கட்சியை இழுத்து மூடிய மற்றொரு அரசியல்வாதி! வைத்திருக்கும் அதிக விலையுயர்ந்த கார் இதுதான்!
அரசியலில் புதிய கட்சியை துவங்கும் எல்லாரும் வெற்றி பெறுவதில்லை. இதற்கும் நடிகர் விஜய் துவங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என கூறிக் கொள்கிறேன். ஆனால், சிலர் துவங்கும் அரசியல் கட்சிகள் கடைசி வரையில் வெற்றி பெறாமலேயே போய்விடுகிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை வேறொரு அரசியல் கட்சி உடன் இணைத்து, தன்னையும் அந்த கட்சி உடன் இணைத்துக் கொண்டார். இவ்வாறான துரதிர்ஷ்டவசமான அரசியல் நிகழ்வுகள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடக்கின்றன.
அந்த வகையில், 2016ஆம் ஆண்டில் ஆசை ஆசையாய் துவங்கிய சொந்த அரசியல் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து பரிதாபமாக நிற்கிறார், பீகார் அரசியல்வாதி பப்பு யாதவ் (Pappu Yadav). இது இவரது உண்மையான பெயர் கிடையாது. நிஜ பெயர் ராஜேஷ் ரஞ்சன். பீகாரின் புர்னியா மாவட்டத்தில் பிறந்தவரான ராஜேஷ் ரஞ்சனுக்கு சொந்த ஊரில் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

எந்த அளவிற்கு என்றால், 1991, 1996, 1999, 2004, 2014 மற்றும் 2024 என 6 முறை நாடளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், பப்பு யாதவ் ஆவார். கடந்த 5 வருடங்களாக எம்பி ஆக இல்லாமல் இருந்த பப்பு யாதவ், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆக உள்ளார். ஆரம்பக் காலக்கட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லாமல் சுயேட்சையாக நின்று எம்பி ஆக பாராளுமன்றம் சென்றவர்.
அதன்பின், மாநில கட்சிகளின் இணைந்த பப்பு யாதவ் கடந்த 2016 டிசம்பரில் ஜான் அதிகர் என்கிற கட்சியை துவங்கினார். ஆனால், 8 வருடங்களில் கட்சியின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரஸ் உடன் தனது கட்சியை இணைத்த பின்னரே தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகினார். இந்த பீகாரி அரசியல்வாதியிடம் உள்ள கார்களை பற்றி தான் இனி பார்க்க போகிறோம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): பப்பு யாதவ்வின் முதல் வாகனம் இதுவாகும். அதாவது, ஓல்டு ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரை இவர் வாங்கி பல வருடங்களாகி விட்டன. இருப்பினும், அப்போதே ஃபார்ச்சூனரின் விலை ரூ.38 லட்சமாக உள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 171 எச்பி மற்றும் 343 என்.எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): ஸ்கார்பியோ கார் ஒன்றையும் நீண்ட காலமாக பப்பு யாதவ் பயன்படுத்தி வருகிறார். இந்திய மார்க்கெட்டில் மிகுந்த வெற்றி பெற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பப்பு யாதவ் வாங்கிய சமயத்தில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. அதிகப்பட்சமாக 140 பிஎஸ் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster): பப்பு யாதவ்வின் லேட்டஸ்ட் கார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த எம்ஜி கார் இதுவாகும். இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. சிங்கிள் டர்போ அல்லது டபுள் டர்போ ஆப்ஷனில் கிடைக்கும் இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டாடா சஃபாரி (Tata Safari): பப்பு யாதவ்விடம் பழைய சஃபாரி கார் ஒன்றும் உள்ளது. டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் காராக தற்சமயம் சஃபாரி விளங்குகிறது. சஃபாரியில் பொருத்தப்படும் 2.2 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 138 எச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட 30 வருடங்களாக அரசியல் வாழ்வில் பலமுறை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டவரிடம் வெறும் 4 கார்கள் மட்டுமே உள்ளன. அதிலிலும், இவை நான்கையும் விலையுயர்ந்த கார்கள் என சொல்ல முடியாது. இது பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, பப்பு யாதவ்விடம் இருக்கும் அதிகப்பட்ச விலையுயர்ந்த கார் எம்ஜி க்ளோஸ்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications
