பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஊரடங்கு உத்தரவால் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் இருந்த குழந்தைக்கு, வாழ்க்கையில் மறக்கவே முடியாத சர்ப்ரைஸ் ஒன்று கிடைத்துள்ளது.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

2020ம் ஆண்டு நம் அனைவருக்கும் மிக மோசமான ஒரு வருடமாக அமைந்துள்ளது. நாம் எதிர்பார்த்தபடி 2020ம் ஆண்டு செல்லவில்லை. கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலின் காரணமாக, நாம் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறோம். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில், இந்தியாவிலும் கோவிட்-19 தற்போது தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்து கொண்டே செல்கிறது. முதலில் கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஆனால் அதன்பின்பும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராததால், தற்போது மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பிறந்த நாள் போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்ற திட்டம் பலரிடமும் இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக அது நடைபெறாமல் போய் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், 5 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று, பீஹார் போலீசார் அந்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

பீஹார் மாநிலத்தின் சாப்ரா என்னும் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி தன் பிறந்த நாளை கொண்டாவில்லை. இது குறித்து பீஹார் மாநிலத்தின் டிஜிபிக்கு (Director General of Police - DGP), அந்த சிறுமியின் தாத்தா தகவல் தெரிவித்துள்ளார். இது தன் பேத்தியின் 5வது பிறந்த நாள் எனவும், ஆனால் அதை கொண்டாடப்போவதில்லை எனவும் அவர் அந்த மெசேஜில் கூறியிருந்தார்.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

இந்த மெசேஜை பெற்ற டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, உடனடியாக அப்பகுதி காவல் துறையினரை தொடர்பு கொண்டார். பின்னர் பரிசு பொருட்கள் மற்றும் கேக்குடன் பிறந்த நாளை கொண்டாட அந்த சிறுமியின் வீட்டிற்கு செல்லும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அதுவும் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஜிப்ஸி மற்றும் மோட்டார்சைக்கிள்களை பலூன்களால் அலங்கரித்து, அந்த சிறுமியின் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில், பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் கான்வாய், தங்கள் மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, திடீரென தங்கள் வீட்டிற்கு வந்ததால், அந்த சிறுமியின் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர்.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அதே சமயத்தில் அந்த சிறுமிக்காக கேக் மற்றும் பல்வேறு பரிசுகளையும் அதிகாரிகள் வாங்கி வந்திருந்தனர். அந்த சிறுமியின் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றதும், அங்கிருந்த ஒரு அதிகாரியை தொலைபேசி மூலம் டிஜிபி அழைத்தார். அந்த சிறுமிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவர் போன் செய்தார்.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஆனால் அந்த குழந்தைக்கோ அங்கே என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. எனவே டிஜிபியுடன் அந்த குழந்தையால் சரியாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி செல்போனை ஸ்பீக்கரில் போட்டு வைத்தார். செல்போனை தொடாமல், டிஜிபியுடன் சிறுமி பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டது. எனினும் குழப்பம் காரணமாக அந்த குழந்தை சரியாக பேசவில்லை.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த காட்சியும் மிகவும் அழகாக இருந்தது. அதேபோல் இந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட வந்த அதிகாரிகள், பாதுகாப்பிற்காக மாஸ்க் மற்றும் க்ளவுஸ் அணிந்திருந்தனர். அத்துடன் அந்த குழந்தையிடம் இருந்து இடைவெளியையும் அவர்கள் கடைபிடித்தனர்.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

குழந்தையின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த வீடியோவை நியூஸ் டைம்ஸ் 24 தங்களது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்திலும், பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாட, பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தாலும், பிறந்த நாட்களை ஒத்தி போட முடியாது. அதுவும் குழந்தைகளின் பிறந்த நாட்கள் எப்போதுமே மிகவும் ஸ்பெஷல் ஆனவை. இதையொட்டி குழந்தைகளுக்காக பல்வேறு மாநில காவல் துறையினர் எடுத்து வரும் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 6, 2020, 13:43 [IST]
English summary
Bihar DGP Sent Police Convoy To Celebrate Birthday Of A Child Amid COVID-19 Lockdown: Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+