கூட ஆள் போயிட்டு இருக்கும்போதே இப்படியா! வீடியோவை பார்த்த பசங்க எல்லாரும் ஒரு நிமிஷம் கெறங்கி போயிட்டாங்க!

"இணையத்துல இந்த பொண்ணுங்க என்ன வீடியோ போட்டாலும் வைரலாயிடுதுப்பா" என ஆண்களை புலம்பச் செய்திருக்கின்றார் பீஹாரைச் சேர்ந்த ஓர் இளம் பெண். இவர் சமீபத்தில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வெளியிட்ட வீடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் ரீச்சை இணையத்தில் பெற்றிருக்கின்றது. அப்படி என்ன அவர் செய்தார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பொதுவாக வாகனம் சார்ந்து என்ன செயலை செய்தாலும் அதனை விதிமீறலாக எடுத்துக் கொள்ளும் காவல்துறை அதற்குரிய தண்டனையை உடனடியாக உரிய நபர்களுக்கும் வழங்கிவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் காவலர்கள் சிலரே, இளம் பெண் செய்த செயலை ரசிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Woman creates reels on moving bike

அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கின்றீர்கள். அந்த இளம் பெண் இருசக்கர வாகனத்தில் பின் பக்கத்தில் அமர்ந்தபடி ரீல்ஸ் செய்திருக்கின்றார். ஃப்ளையிங் கிஸ் கொடுப்பதைப் போன்ற ரீல்ஸையே எடுத்து அவர் இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த ரீல்ஸ் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இளம் பெண்ணின் இந்த செயலுக்கு இணைய வாசிகள் மத்தியில் வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என இரண்டும் ஒரு சேர கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இளம் பெண்ணின் க்யூட்டான செய்கையை ரசித்த இளைஞர்கள் அதை லைக் செய்து, பின்னர் கமெண்டாக ஹார்ட்-இன் சிம்பளை பதிவிட்டு இருக்கின்றனர்.

Women giving flying kiss on moving bike

அதேநேரத்தில், மற்றொரு பக்கம் வேறு சிலர் நெட்டிசன்கள் இளம் பெண் செய்த தவறை சுட்டிக்காட்டி அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என காட்டமாக தெரிவித்து வருகின்றனர். ஆமாங்க, இந்த இளம் பெண் செய்தது க்யூட்டாக இருந்தாலும், அவர் தலைக் கவசம் அணியவில்லை.

மேலும், இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் நம்பர் பிளேட்டும் பொருத்தப்படவில்லை. இதுபோன்ற விதிமீறலிலேயே அவர் ஈடுபட்டு இருக்கின்றார். வாகன ஸ்டண்ட் போன்றவற்றை அவர் செய்யவில்லை என்றாலும், வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் மற்றும் தலைக் கவசம் அணியாமல் பயணித்திருப்பது வாகன போக்குவரத்து சட்டத்தின்படி தண்டனைக்குரிய செயல் ஆகும்.

Moving bike women flying kiss

இதனால்தான் அந்த இளம் பெண்ணிற்கு எதிராக ஒரு சிலர் போர் கொடி தூக்கி இருக்கின்றனர். சமீப காலமாக காவல்துறை இணையத்தில் வைரலாகும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இதுமாதிரியான வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், இந்த இளம் பெண் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகபட்ச நடவடிக்கையாக அவர் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் அல்லது அபராதம் போன்ற நடவடிக்கையையே காவல்துறை எடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இணையத்தில் டிரெண்டாவதற்காக இளைஞர்கள் சிலர் குரங்கு சேட்டைகளை எல்லாம் செய்து வருகின்றனர். பலர் தங்களின் தனித் திறமையின் வாயிலாக இணைய உலக கவர்ந்துக் கொண்டிருக்கையில் ஒருசாரார் இதுபோன்று வீணான செயல்களில் ஈடுபட்டு சிக்கலில் சிக்கி வருகின்றனர்.

Woman creates reels

இந்த நிலையிலேயே மற்றவர்களையும் கிளர்ச்சி அடையச் செய்யக் கூடிய ஓர் வீடியோவாக இளம் பெண்ணின் இரண்டு சக்கர வாகனம் சார்ந்த ரீல்ஸ் வீடியோ அமைந்திருக்கின்றது. அதாவது, மற்றவர்களைச் செய்யத் தூண்டும் வகையில் இளம் பெண்ணின் செயல் அமைந்திருக்கின்றது. எனவேதான் பலரின் கோரிக்கையாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஸ்டண்ட்டில் ஈடுபடுவது வாகன போக்குவரத்து சட்டத்தின்படி குற்றச் செயல் ஆகும். இந்த விதிமீறலுக்கு, விதிமீறலின் தன்மையைப் பொருத்து அபராதம் வசூலிக்கப்படும். சில விதிமீறல்களுக்கு வாகனத்தை பறிமுதல் செய்தல் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டவருக்கு சிறைத் தண்டனை வழங்குதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, டிடிஎஃப் வாசன் சம்பவத்தை கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 4, 2024, 18:39 [IST]
English summary
Bihari young women giving flying kiss on moving bike here is reel video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X