ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் குடுக்கும் வேகன் ஆர்! எப்படினு தெரியுமா? காரை தயாரிச்ச மாருதியே இதை நம்பாது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, வேகன் ஆர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் இன்ஜின் இதைக்காட்டிலும் குறைவான மைலேஜை மட்டுமே வழங்க கூடியதாக உள்ளது.
அப்படி இருக்கும்போது ஒருவர் தன்னுடைய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை, ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடிய வகையில் மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர், மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்தியர்கள் பொதுவாக புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். தங்களிடம் உள்ள பொருட்களை மட்டும் வைத்து கொண்டு வித்தியாசமான ஒரு தயாரிப்பை உருவாக்கி விடுவார்கள். இதை 'ஜூகாத்' (Jugaad) என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு ஜூகாத்தான் தற்போது நாம் பேசி கொண்டுள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர்.
இந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், பைக் மூலமாக இயங்குகிறது. இதன் உரிமையாளர் ஒரு முழுமையான பைக்க, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பின் பகுதியில் பொருத்தி விட்டார். இதற்கு ஏதுவாக காரின் பின் பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு விட்டன.

பின்னர் பைக்கின் இன்ஜினையும், காரின் டயரையும் பெல்ட் மூலமாக அவர் இணைத்து விட்டார். இதன் மூலம் பைக்கின் இன்ஜின் வேலை செய்யும்போது, அது பெல்ட்டை சுழற்றுகிறது. அந்த பெல்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் டயரை இயக்குகிறது. நாம் பேசி கொண்டுள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் இப்படிதான் இயங்குகிறது.
இந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் (Viral Video) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை? என்பது தெரியவில்லை. இருப்பினும் பைக்கின் இன்ஜின் மூலமாக இயங்குவதால், இதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் ஒருவரின் திறமையை வெளி உலகிற்கு காட்டுகின்றன. எனவே இத்தகைய கண்டுபிடிப்புகளை நாம் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இத்தகைய வாகனங்களை சாலையில் இயக்குவது ஆபத்தானது. ஏனெனில் போதுமான அளவிற்கு பாதுகாப்பு இருக்காது.
ஆனால் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறமை வாய்ந்த பலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்களை பற்றிய பல்வேறு செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமே வெளியிட்டுள்ளது. இத்தகைய திறமை வாய்ந்த நபர்களை கண்டறிந்து அரசு ஊக்குவித்தால், பாதுகாப்பான பல்வேறு புதிய தயாரிப்புகள் நமக்கு கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








