜய் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளார். அஜீத் குமாருடன் அவரை ஒப்பிட்டு ரசிகர்கள் காரசாரமாக விவாதம் நடத்தி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்கள் காரணமாக மிக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

இந்தியாவின் இந்த அவல நிலைக்கு காரணம் யார்? என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். போக்குவரத்து விதிமுறைகளை சற்றும் மதிக்காத வாகன ஓட்டிகள்தான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

இதன் ஒரு பகுதியாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இனி விதிகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

இதுதவிர நீதிமன்றங்களும் அவ்வப்போது சாட்டையை சுழற்றி வருகின்றன. டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய ஹெல்மெட் விதியை தமிழகத்தில் மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என காவல் துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

எனவே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த அதிரடி நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த சூழலில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜயை சுற்றி, சர்ச்சை ஒன்று வலம் வர தொடங்கியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் தற்போது ஓரிரு வீடியோக்கள், வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதில், நடிகர் விஜய் பைக் ஓட்டுவது மற்றும் பைக்கில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இயக்குனர் அட்லி - நடிகர் விஜய் கூட்டணியில், பிகில் திரைப்பட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகில் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

இந்த படத்தின் வெறித்தனம் என்ற பாடலுக்காக விஜய் பைக் ஓட்டுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதாக தெரிகிறது. சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் பிகில் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

சரி, இதில் என்ன சர்ச்சை என கேட்கிறீர்களா? வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைக்க மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என பலர் தீவிர முயற்சிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் பயணம் மேற்கொள்ளும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க தீவிர முயற்சி செய்யப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

ஏனெனில் டூவீலர்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களில் அதிகம் பாதிப்பு அடைகின்றனர். இதற்கு அவர்கள் ஹெல்மெட் அணியாததே முக்கியமான காரணமாக உள்ளது. இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோக்களில் நடிகர் விஜய் ஹெல்மெட் அணியவில்லை. தலைக்கவசம் அணியாமல்தான் பைக் ஓட்டியுள்ளார். இது தொடர்பான ஒரு வீடியோவை கீழே காணலாம்.

இதனிடையே பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் போன்ற மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற நடிகர்கள் இதுபோல் நடந்து கொண்டால், அது வாகன ஓட்டிகள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என சமூக வலை தளங்களில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்பது இந்தியாவில் சட்டப்படி தவறு என்பதால், நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்களா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

''இது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு. எனவே இதற்கு முன் அனுமதி வாங்கியிருப்பார்கள். அத்துடன் தகுந்த பாதுகாப்புடன்தான் படப்பிடிப்பு நடத்தப்படும். சாலை போக்குவரத்து விதிகள் இதனை கட்டுப்படுத்தாது'' என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலை தளங்களில் தற்போது அனல் பறக்க நடைபெற்று வருகின்றன.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

முன்னதாக நடிகர் விஜய்க்கு போட்டி என வர்ணிக்கப்படும் நடிகர் அஜீத் குமாரின் படங்களில் அவர் பைக் ஓட்டும் காட்சிகள் அதிகம் இடம்பெறுவது வழக்கம். அஜீத் குமார் கார் ஓட்டும் காட்சிகளையும் அவரது படங்களில் காணலாம். அஜீத் குமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான விஸ்வாசம் திரைப்படம் அதற்கு ஓர் உதாரணம்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

இதில், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது போன்ற விதிகளை கடைபிடித்து நடித்ததற்காக நடிகர் அஜீத் குமாருக்கு காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அஜீத் குமார் போன்று அவரது ரசிகர்களும் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்... தல அஜீத்துடன் ஒப்பிட்டு காரசார விவாதம்... உங்கள் கருத்து என்ன?

தற்போது விஜய் ஹெல்மெட் அணியாதது தொடர்பான விவாதங்களில் இதையும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2019, 13:51 [IST]
English summary
Bigil Shooting: Actor Vijay Rides Bike Without Helmet - Video Goes Viral, Controversy. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+