இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

அதிக அபராதத்தை காரணம்காட்டி வாகன ஓட்டிகளிடம் இருந்து கையூட்டு பெரும் போலீஸார்கள் மத்தியில், இங்கு ஓர் காவல்துறையினர் முற்றிலும் வித்தியாசமான முறையில் அபராதத்தை விதிக்க உள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது அமலுக்கு வந்த நாள் முதல் நாடே பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. இதனை, அன்றாடம் வெளிவரும் செய்திகளைப் பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். ஏனெனில், போலீஸார் இதுவரை இல்லாத அளவிலான அபராத தொகையை விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற்று வருகின்றனர்.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

அதேசமயம், ஒரு சில போலீஸார் இதனைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் இருந்து கையூட்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாகவே, ஒரு சில மாநிலங்கள் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

அந்தவகையில், பாஜக-வினர் ஆளும் குஜராத் அரசே பிரதமர் மோடி அரசின் புதிய அபராத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மாநில மக்களிடம் அதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக குறைவான அபராதத்தையே வசூலிக்க இருப்பதாக அறிவித்தது.

அதன்படி, புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் ரூ. 1,000 அபராதமாக வசூலிக்கப்படுகின்றது. ஆனால், குஜராத்தில் அது 500 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

அதேபோன்று சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதற்கு வசூலிக்கப்படும் ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டு ரூ. 500ஆக வசூலிக்கப்பட உள்ளது. தொடர்ந்து டிரைவிங் லைசென்ஸ், காப்பீடு, ரேஷ் டிரைவிங் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு மத்திய அரசு அறிமுகம் செய்த அபராதத்தைக் காட்டிலும் குறைவாகவே அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

இதேபோன்ற, ஓர் அதிரடி நடவடிக்கையில்தான் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள உள்ளன.

இந்நிலையில், பீஹார் மாநிலத்தின் சட்டவுனி பகுதி போலீஸார் ஓர் தரமான அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், போக்கவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிட இருப்பதாக கூறப்படுகின்றது.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

அதேசமயம், அவர்கள் செய்த தவறை உணர்த்தும் விதமாக, தலைக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட்டும், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு காப்பீட்டையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

இதுகுறித்து சட்டவுனி காவல்நிலைய ஆய்வாளர் எஸ்எச்ஓ முகேஷ் சந்திர குன்வர் கூறியாதவது, "வாகன தணிக்கையை ஹெல்மட் விற்பனையகம் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்டவை இருக்கும் அருகில் மேற்கொள்கின்றோம். அப்போது, மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதனை உடனடியாக சம்பவ இடத்திலேயே வாங்கி கொடுத்துவிடுகின்றோம்" என்றார்.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

தொடர்ந்து பேசிய அவர், "எங்களின் இத்தகைய நடவடிக்கையால், அவர்கள் அடுத்த முறை அதே தவறில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகின்றது. அத்துடன், அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கும் வகையில் அது அமைகின்றது" என்று தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

ஆனால், மது அருந்திவிட்டு மற்றும் வாகனத்தை மிக மோசமாக இயக்கினால் அவர்களுக்கு சட்டத்திட்டத்தின் கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. அதேசமயம், பீஹார் மாநிலத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை வழங்கப்பட உள்ளது.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

போலீஸார் இவ்வாறு வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளை கையாள்வது முதல் முறையல்ல. ஏனென்றால், இதற்கு முன்னதாக கூட தமிழக போலீஸார், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று பாடம் புகட்டினர். அதேபோன்று, கேரள போலீஸார் லட்டு வழங்கி சிறப்பித்தனர்.

இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா..? மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்!

விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் பல காவல்துறையினர் மத்தியில் பீஹார் மாநில போலீஸார் மேற்கொள்ளவிருக்கும் இத்தகைய சிறப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறத் தொடங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2019, 12:33 [IST]
English summary
Bihar Police Finds Unique Way of Fining Traffic Violators. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+